-----
பிரார்த்தனை மூலம் இறைவனை நெருங்குவதைவிட உற்சாகத்தாலும் புன்முறுவலாலும் இன்னும் அதிகமாக நெருங்கிச்செல்ல முடியும்.
சோர்ந்திருக்கும் சோம்பல் மனத்தால் எப்படி அன்புகாட்ட முடியும்?அவர்கள் அன்பைப்பற்றி பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை.அவர்கள் மற்றவர்களை புண்படுத்தவே விரும்புகிறார்கள். கொள்கைவெறியர்களை நினைத்துப்பாருங்கள்,அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு சோகமாக வைத்துக்கொள்கிறார்கள்.சொல்லிலும் செயலிலும் மற்றவர்களிடம் சண்டையிடுவது தான் அவர்களது மதம்.அவர்கள் விருப்பப்படியே அவர்களை வேலை செய்யவிட்டால்,நாளை உலகம் முழுவதையுமே ரத்தவெள்ளத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.அவர்கள் யார்மீதும் அன்புகாட்டுவதில்லை.
--
ஆகவே எப்போதும் சோகமாக இருப்பவன் இறைவனை அணுகமாட்டான். நீங்கள் சோகமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்.உங்கள் துக்கத்தை வெற்றிகொள்ள முயலுங்கள்.பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது.ஒருபோதும் பலவீனர்களாக இருக்காதீர்கள்.வலிமைபடைத்தவனாக இருங்கள்.நீங்கள் பலசாலியாக இல்லாவிட்டால் எப்படி கடவுளை நெருங்க முடியும்?
---
---சுவாமி விவேகானந்தர்
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப் குழு 90037 67303 அட்மின் சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment