Saturday 24 September 2016

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 20

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 20
----
பிரம்மம் ஒரு மனிதனிடம் வெளிப்பட்டால் அந்த ஒளி காட்டும் வழியால் பல்லாயிரக்கணக்கானோர் முன்னேறுவர். பிரம்ம ஞானிகள் மட்டுமே மனித குலத்திற்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்க முடியும். 
---
ஆன்ம ரகசியத்தை அறிவதற்காக ஆன்ம முக்திக்காக பிறப்பு இறப்பு என்னும் புதிருக்கு உண்மையான தீர்வைக் காண்ப தற்காக நீ மரணத்தின் கொடிய பற்களுக்கு நடுவிலும் அச்சம் சிறிதும் இல்லாமல் செல்ல வேண்டும். அச்சமே மரணம் . நீ எல்லா அச்சங்களையும் கடந்து செல்ல வேண்டும். 
----
உனது முக்திக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இரு. எலும்பாலும் தசையாலுமான இந்த மூட்டையைச் சுமந்துதிரிவதால் என்ன பயன்?
----
மனிதன் ஒருமையை நோக்கி முன்னேறும் அளவிற்கு நன்மை தீமை போன்ற முரணான கருத்துக்களின் அடிப்படையான நான் நீ என்னும் வேறுபாட்டு எண்ணங்கள் அழிந்துவிடும். இவன் என்னிலிருந்து வேறுபட்டவன் என்ற கருத்து தோன்றும் போது மற்ற எல்லா வேற்றுமைகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஒருமையை முழுமையாக உணர்ந்தவனுக்கு எந்தவிதமான துயரமோ மாயையோ இருக்காது.
----
எல்லாவித பலவீனங்களுமே பாவம்தான். பலவீனத்திலிருந்து தான் பொறாமை குரோதம் முதலியவை தோன்றுகின்றன. அதனால் பலவீனம்தான் பாவம்.
----
உள்ளிருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. அந்த ஒளியிலிருந்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டு இந்தத் தசையாலும் எலும்பாலுமான உடம்பை நாடியவாறு நான் நான் நான் என்று அடித்துக் கொள்கின்றனர். இதுதான் எல்லா பலவீனங்களுக்கும் அடிப்படை
----
நான் ஆன்மா என்ற உண்மையில் மனம் உறுதியாக இருக்குமானால் நீ புண்ணியம் - பாவம் நன்மை -தீமை அனைத்தையும் தாண்டிச் செல்வாய்.
-----
மனத்தைக் காமம் மற்றும் பண ஆசைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் உண்மை உண்மை யற்றது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். நான் இந்த உடம்பு அல்ல என்ற எண்ணத்துடன் உடம்பற்ற நிலையில் இருக்க வேண்டும் எங்கும் நிறைந்த ஆன்மாவே நான் என்பதை அனுபவத்தில் உணர வேண்டும்
---
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment