Saturday, 24 September 2016

#வேதங்கள்

#வேதங்கள்
-----
#வேதங்கள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
---
� கர்ம காண்டம் பலவிதமான யாகங்களையும் சடங்குகளையும்பற்றிக் கூறுகிறது. தற்காலத்தில் அவற்றுள் பலவும் வழக்கத்தில் இல்லை.
---
� வேதங்களில் ஆன்மீக உபதேசங்கள் அடங்கிய பகுதியான உபநிடதங்கள் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகிறது.
---
துவைதி, விசிஷ்டாத்வைதி, அத்வைதி என்ற வேறுபாடின்றி, நமது ஆச்சாரியர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இவற்றை மிகவுயர்ந்த பிரமாணமாக ஒப்புக் கொள்கின்றனர்.
----
� எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் உபநிடதங்களையே தங்கள் பிராமாண சாஸ்திரமாகக் கொள்ள வேண்டும்.
அப்படி ஏற்றுக் கொள்ளாத எந்தப் பிரிவும் வைதீகத்திற்குப் புறம்பாகி விடுகிறது. எனவே தற்காலத்தில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களை ஒரு பெயர்கொண்டு அழைக்கலாமெனில் அது ஒருவேளை வேதாந்தி அல்லது வைதீகர் என்பதாகத்தான் இருக்கும்.
இவற்றுள் எதை வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
----
� வேதாந்தக் தத்துவம் அல்லது வேதாந்தம் என்ற வார்த்தைகளை இந்தப் பொருளில் தான் நான் பயன்படுத்துகிறேன்.
----
� இந்தக் கருத்தை இன்னும் சிறிது தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் சமீப காலங்களில் வேதாந்தத் தத்துவத்தின் அத்வைத நெறியைக் குறிக்கவே வேதாந்தம் என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்துகின்றனர், ஆனால் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பல்வேறு தத்துவப் பிரிவுகளுள் அத்வைதமும் ஒன்று,
---
� விசிஷ்டாத்வைதிகளும் அத்வைதிகளைப் போலவே உபநிடதங்களைப் போற்றுகின்றனர்; அத்வைதியைப்போல் வேதாந்தத்தையே பிரமாண சாஸ்திரமாகக் கொண்டுள்ளனர். துவைதிகளும் அப்படியே. அவ்வாறே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும்
----
#புராணங்களும் #ஸ்மிருதிகளும் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களையே பின்பற்ற வேண்டும், ஸ்மிருதியை விலக்கி விட வேண்டும் என்பது நியதி.
-----
� வேதங்களின் சில பகுதிகள் ஒரு காலத்திலும் பிற பகுதிகள் வேறு காலத்திலும் எழுதப்பட்டதாக ஒப்புக்கொள்ள இந்துக்கள் தயாராக இல்லை. அவை ஒரே சமயத்தில் உண்டாக்கப்பட்டவை என்ற தங்கள் கருத்தையே அவர்கள் நம்புகிறார்கள். வேறு விதமாகச் சொல்வதானால் அவை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை, எப்போதும் இறைவனின் திருவுள்ளத்தில் அவை இருக்கின்றன என்பதே அவர்கள் கருத்து.
----
� வேதாந்தம் என்பது இந்தியாவிலுள்ள துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய அனைத்தையும் தன்னுள் கொண்டதாக இருக்கிறது. வேதாந்தம் என்ற சொல்லால் இதையே நான் குறிப்பிடுகிறேன்.
----
� பௌத்தம், சமணம் போன்றவற்றின் சில பகுதிகளைக் கூட, அவர்கள் விரும்பினால் நாம் அதற்குள் இடம் கொடுக்கலாம். ஏனெனில் நம் இதயம் அதற்குப் போதுமான விசாலமானதாக இருக்கிறது. நாம் தயாராகத்தான் இருக்கிறோம்,
----
. தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் பௌத்தத்தின் சாரம் முழுவதும் உபநிடதங்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். ஏன் அவர்களின் நல்லொழுக்கக்கோட்பாடுகள், அற்புதமானவை, மகத்தானவை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே, அந்த நல்லொழுக்கக் கோட்பாடுகள் கூட ஏதோவோர் உபநிடதத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதைக் காணலாம். அவ்வாறே, சில விசித்திரக் கொள்கைகள் தவிர சமணர்களின் சிறந்த கோட்பாடுகள் அனைத்தும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டவையே.
----
� தகுந்த ஆதாரம் எதுவும் இன்றியே, சில வேளைகளில், உபநிடதங்களில் பக்திக் கருத்துக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் சொல்வது முற்றிலும் தவறென்பது உபநிடதங்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஒவ்வோர் உபநிடதத்திலும் பக்திக்கருத்துக்கள் வேண்டிய அளவு உள்ளது .நீங்கள் சற்று தேடிப்பார்க்க வேண்டும், அவ்வளவுதான்.
-----
� இந்த உபநிடதங்களே நமது சாஸ்திரங்கள். இவை பலவாறாக விளக்கப்பட்டுள்ளன..புராண இலக்கியங்கள் வேதாந்தத்திலிருந்து முரண்படுமானால் புராணங்கள் தான் வழிவிட வேண்டும் .ஆனால் இன்று நடைமுறையில் நாம் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு புராணங்களையும் பத்துப் பங்கு மட்டுமே வைதீக முறைகளையும் பின்பற்றி வருகிறோம்.
------
� மிகவும் முரணான பல பழக்கவழக்கங்கள் நம்மிடையே நிலவுகின்றன. மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள். எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான்.
----
� அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான் அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். அவன் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை அவற்றை விட்டுவிட்டால் அவனுக்கு எவ்விதத் தீங்கும்நேரிடாது; மாறாக தான் ஒரு சிறந்த மனிதனாவதற்கே அது துணை செய்யும் .
-----
#சுவாமிவிவேகானந்தர்
-----
� (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment