அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-5
சிறு வயதில் இவ்வளவு வேலைகளைச் சாரதையால் எப்படிச் செய்ய முடிந்தது என்று பிறர் பிரமிப்பதாகக் கண்டோம் . இதைப்பற்றி பின்னாளில் அன்னை கூறினார் . ‘ உண்மையைச் சொல்லட்டுமா , என் சிறு வயதில் அசப்பில் என்னைப்போலவே இருக்கும் பெண்ணொருத்தி என்னுடன் எப்போதும் இருப்பாள் . நான் போகும் இடங்களுக்கு எல்லாம் என்னுடன் வருவாள் .என்னுடன் பேசுவாள் , சிரிப்பாள், களிப்பாள் , வேடிக்கை வினோதங்கள் செய்வாள் , என் வேலைகளில் எல்லாம் எனக்கு உதவுவாள் .ஆனால் வேறு யாராவது வந்துவிட்டால் மறைந்து விடுவாள் . எனக்குப் பத்து , பதினோரு வயதுவரை
இது நடந்தது . ’சாரதை மாடுகளுக்காக புல்வெட்டப் போவாள் . குளத்தில் இறங்கி சிறிது கரையில்
வைத்துவிட்டு வருவாள் .
அதற்குள் ‘
அந்தப் பெண் ’ இன்னொரு பிடிப் புல்லைத் தயாராக வைத்திருப்பாளாம் . சிறுவயதில் சாரதையின் வாழ்வில் பலமுறை நடந்த அமானுஷ்யமான இன்னொரு நிகழ்ச்சியையும் இப்போது காண்போம் . காலக்கிரமப்படி இது பின்னால் வர வேண்டியது சாரதையின் திருமணத்தற்குப் பின்னர் நடைபெற்றது . அவளுக்குப் பதிமூன்று வயதிருக்கலாம் . அப்போது காமார்புகூரில் ஹல்தார்புகூர் என்ற குளம் உள்ளது . குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் அங்குதான் போக வேண்டும் . நாணமே உருவானவளே சாரதை , பிறர் காணச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அதிகாலையிலேயே சென்றுவிட எண்ணினாள். கதவைத் திறந்துவிட்டு வெளியில் சென்றதும் , ‘ இந்த இருட்டில் தனியாக எப்படி போவது ? ’ என்ற எண்ணம் வந்தது . போவதா வேண்டாமா என்று குழம்பி நின்றபோது திடீரென்று எங்கிருந்தோ வந்தனர் எட்டுப் பெண்கள் . சாரதையும் தயக்கம் இன்றி புறப்பட்டாள் . உடனே அந்த எட்டுபேரில் நால்வர் பின்னால் சென்றனர் . இப்படியே எல்லோரும் சென்று குளித்து முடித்தனர் . அதேபோல் திரும்பியும் வந்தனர் . வீடு வந்ததும் அந்த எட்டுபேரும் மறைந்து விட்டனர் . காமார்புகூரில் சாரதை இருந்ததுவரை இவ்வாறே நடந்தது . ‘ இவர்கள் யார் ? ‘ என்ற எண்ணம் சாரதையின் மனத்தில் ஏழாமல் இல்லை . ஆனால் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை , அவர்களிடம் அதுபற்றி அவள் கேட்கவும் இல்லை .
-
தொடரும்..
No comments:
Post a Comment