Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-14



அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-14
-
நீண்ட நேரம் சென்றது . இரவின் இரண்டாம்  யாமத்தின் பெரும்பகுதி சென்றுவிட்டது . தன்னில்  தானாகக்  கரைந்திருந்த குருதேவரிடம்  புறநினைவு  வருவதற்கான அறிகுறிகள்  தோன்றலாயிற்று . ஓரளவு நினைவு திரும்பியதும்  அவர் தம்மை தேவியிடம்  அர்பணித்துக் கொண்டார் .  தமது சாதனையின் பலன்கள்,  தமது ஜபமாலை மற்றும் தன் அன்னத்தையும்  தேவியின் திருவடிகளில் சமர்ப்பித்தார்.  மந்திரங்களை  ஓதியவாறே தேவியை வணங்கினார் . 
மங்கலமாம் அனைத்திற்கும்  மங்கலமானவளே , அனைத்துச் செயல்களுக்கும் மூலகாரணியே , அடைக்கலம் தருபவளே, முக்கண்ணியே , சிவபெருமானின் நாயகியே , கௌரி  , நாராயணீ ,  உன்னை வணங்குகிறேன் , உன்னை வணங்குகிறேன் . 
-
பூஜை நிறைவுற்றது . வித்யா  ரூபிணியான அகிலாண்டேசுவரியை சாரதையிடம்  எழுத்தருளச் செய்து வழிபட்ட இந்த நிகழ்ச்சியுடன்  குருதேவரின் சாதனைகள் நிறைவுற்றன . அவரது தெய்வமனித நிலை  எல்லா நிலைகளிலும் முழுமை பெற்றதாயிற்று
-
சக்தி வழிபாற்றைப் பற்றி  கூறுகின்ற தந்திர சாஸ்திரங்கள் பிரபஞ்சத்தில்  செயல்படும்     மகா சக்தியைப் பத்தாக  பிரிக்கின்றன. இந்தப் பத்து சக்திகளுடன் தொடர்பு  கொள்வதன்மூலம்  ஒருவன் ஒன்றேயான இறைவனை அடையாளம் . அதற்கான  ஒவ்வொரு  பாதையும் ஒரு வித்தை . இந்த வித்யைகள் ஒவ்வொன்றும்  தனியானவை . ஆனால் அவை சாதகனைச்  சேர்க்கின்ற இடம் ஒன்றுதான் . இந்தப் பத்து  சக்திகளே காளி , தாரா , ஷோடசி , புவனேசுவரி , திரிபுர ,  பைரவி , சின்ன மஸ்தா , தூமாவதி , பகளாமுகி ,  மாதங்கி , கமலாத்மிகா . இவர்கள்  ஒவ்வொருவரின்  ஆற்றலும்  வழபாட்டு முறைகளும்  வெவ்வேறானவை
-
 இவையனைத்தையும்  அறிந்து கொள்வது  நமது நோக்கம் அல்ல .  இங்கு நாம் சுருக்கமாகக் காணப்போவது  ஷோடசி சக்தியைப் பற்றித்தான் .   நான் எத்தனையோ தெய்வ வடிவங்களைக்  கண்டுள்ளேன் . ஆனால்  ஷோடசி  தேவியின் அழகிற்கு  ஈடுசொல்ல முடியாது                                                   என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளார் . அழகின் தலைவி அவள் . காமம் என்ற மாபெறும்  சக்தி அவள் .  ஒன்றேயாகத் தனித்திருந்த  பரம்பொருளில்நான் பலவாக ஆவேன்  என்று முதன்முதலாக  எழுந்த ஆசையின் வடிவம் அவள் .  தென்னாட்டில் இவளையே  ராஜராஜேசுவரி , லலிதா திரிபுரசுந்தரி என்று  வழிபடுகின்ற முறை ஸ்ரீவித்யை என்று தென்னாட்டில் பிரபலமாக விளங்குகிறது . 
-
நமது கேள்விகளுக்கு  இப்போது விடை காண முயல்வோம் . ஸ்ரீராமகிருஷ்ணர் ஏன் ஷோடசியை  வழிபட வேண்டும் ?  வழிபடுமூர்த்தியாக ஏன் மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ?   சாரதை அதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் ?  இந்தக் கேள்விகளுக்கான விடையில்தான் இந்தப் பூஜையின் முக்கியத்துவமும் அது தரும் செய்திகளும் அடங்கியுள்ளன .
-
1 . ஸ்ரீராமகிருஷ்ணர் முறைப்படி சன்னியாசம் ஏற்றுக் கொண்ட துறவி  . அவரது குருவான தோதாபுரி , ஆதிசங்கர்  ஏற்படுத்திய  புரி  சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் . புரி சம்பிரதாய துறவியரின்  தேவி காமாட்சி . எனவே ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சாதனைகளுக்கு முற்றுப்புள்ளியாக  லலிதா   திரிபுர சுந்தரியாக ஷோடசியை   வழிபட்டார் . அவளை சாரதையில் எழுத்தருளச் செய்ததன் மூலம் சாரதை ஸ்ரீராமகிருஷ்ண மரபின் தேவியாக்கப்பட்டாள் . 
                 இதந்ப் பத்து சக்திகளம் சிவபெருமானுடனே  வழிபடபட்டாலும் , சிவனை விட்டுப் பிரியாதவளாக  ஷோடசியாகிய லலிதாதேவி மட்டுமே  வழிபடப்படுகிறாள் .
    அதுமற்றுமின்றி , சிவ சக்தியை ஒன்றாக வழிபடாவிட்டால்  ஸ்ரீவித்யை பலனளிக்காது என்று தந்திர  சாஸ்திரங்கள்  கூறுகின்றன .  சாரதையை  ஷோடசியாகப்  பூஜித்ததன்  மூலம் தாமும் அவளும்  ஒன்று என்பதைக் காட்டினார்  ஸ்ரீராமகிருஷ்ணர் .  இதுவே  பின்னாளில்  ஸ்ரீராமகிருஷ்ண  மரபில்  சாரதையின்  இடத்தை நிர்ணயிப்பதாக  அமைந்தது .  ஸ்ரீராமகிருஷ்ணரையும் சாரதையையும்  ஒருவராகவே  காண்பது  ஸ்ரீராமகிருஷ்ண மரபு .  சாரதையே  பின்னாளில்  இதைக் கூறியதுண்டு . இதற்கேற்ப தத்துவரீதியாக வடிவம்  கொடுத்தவர்  சுவாமி சாரதானந்தர் .
 இவ்வாறு லலிதா திரிபுர சுந்தரியை   வழிபட்டதன் மூலம்  ஸ்ரீராமகிருஷ்ணர்  சாரதை இருவரும் ஒருவரே என்பது நிறுவப்பட்டது .   
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment