Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-9

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-9
---
🌿 நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். 
அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
🌿 மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது.
--
சிலர் சர்ச்சியின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள் அவர்களைப் பொறுத்தவரை சமயம் என்றால் சில கோட்பாடுளை ஒப்புக்கொள்வது. பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான்.
--
வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி அதை இந்து உணர்ந்துள்ளான். பிற சமயங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றன;. ஒரே ஒரு சட்டையைவைத்துக்கொண்டு சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான் ,ஹென்றி எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல் தான் இருக்கவேண்டும்.
--
(சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment