Saturday, 24 September 2016

மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.


மதத்தை பரப்புவது என்றாடீல ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது. நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா?
----சுவாமி விவேகானந்தர்

உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்தியாவில் இந்தவிதமான மந்தநிலை நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது. எனவே வேதவேதாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிய மொழியில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லவேண்டும். ஒழுக்கம்,நன்னடத்தை,கல்வி முதலியவற்றை அளித்து அனைவரையும் பிராமணர்களின் நிலைக்கு உயர்த்தவேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?
----
சுவாமி விவேகானந்தர்
---
சுவாமி விவேகானந்தர்..உங்களை நான் நேசிக்கிறேன்.ஆனால் பிறரது நன்மைக்காக வேலைசெய்துசெய்து நீங்கள் இறந்துபோவதையே விரும்புகிறேன்.
--
சீடன்.. நாங்கள் செத்துபோனால் எங்களை நம்பி வாழ்பவர்களின் கதி என்ன ஆவது?
---
சுவாமிஜி..நீ உன் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்யத்தயாரானால், உன்னை சார்ந்தவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக வழிசெய்வார். உன் வாசற்படியில் இறைவனே பிச்சைக்காரன் வடிவில் வந்து நிற்கிறான் அவனுக்கு முதலில் சேவை செய்.வாழ்க்கை தான் எத்தனை நாள்! நீ இந்த உலகிற்கு வந்துள்ளாய்.ஓர் அடையாளத்தை விட்டுச்செல்.இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும்,கற்களுக்கும் என்ன வித்தியாசம்?அவையும் தோன்றுகின்றன,வாழ்கின்றன,சாகின்றன.அதுபோல பிறந்து சாகவா விரும்புகிறாய்?
---சுவாமி விவேகானந்தர்
----
வாட்ஸ் அப் குழு 9003767303

No comments:

Post a Comment