Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 21

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 21
----
இந்தியாவின் புனித மண்ணில்தான் சீதை சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களில் தான் அத்தகைய ஒழுக்கம் சேவை மனப்பான்மை அன்பு கருணை அகமலர்ச்சி, பக்தி இவற்றைக் காண முடியும். உலகில் வேறு எங்குமே இப்படி நான் பார்க்கவில்லை 
---
சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனைவருக்கும் உண்மைக் கல்வியை அளிப்பதே நமது கடமை அந்தக் கல்வி மூலமாக நல்லது எது கெட்டது எது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், தாங்களாகவே கெட்டதை விலக்கிவிடுவார்கள். அதன் பிறகு சமுதாயத்தில் வலிந்து எதையும் நிறுவவோ அழிக்கவோ வேண்டிய தில்லை.
----
மனம் பிரம்மத்தில் மூழ்கும் போது முதலில் இந்த உலகம் எண்ணமயமாகத் தெரியும்.பிறகு எல்லாமே ஆழ்ந்த ஓங்காரத்திற்குள் ஒடுங்கும்.பிறகு அதுவும் கேட்காமல் போய்விடும் அது இருக்கிறதா இல்லையா என்று தோன்றும் இதுதான் அனாதி நாதம் பின்னர் மனம் சுத்தப் பிரம்மத்தில் ஒடுங்கிவிடும் அவ்வளவுதான் எல்லாம் அமைதி!
----
சொல் பவற்றிற்கெல்லாம் முட்டாள்போல் தலையை ஆட்டாதே. நான் சொன்னாலும் நம்பாதே. முதலில் புரிந்துகொண்டு பின்னர் ஏற்றுக்கொள்.
---
உயிர்களுக்குச் செய்கின்ற சேவையை விடப் பெரிய தர்மம் எதுவுமில்லை. உண்மையாக இந்தத் தர்மம் செய்யப் படுமானால் சம்சாரத்தளை எளிதில் உடைந்து விடும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் முக்தி கிடைத்துவிடும்.
----
இந்த உலகின் துன்பங்களை நீக்குவதற்காக ஆயிரம் பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நான் நிச்சயம் பிறப்பேன் அதனால் யாராவது ஒருவரின் துயரம் சிறிதளவு துடைக்கப் படுமானால்கூட நான் அதைச் செய்வேன் தனக்கு மட்டுமே முக்தி கிடைக்கப் பாடுபடுவதால் என்ன பயன் என்று தோன்றுகிறது.
---
உண்மையான துறவியரே இல்லறத்தாரின் வழிகாட்டிகள். துறவியரின் உபதேசத்தாலும் ஞான ஒளி யாலும்தான் இல்லறத்தார் வாழ்கைப் போரில் பல முறை வெற்றி முரசு கொட்டியிருக்கிறார்கள்.
-----
பலரது நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் துறவி பிறக்கிறான் துறவை மேற்கொண்டு இந்த லட்சியத்தை மறப்பவனின் வாழ்க்கை முற்றிலும் வீண் .
---
எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் பிறரையும் விழிக்க வையுங்கள் இறப்பதற்கு முன் மனித வாழ்வின் நிறைவைப் பெறுங்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள்
---
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment