சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-29
---
மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துக் சிறிதளவு நினைப்பதுங்கூடத் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.
---
எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கும் உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள் அப்படி இல்லாவிட்டால் இந்த மரம் கல் முதலியவற்றுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.
----
என் மகனே! மரணம் நேரு வதைத் தடுப்பதற்கில்லை என்னால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப் போகிற பயன்என்ன? வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதை விடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்துபோவது மிகவும் நல்லது.
-----
கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம்.உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் நாட்டின் சுமை முழுவதும் உங்களின் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும் உலகத்தின் கதிமோட்சத்திற் காகவும் பணியாற்றுங்கள்
----
வேதாந்தத்தின் ஒளியையும் வாழ்க்கை முறைகளையும் வீட்டுக்கு வீடு எடுத்துச் செல்லுங்கள், ஒவ்வொருவரிடமும் மறைந்திருக்கும் தெய்விகத் தன்மையை அதன் மூலமாக வெளிப்படுத்துங்கள்.
----
உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம்.
---
காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும் இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
----
இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நவீனத்தலை முறையைச் சேர்ந்தவர்கள் ஆகிய உங்களிடம்தான் என் நம்பிக்கை இருக்கிறது. இவர்களிடமிருந்தே என் தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள். நான் என் கருத்தை வகுத்து அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் இந்தக் கருத்துக்கள் பரவும் வரை யிலும் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்த அரிய கருத்துக் களைப் பரப்பிப்கொண்டே செல்வார்கள்.
-----
தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும் அதன் பிறகு தான்ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
-----
(சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:
Post a Comment