Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-2

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-2
-----
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் 
-----
‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
----
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
-
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
-
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
-
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
-
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
-
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
-
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
-
🌿 சுவாமி விவேகானந்தர் (வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment