Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் புதிய மதப்பிரிவை உருவாக்க போகிறாரா?

சுவாமி விவேகானந்தர் புதிய மதப்பிரிவை உருவாக்க போகிறாரா?
---
சீடர்..சுவாமிஜி,உங்கள் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.(ஸ்ரீராமகிருஷ்ணருக்காக விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்)ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து அவர் பெயரால் ஒரு மதப்பிரிவை உண்டாக்குகிறீர்களோ என்று எனக்கு சிலவேளைகளில் தோன்றுகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் சேர்ந்தவர் அல்ல,அவர் சைவம்,வைணவம்,சாக்தம்,முகமதியமதம்,கிறிஸ்தவம் ஆகிய அனைத்திற்கும் மரியாதை அளிப்பது அவரது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
--.
சுவாமிஜி..எங்களுக்கும் எல்லா மதங்களிடமும் அப்படிப்பட்ட மரியாதை இல்லையென்பதா உன் எண்ணம். நீ என் சொற்பொழிகளை நிச்சயமாக படித்திருக்க வேண்டும்.அதில் எங்காவது நான் ஸ்ரீராமகிருஷ்ணரை மையாமாகவைத்து எதையாவது உருவாக்கியிருக்கிறேனா? கலப்பற்ற உபநிடத மதத்தையே நான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கிறேன.
கணக்கில் அங்காத மதப்பிரிவுகள் அனைத்துமே ஒவ்வொரு பாதை தான். ஏற்கனவே பிரிவுகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மற்றுமொரு மதப்பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை.
--
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 - அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment