அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-11
-
அவ்வப்போது ஜெயராம்பாடிக்குச் சென்று வந்த
நாட்களைத் தவிர
சுமார் பதிமூன்று வருடங்கள் சாரதை பொதுவாக நகபத்தில்தான் வாழ்ந்தாள் . அந்தக் குறுகிய இடத்தில்
தன்னைத் திணித்துக் கொண்டு ,
குருதேவருக்கான பணிவிடைகளையும் , மாமியாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதிலும் முழுமையாக ஈடுபட்டாள் அவள் .
வேதகாலம் திரும்புகிறது
-
சாரதையும் சரி , ஸ்ரீராமகிருஷ்ணரும் சரி
, காமம் என்ற
ஒன்று தங்கள் வாழ்வில்
நுழைந்து விடாதிருப்பதில் மிகுந்த
எச்சரிக்கையுடன் இருந்தனர் . ஸ்ரீராமகிருஷ்ணரை பொறுத்தவரை வரலாறு காணாத சாதனைகளில் பன்னிரண்டு ஆண்டுகள் ,ஈடுபட்டு ,
தம்மை முற்றிலும் இறைவனின் கைக்கருவியாக்கிக் கொண்டார் .
அவரது மனம் மட்டுமல்ல எலும்புகூட தெய்வீகமாகி விட்டிருந்தது . அவரிடம் புலன்களின் ஆசைகள் எதுவும் இருக்க இடமில்லை .
ஆனால் சாரதை இப்போதுதான் சாதனை வாழ்வில் அடியெடுத்து வைக்கிறாள் . அவள் மனம் எந்த நிலையில் இருக்குமோ என்ற ஐயம் அவரிடம் எழுந்தது . ஒரு நாள் தம் சந்தேகத்தை அவளிடம் கேட்டார் – ‘ ஆம் சாரதா , நீ என்ன,என்னை
உலகியலுக்கு இழுக்கவா வந்திருக்கிறாய் ? ’ கணம்கூட தாமதிக்காமல் வந்தது சாரதையின் பதில்
‘ இல்லவே இல்லை நான் ஏன்
உங்கள் வாழ்வை குலைக்கவேண்டும் ? உங்கள் பாதையில் உங்களுக்கு உதவவே வந்துள்னேன் ’ அவளது பதிலில் உலகியலின் சாயலே இல்லை .
ஸ்ரீராமகிருஷ்ணரின் மனம் லேசாகியது . ‘ அவள் மட்டும்
அத்தனை தூயவளாக
இல்லையெனில் , நானும் புலன்களின் வசப்பட்டு , உலகியல் வாழ்வில் ஆழ்ந்திருக்க மாட்டேன்
என்பது என்ன நிச்சயம் ? திருமணத்திற்குப் பின் நான் அன்னை பராசக்தியிடம் , “ அம்மா , இவள் மனத்திலிருந்து காம எண்ணத்தை துடைத்துவிடு ” என்று வேண்டியிருந்தேன்
. என் பிரார்த்தனை நூற்றுக்கு நூறு நிறைவேறியிருப்பதை சாரதையின் வாழ்க்கையில் நான் கண்டேன் ’
என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர் .
ஸ்ரீராமகிருஷ்ணரின் கேள்விக்கு சாரதை பதிலளித்து விட்டாலும் அவர் கேட்ட கேள்வி கேள்விக்குறியாக அவளுள் நின்றது .
ஒருநாள் இரவில் அவள் ஸ்ரீராமகிருஷ்ணரின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் . அப்போது அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டாள் – ‘ ஆமாம் , என்னை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ? ’ , விரைந்து வந்தது ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில்
- ‘ அன்னையாகத்தான்
. ஆனந்தமே உருக்கொண்ட அன்னை பராசக்தியின் வடிவாகத்தான் உன்னை நான் காண்கிறேன் . கோயிலில் சிலையாக நிற்பவளே இந்த உடம்பை ஈன்றவளாக
நகபத்தில் இருக்கிறாள் , இப்போது
அவளே என் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். ’ சாரதைக்கு எல்லாம்
தெளிந்துவிட்டது .
பைத்தியம் என்பதற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை என்பது மட்டுமின்றி . தெளிவான் மனிதர்
ஒருவர் இருப்பாரானால் அவர் இவர் மட்டுமே என்பதும் அவளுக்கு உறுதி ஆயிற்று . சாரதைக்கோ ஸ்ரீராமகிருஷ்ணருக்கோ தங்களுக்குள் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவை தீர்ந்தன . சேர்ந்து வாழ்கின்ற நாட்களெல்லாம் ஒருவருக்கொருவர் துணையாக உயர் வாழ்க்கை வாழ்வது என்ற முடிவுடன் இருவரும் வாழத் தொடங்கினர் . சாரதை பகலில் நகபத்திலும் இரவில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில்
தங்கினாள்
. ஒரே
அறையில் மட்டுமல்ல , சுமார் ஆறுமாத காலம்
ஒரே படுக்கையிலே படுக்கவும் செய்தனர் .
தொடரும்..
-
No comments:
Post a Comment