Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-41

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-41
----- 
சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
---
அறிவும் உடம்பும் சமச்சீராக வளரவேண்டும்.இரும்பைப்போன்ற நரம்புகளும் கூர்ந்த அறிவும் இருந்தால் உலகமே உன் காலடியில் இருக்கும்.
எண்ணெய் மற்றும் காரப்பொருட்களை சாப்பிடுவது நல்லதல்ல, பூரியைவிட சப்பாத்தி நல்லது. மீன்,இறைச்சி,புதிய காய்கறிகளை சாப்பிடு.இனிப்பை குறைத்துக்கொள்.
---
உனக்குள் அளவற்ற ஆற்றலும்,அளவற்ற அறிவும்,வெல்ல முடியாத சக்தியும் இருக்கிறது என்று நீயும் நினைப்பாயானால்,அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்.
----
பாவிகள்.துயரில் உழல்பவர்கள், ஏழைகள், சம்சார தீயில் துடிப்பவர்கள், வழி தவறியவர்கள் இவர்களின் மோட்சத்திற்கு, மேன்மைக்குப் பாடுபடாமல் நாமும் ஒதுங்கிக்கொண்டால் அவர்களுக்காக வேறு யார்தான் கவலைப்படுவார்கள்?
--
இந்த உலகின் துன்பங்களை நீக்குவதற்கான ஆயிரம் பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நான் நிச்சயம் பிறப்பேன்.அதனால் யாராவது ஒருவரின் துயரம் சிறிதளவு துடைக்கப்படுமானால்கூட,நான் அதை செய்வேன்.
--
நாம் நூல்களைப் படிக்கலாம், சொற்பொழிவுகள் கேட்கலாம், பெரிதாகப் பேசலாம் – ஆனால் அனுபவம் என்ற ஒன்று உள்ளதே, அது ஒன்று தான் ஆசிரியர், கண்ணைத் திறந்து விடுகின்ற ஒன்று. உள்ளபடியே இருப்பதுதான் மிகச் சிறந்தது. நாம் கற்றுக் கொண்டேயிருக்கிறோம், புன்னகைகளின் வழியாகவும், கண்ணீர்த்துளிகளின் வழியாகவும் கற்றுக் கொண்டேயிருக்கிறோம்.
---
எந்தவொரு மகத்தான பணியும் தியாகம் இல்லாமல் நடந்ததில்லை. இதயத்தை அப்படியே பறித்தெடுத்து ரத்தம் சொட்டச் சொட்ட பலிபீடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகே உலகில் மகத்தான காரியங்கள் ஆற்றப்பட்டுள்ளன”.
---
இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்.ஆகவே எழுந்திருங்கள் விழித்துக்கொள்ளுங்கள்.
---
நாம் இனத்தால், மொழியால், ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நமது மதமாகும். அது தான் நமது பொதுவான அடித்தளம்.
---
#சுவாமிவிவேகானந்தர (#வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment