சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள் -பகுதி-8
----
மாடுமேய்ப்பவனும் யோகியும்.
-----
யோகி ஒருவர் இருந்தார்.அவர் மட்டும் நதிக்கரையில் ஏகாந்தமான இடத்தில் தவம் இயற்றி வந்தார்.
---
அங்கே ஏழை ஒருவன் தினமும் பசுக்ளை மேய்க்க வருவது வழக்கம்.அந்த யோகியின் தவ வாழ்க்கையையும் சாதனைகளையும் இவன் தினமும் காண்பான். அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் அவனுக்கு உண்டாயிற்று.
----
சுவாமி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு நாள் கேட்டுவிட்டான். கடவுளை காண முயற்சி செய்கிறேன் என்றார் அந்த யோகி. எனக்கும் அந்த வழியை போதிப்பீர்களா? என்று கேட்டான் அந்த ஏழை.
நீ எப்படி இறைவனை காண முடியும்,நீ மாடுமேய்ப்வன்,உனக்கும் கடவுளுக்கும் வெகுதூரம்,மாடுகளை ஒழுங்காக மேய்த்து வா. கடவுள் அதுஇது என்று உன் மூளையை குளப்பிக்கொள்ளாதே என்றார்.
---
அந்த ஏழை மனவருத்தத்துடன் அங்கிருந்து சென்று விட்டான்,ஆனால் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. மறுநாளும் யோகியிடம் சென்று ஏதாவது சிறிதாவது சொல்லித்தாருங்கள் என்று கேட்டான்.ஆனால் அந்த யோகியோ,கோபத்துடன் முட்டாளே இங்கிருந்து போ என்று சொல்லிவிட்டார்.
----
ஆனால் அந்த மாடு மேய்ப்பவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.அவனிடம் இறைவனைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.அதற்கான தேவை இருந்தது.அவனால் சரியாக உண்ணமுடியவில்லை,உறங்க முடியவில்லை.எனவே மீண்டும் அந்த யோகிடம் வந்தான்.
----
சுவாமி எனக்கு ஏதாவது சிறிது கூறுங்கள் என்றான்.
அந்த யோகியும் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ,உன்னிடம் உள்ள பெரிய மாடு ஒன்றில் தான் தற்போது இறைவன் இருப்பதை நான் பார்த்தேன். உனக்கும் அவரது காட்சி வேண்டுமானால் அந்த மாட்டையே வழிபடு உனக்கு அவரது காட்சி கிடைக்கும் என்றார்.
---
அந்த பாமரன் அப்படியே அதை நம்பி விட்டான்.அந்த பெரிய மாட்டிடம் அதிகமாக அன்பு செலுத்த தொடங்கினான்,அதன் கூடவே வசிக்க தொடங்கினான்,அவனது எண்ணம் முழுவதும் அந்த பெரிய மாட்டை கவனிப்பதிலேயே கழிந்தது. வேறு எண்ணங்கள் அனைத்தும் குறையத்தொடங்கின.இவ்வாறு நாட்களும் மாதங்களும் வருடங்களும் ஓடின.
----
ஒரு நாள் அந்த மாட்டிடமிருந்து குரல் வருவது போல தோன்றியது. மகனே,மகனே என்று குரல் கேட்டது.மாடு பேசுகிறதே என ஆனந்தம் அடைந்தான்.ஆனால் மறுநிமிடமே,மாடு பேசாதே என்ற எண்ணமும் அவனுள் எழுந்தது.மீண்டும் மாட்டிடமிருந்து அந்த குரல் கேட்டது. மாட்டின் அருகில் சென்றான்.ஆனால் அந்த குரல் அவனுள் இருந்து வந்தது என்பதை கடைசியில் கண்டுகொண்டான்.இறைவன் தன்னுள்ளே இருக்கிறான் என்பதை அவன் கண்டுகொண்டான்.
----
ஆரம்பத்தில் மாட்டை கடவுளாக நினைத்து வழிபட ஆரம்பித்தான்,அவனிடம் இருந்த ஆழ்ந்த ஈடுபாடு,மன ஒருமைப்பாடு.அவனுள்ளே இருப்பதை வெளியே கொண்டு வர துணைபுரிந்தது.
-----
இறைவன் உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால்,நீங்கள் எந்த கோவிலுக்கும் போகவேண்டாம்,எந்த சர்ச்சுக்கும் போகவேண்டாம்.உங்கள் உடம்பே ஒரு கோவிலாகிவிடும்.அந்த கோவிலில் இறைவன் உறைகிறார்.
---
---சுவாமி விவேகானந்தர்
----
(வாட்ஸ் அப் குழு 90037673033. அட்மின்-சுவாமி வித்யானந்தர்)

No comments:
Post a Comment