Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-32

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-32
----
ஆன்மாவினால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது மதத்திற்கு மிகவும் முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உண்டென்றால், அது நான் பலவினமானவர்கள் என்று சொல்வதுதான்.
----
கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை என்று வேதாந்தம் சொல்லுகிறது.உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளளேயே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக்கொண்டிருக்கிறாய். மேலும், எல்லா விதமான கற்பனைப் பிதற்றல்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறாய்.
----
மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளாகும்.எல்லா விலங்குகளுங்கூடத் தெய்வத்தின் கோயில்கள் தாம். ஆனால் மனிதனே இவற்றுள் மேலானவன் . கடவுளை நான் அத்தகைய மனித கோவிலில் வழிபட முடியவில்லை என்றால், வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.
----
சமயசாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை; அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது நல்லவனாகவே இருந்து நன்மை செய்வதுதான் சமயசாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்.
----
ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன்கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்
-----
.எல்லையில்லாத சக்தி, சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி விரிந்து பரந்து கொண்டே இருக்கிறது. இதுதான் மனிதனுடைய வரலாறு சமயத்தின் வரலாறு, நாகரிகத்தின் வரலாறு, முன்னேற்றத்தின் வரலாறு ஆகிய அனைத்துமாகும்.
----
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது.ஒருவன் இங்கேயே இப்போதே, இன்பத்தைத் பெற வேண்டும். இப்படிபட்ட இன்பத்தைத் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.
-----
சுவாமி விவேகானந்தர்
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு(900 3767 303)

No comments:

Post a Comment