Saturday, 8 December 2018

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-4


இந்து மதத்தின் வரலாறு-பாகம்-4
-
சுவாமி பாஸ்கரானந்தர்
-
கடவுள் எங்கும் எதிலும்  நிறைந்து  இருக்கிறார்  என்பதை இந்து மதம் நம்புகிறது. ஒவ்வோர்  உயிரிலும்  தெய்வத்தன்மை  இருக்கிறது என்று சொல்கிறது.  தெய்வத்தன்மையானது  அனைவரிடமும்  சரிசமமான  அளவில்  காணப்பட்டாலும்  அதன் வெளிப்பாடு  சரிசமமாக இருப்பதில்லை. இத்தகைய  இயற்கையாக அமைந்த  தெய்வீகத்தன்மையை  வெளிப்படுத்தவே அல்லது தெளிவாக்கவே  ஆன்மீகப் பயிற்சிகள்  செய்வதன் நோக்கமாக  அமைகிறது. இவ்வாறாக இடையறாதப்  பயிற்சிகள் முலம்   இறைத்தன்மையைத்  தெளிவுபடுத்திக் கொண்டவா்களையேஇறையனுபூதிபெற்றவா்கள் என்பார்கள். அவா்களால் தான் மோட்சத்தை அடைய முடியும். தெய்வீகத்தன்மை  என்பது மனிதனின் உண்மையானநிலைஅதுதான் மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது. ஒருவா் வெளிப்படையாக இருக்கும் எந்த ஒன்றையும்  எளிதில் விட்டுவிடலாம்.ஆனால் வாழ்வதற்கு  இன்றியமையாத ஒன்றான  இந்த  தெய்வீகத்தன்மையை எளிதில் விட்டு விட முடியாது. மனிதனுக்குள் இருக்கும்  இந்தத் தெய்வீகத்  தன்மையானது விரைவாகவோ  அல்லது  காலம் கடந்தோ வெளிப்பட்டு விடும். அனைவருமே எந்த ஒரு விதி விலக்கும்  இல்லாமல்  மோட்சத்தை அடையலாம். மிகவும் உயா்ந்த ஆன்மீக நிலையை  எய்தியவா்கள்  இப்பிறவியிலேயே  மோட்சக்தை  அடைவார்கள். சிலா் அவா்களது மரணத்திற்குப் பின்  அடைவார்கள். ஆன்மீகப்பயிற்சியை  விரிவுபடுத்திக் கொள்ளாதவா்கள். மேலும் பல பிறவிகளை  எடுக்க நேரலாம். இலக்கை விரைவாக அடைய ஆன்மீகப் பயிற்சியை உண்மையுடன்  செய்ய   வேண்டும். ஒவ்வொருவருமே  அவா்களை   அறியாமலேயே  இலக்கை நோக்கி  முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்து மதக்கொள்கையின் படிஎல்லையற்ற இன்பம்என்பது தெய்வீகத் தன்மை என்பதன் முக்கியமான  காட்சிகளுள் ஒன்றாக  அமைகிறது. மனிதன்  காமத்திற்கும், அா்த்தத்திற்கும்  பின்னால்  செல்வது போல் தோன்றினாலும்  அவனது முயற்சி  இந்தத் தெய்வீகத்தன்மை  என்னும்  பேரின்ப  நிலையை நோக்கியே இருக்கும். மனிதனுக்குப் பணமோ, மகிழ்ச்சியோ  எவ்வளவு கிட்டினாலும் அதனால் அவன் திருப்தி அடையாமல்  மேலும் அவற்றைப் பெறவே விரும்புவான். அதற்கான முயற்சிகளும் செய்வான்.  அவ்வாறு அவன் அடையும் பணத்திற்கு  இன்ப நுகா்ச்சிகளுக்கும் ஓா் எல்லை இருக்கும் .  முடிவில் அவன்  இவற்றின் முலமே நிலையான  இன்பத்தை அடைய முயன்று  இது எந்த  நிலையிலும்  இல்லை என்று சொல்லும் படி ஆகி விடுவான். இத்தகைய விழிப்புணா்வு  ஏற்பட்டவுடன்  தன்னுள் இருக்கும்பேரின்பம்என்னும் நீருற்றைத்  தேடத் தொடங்குகிறான்.  வற்றாத இந்தப் பேரின்ப ஊற்றை  வந்து அடைந்தவுடன்  அவனது தேவைகள்  யாவும் (விருப்பமும் ஆசைகளும்) அவனை விட்டு மறைந்து விடும். அற்றது பற்றெனில் உற்றது வீடு  என்பா். ஆசைகள் அற்றுப்போனவுடன்  அவனது மனம்  தனக்குள்ளும், வெளியேயும் இருக்கும் எங்கும்  நிறைந்த கடவுளை உணரும். பிறகு அவன் எந்தப்பொருளிலும்  அனைத்து  ஜீவராசிகளிலும்  கடவுளே சாராம்சமாக  விளங்குவதை உணா்வான். அத்தகைய நிலையை எய்திய அவன் அனைவரிடமும் அன்பு செலுத்துவான். ஏன்  பகைவா்களிடம் கூட நேசக்கரம்  நீட்டுவான். ஏனெனில் அவனுக்கு எங்கும் பகைவா்களே கிடையாதே!   அவன துன்பம்,பயம்,கஷ்டம் ஆகிய எதையும் உணரும் நிலைக்கு அப்பார்பட்டவனாகிறான். இத்தகைய நிலைக்கு வந்தவுடன் அவன் உலகியல் சம்பந்தப்பட்ட எந்த செயலில் ஈடுபடாலும் அதனால் அவனுக்கு இன்பமே கிட்டும். அனைத்துமே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஏனெனில் இத்தகைய நிலையானது இறையோடு கலந்து உறவாடுவதாகும். அவன் தன்னை கடவுள்நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமாக காண்பான. கடவுளே அனைத்துப் பாத்திரங்காளாக விளங்குவதையும், தன்னுடைய பாத்திரத்தையும் அவரே எற்று நடத்துவதையும் உணருவான். இந்த நிலையை எட்டியவுடன் அவனால் பிறப்பு, இறப்பு , மாற்றம்  என்பவற்றோடு தொடா்புடைய  உடல், மனம், பிரிவு மனப்பான்மை ஆகியவற்றை பார்க்க முடியாது. அவன் தான் நிரந்தரமான தெய்வதன்மை கொண்டவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை.ப் பெற்று விடுவான். எனவே பிறப்பும்,இறப்பும் இனி இல்லை  என்ற உறுதியோடு இருப்பான்.  இதுவே மோட்சம். புலனின்பங்களில்  பற்று அற்று விடும். அவற்றின் பால் சுவை அற்று விடும். எனவே இந்து மத நூல்கள் இந்த நிலையை  எய்தவே முயற்சி செய்ய வேண்டுமென்று  மீண்டும் மீண்டும்  வலியுறுத்துகின்றன. 
தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment