இந்து மதத்தின் வரலாறு-பாகம்-1
-
சுவாமி பாஸ்கரானந்தர்
-
உலகில் உள்ள சிறப்பு வாய்ந்த மதங்கஞள் இந்துமதமும் ஒன்று. சற்றேறக்குறைய 720 மில்லியன் இந்துகள் உலகெங்கிலும் வசிக்கிறார்கள். அதில் பெரும் பான்மையான இந்துகள் இந்தியாவில் வசிக்கின்றனா் கணிசமான அளவில் நேபாளம்,மோரீசியஸ்,பிஜி,தெற்கு ஆப்பிரிக்கா,ஸ்ரீலங்கா,
கயானா,இந்தோனேஷியா ( பாலி ) போன்ற நாடுகளில் வசிக்கின்றார்கள்.
-
இந்து மதமானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாகக் கருத்தப்படுகிறது. இந்துமதம் எப்போது தோன்றியது என்பது பற்றிய காலக்கணக்கை வரையறையிட்டுக் கூற முடியாது. ஆனாலும் ஜைன மதம் , புத்த மதம், கிறிஸ்தவ மதம், முகமதிய மதம் (இஸ்லாம்) ஆகியவற்றைவிடப் பழமையானது என்பதை உருதியாகக் கூறலாம். உலகத்தின் மிகப் பழமையான மதங்களுள் ஒன்றானது ஜோராஸ்டிரீஸம். அது தோன்றுவதற்கு காரணமாயிருந்தது இந்து மதத்தின் புனித நுால்கள்தான் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள்
-
இந்துகளின் மூதாதையா்களும் அவா்களின் மதங்களும்
-
இந்துகளின் மூதாதையா்கள் ஆரியா்கள் எனப்படுவா். வடமொழியிள் (ஆா்யா) எனப்படும் சொல் ஆங்கிலத்தில் ( ஆா்யன் ) அல்லது ( இந்தோ-ஆா்யன் ) என்று சொல்லப்படுகிறது. ஆரியா்கள் தங்களது மதத்தை (ஆா்ய தா்மம்) என்று அழைத்தனா். ஆர்யன் என்றால் பண்பட்டவன்,ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம்.இந்து மதம் என்ற சொல்லே அவா்கள் அறியாதது. தா்மம் என்ற சொல் மதம் அல்லது மதச்சார்பான கடமைகளைப் பற்றி விளக்குவதாக இருந்தது.
இந்தோ-ஐரோபிப்பியர்களின் மொழிக் கூட்டத்தைச் சோ்ந்த சமஸ்கிருதம்தான் இந்தோ ஆரியா்களின் மொழியாக இருந்தது. ஆரியா்கள் தங்களது மதத்தை (மானவ தா்மம்) என்று சொல்லிக் கொண்டனா். அதனால் அது மனிதனுக்கான மதம் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து இந்த மதம் ஆரியா்களுக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள மனித இனம் முழுமைக்கு பொதுவானது என்றாகிறது. தவிரவும் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் சில நிரந்தர உண்மைகளைக் கொண்டுள்ளமையால் இதனை (சனாதன தா்மம்) என்றும் கூறினார்கள்
–
நமது நாட்டின் அண்டை நாடுகளுள் ஒன்றான பொ்சியா நாட்டின் எல்லையும், நமது நாட்டடின் எல்லையும் பொதுவாக இருந்தது. பழங்காலத்தில் இது
(ஆா்யா வா்த்தம் ) ( ஆரியா்கள் வாழும்
நாடு) என்று சொல்லப்பட்டது. இரண்டு
நாடுகளுக்கும் பொதுவான எல்லை கோடாக இருந்தது சிந்து நதி. சிந்து நதியை சமஸ்கிருதத்தில் சிந்து என்றும்,
பொ்சிஸிய மொழியில் (இண்டஸ்) என்றும் கூறுவார்கள். பாரசீகா்கள் (சிந்து) என்று உச்சரிப்பதைக் கடினமாக கருதி (ஹிந்து) என்றே சொன்னார்கள். எனவே சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆரியா்களை (ஹிந்துக்கள்) என்றே அழைத்தனா். இவ்வாறாக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆரியர்களின் மதம் ‘ இந்துமதம் என்ற பெயரைப் பெற்றது.
-
தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
No comments:
Post a Comment