Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 7

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 7
-----
தாழ்ந்த மக்களுக்குப் பண்பாட்டையும் கல்வியையும் அளித்து, அவர்களை அறியாமை என்ற தூக்கத்திலிருந்து விழிக்கச் செய். 
-----
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. 
---
நாம் அமைக்கும் கல்வி ,. நாடு முழுவதற்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக இருக்க வேண்டும், .ஆன்மிகம் கொண்டதாகவும், .உலக நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.மேலும் இந்தியாவின் தேசிய பண்பாட்டிற்கு ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருப்பது அவசியம்.
---
கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
----
. நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக்கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.
----
என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் கேரிக்கமாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக்கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
----
ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலகஅறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment