Saturday, 24 September 2016

நமது எதிர்கால பணி

நமது எதிர்கால பணி
--------`
ஸ்ரீராமகிருஷ்ணரை நான் மடத்தில் பிரதிஷ்டை செய்த அன்று,அவரது கருத்துக்கள் இந்த இடத்திலிருந்து எழுந்து அண்டசராசரங்கள் முழுவதும் பரவி நிற்பதைபோல் என் மனத்தில் தோன்றக்கண்டேன். நான் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்,செய்வேன், நீங்களும் அவரது பரந்த கருத்துக்களை மக்களுக்கு விளக்கிசொல்ல வேண்டும். அத்வைத வேதாந்தத்தின் உண்மையை நடைமுறை வாழ்க்கையில் நிரூபித்து காட்டவேண்டும். சங்கரர் இந்த அத்வைதத்தைக் காடுகளிலும் மலைகளிலும் விட்டுப்போனார்.அவற்றை அங்கிருந்து கொண்டுவந்து,உலக வாழ்க்கையில்,மக்கள் தொழில்புரிந்து வாழும் சமுதாயத்தில் பரப்பவே நான் வந்துள்ளேன்.அத்வைதத்தின் கர்ஜனை வீடுகள்தோறும் கேட்க வேண்டும். நான் இதை சாதிக்க நீங்கள் உதவுங்கள். வேலை செய்யுங்கள்.....
----சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment