Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-17


 அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-17

ஆன்மீகப் பயிற்சியுடன் , அன்றாடம் நடைமுறை வாழ்வில்  கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையம் குருதேவர்  சாரதைக்குப் போதித்தார் .  அவர் அளித்த  ஓரிரு  அறிவுரைகளைக் கூறினாலே  இதன் உண்மை புரிந்துவிடும் . குடும்ப  வாழ்வின் மிகச் சிறிய அம்சங்களைக்  கூட அவர் விடவில்லை .
 எந்தப் பொருளையும் பயன்படுத்திவிட்டு  , கண்ட இடத்தில்  வைக்கக் கூடாது . அதற்கரிய இடத்தில்தான்  வைக்க வேண்டும் .  அடிக்கடி  பயன்படும்  பொருட்களைக் கைக்குச் சுலபமாக  எட்டும்  வகையில் அருகில் வைத்துக்கொள்ள  வேண்டும் . எப்போதோ தேவைப்படும்   பொருட்களை தூரத்தில்  வைக்கலாம் .  ஓரிடத்திலிருந்து  ஒரு பொருளை எடுத்தால்  , மீண்டும் அதை அதே இடத்தில் வைக்க வேண்டும் .  இப்படிச் செய்தால் ,  இருட்டில்கூடச்சிறிதும் தடுமாறாமல்  அந்தப்  பொருட்களை  எடுக்க முடியும் . ’ பயண வேளைகளில் படகிலேயோ  வண்டியிலேயோ ஏறும் போது முதலில் எற வேண்டும் ,  இறங்கும்போது  கடைசியில் இறங்க வேண்டும் .  அப்போதுதான்  சாமான்கள்  எல்லாம்  சரியாக ஏற்றப்பட்டனவா இறக்கப்பட்டனவா என்பதையெல்லாம் கவனிக்க முடியும் . ’ ‘ குடும்ப வாழ்வில்  ஆகட்டும் , சமுதாய வாழ்வில் ஆகட்டும் , நமது  வெற்றியின் ரகசியம்  நம்மிடமே உள்ளது.  நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களுடன்  எத்தகைய உறவு வைத்திருக்கிறோம் , எப்படி  பழகுகிறோம்  என்பதில்தான்  உள்ளது ஒவ்வொருவருடைய மனநிலை , இடம் , காலம் ,  சூழ்நிலை  , குணம்  , பழக்க வழக்கங்கள் இவைகளையெல்லாம்  அனுசரித்து  நடந்து  கொள்வதில்தான் இருக்கிறது .  வெளித் தோற்றத்தில் எல்லோரும் எலும்பும் தசையும் சேர்ந்தவர்கள்தாம் . ஆனால்  ஒவ்வொருவரின்  மனமும்  முற்றிலும் வேறுபட்ட  வகையில்  உள்ளது . ஆகவே  நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்  போதும் ,  ஒருவருடன்  பழக்கம்  வைத்துக் கொள்ளும்  போதும்   மிகவும் கவனமாக இருக்க வேண்டும் . சிலருடன்  தாராளமாக  நெருங்கிப் பழகலாம்  . வேறு   சிலரைப் பார்க்கும்போது , “ என்ன  சௌக்கியமா ? ” என்று  விசாரிப்பதோடு  நின்றுவிட வேண்டும் . இன்னும்  சிலரிடம்  இதைக்கூட கொள்ளாதிருப்பது நல்லது . ’ தம் துணைவி  இல்லறத்திற்கும்  துறவறத்திற்கும் லட்சியமாக  இருக்க வேண்டும்  என்பதற்காகவே  அந்த இருதுறைகளிலும்  எத்தனை உயர்ந்த பயிற்சிகளை குருதேவர் அளித்திருக்கிறார் !
    சேவை சாதனை
-
 பிறருக்காகச் வேலை செய்யும்போதுதான்  , நீ  மிகச்  சிறப்பாக வேலை செய்ய முடியும்  என்றார்  சுவாமி  விவேகாந்தர்  .  பிறருக்காக  வேலை  செய்யும்போது கிடைக்கின்ற  இன்பமும்  நிறைவும்  நிம்மதியும்  , ஒருவேளை , வேறு எதனாலும்  கிடைக்காது .  இதனைச் சரியான ரீதியில் ஏற்றுக்கொண்டு , செயல்  படுத்துவதற்கு  ஒர பெண்ணின் வாழ்வில்  வாய்ப்புகள் ஏராளம் . பெற்றோருக்கு ,  கனவனுக்கு , மாமனார்  - மாமியாருக்கு என்று அவளது  வாழ்வே சேவை மயம்தான்  . இது ஒரு  புண்ணியச் செயல்   பிரது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையம்  கொண்டுவருகின்ற  புண்ணிய  கைங்கரியமே  சேவை . ஆனால்  பெற்றோருக்கு  ஆகட்டும் , கணவனுக்கு ஆகட்டும்  , செய்கின்ற  சேவையை  இறைவனுக்கச்  செய்வதாக  எண்ணிச்  செய்யம்போது  சேவை ஆன்மீக சாதனையாகிறது வாழ்க்கையே  ஒரு சாதனைக்களமாகி  விடுகிறது  தாயுமானவர்    கூறிய , ‘ ஒரு காலமன்றிது  சதாகால பூஜைஆகிவிடுகிறது .இதையே அன்னை  வாழ்ந்து  காட்டினார் . அவரது தடசிணேசுவர  நாட்களில்  இத்தகைய  சேவைமயமான  பக்திமயமான வாழ்க்கையைக் காண்கிறோம் . இடையிடையே  ஜெயராம்பாடிக்கச் சென்று சிறிது காலம்  தங்கி   வந்தது தவிர   தட்சிணேசுவரத்தில் சுமார் பதிமூன்று ஆண்டுகள்  வாழ்ந்தார் .
-
  அவர் வாழ்ந்தது நகபத்தில் ஆகும் .  நகபத் என்பது வாத்திய மண்டபம் . அந்த நாட்களில் ஒளிபெருக்கி வசதிகள்  கிடையாது . எனவே  இந்த மண்டபத்தின்  மாடியில் அமர்ந்து கோயிலின் வாத்தியக் கலைஞர்கள் காலை மாலை  ஆரதி வேளைகளில்  இசை முழங்கவர் . தட்சிணேசுவரக் காளி  கோயிலின்  வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு நகபத்கள்  உள்ளன. அன்னை வாழ்ந்தது வடக்கு நகபத்தில் . படத்தில் பார்க்கும்போது மாளிகை  போன்று   தோற்றமளிக்கின்றது. இந்தக் கட்டிடம் உண்மையில் மிகவும் சிறியது . அறுகோண வடிவில்  அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தின்  ஒவ்வொரு  பக்கமும்  சுமார் 3 அடி . சுவர்களுக்கு  இடையிலுள்ள  மிக நீண்ட அளவு  சுமார் 8 அடி . மொத்தப் பரப்பு 50 சதுர அடிக்கும்  குறைவு .  சுற்றிலும் சுமார் 4 அடி அகல வராந்தா . குருதேவரின்  அறையிலிருந்து வடக்காக  பஞ்சவடிக்குச் செல்லும் வழியில்  சுமார் 75 அடி தூரத்தில்  உள்ளது இந்த நகபத் . இந்த அறைக்கு ஒரு வாசல்தான் ஊண்டு  . தென்புறமாக  உள்ள இதனைக்   திறந்தால் குருதேவரின் அறை தெரியம் .  அவரது அறையின்  வடக்கு வாசல்  திறந்திருந்தால் அங்கு நடப்பவற்றை  நகபத்திலிருந்து பார்க்க முடியும் .  நகபத்  அறையைச் சுற்றியுள்ள   வெளி வாரத்தில்  கிழக்குப்  பகுதியில்  மாடிக்குச்   செல்வதற்கான  படிக்கட்டுகள்  உள்ளன . இந்தப் படிக்கட்டின்   கீழ்ப்பகுதிதான்  அன்னையின்   சமையலறை . மாடியில்  குருதேவரின்  தாய் வாழ்ந்து வந்தார் .  கீழே   அன்னை  தங்கினார் .   
-
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment