Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-9


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-9

-நான்கு நீண்ட ஆண்டுகள் ஓடி மறைந்தன . சாரதை இப்போது 18 வயது மங்கை . அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த வேளையில் பேரிடியாக வந்தது வதந்தி ஒன்று – ‘ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ . வதந்திகள் காற்றைவிட வேகமாகப்  பரவக்கூடியவை அல்லவா ! நிலைகுலைந்து போனாள் சாரதை . அவள் தன்னை சுதாரித்துக்  கொள்ளும் முன்னர் விஷயம் கிராமம் முழுவதும் பரவிவிட்டது . ‘ அதோ  பைத்தியத்தின் மனைவிஎன்று நேராகக் கேலி செய்தனர் சிலர்அந்தோ , உனக்கா இந்த நிலை ! ’ என்று அனுதாபப் போர்வையில்  அகம் மகிழ்ந்தனர் சிலர் . மொத்தத்தில் சாரதையால்  வெளியில் தலைகாட்ட முடியவில்லை . நாள் முழுவதும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாள் . ‘ இந்தச் செய்தி உண்மையாக இருக்க முடியுமா ? ’ என்ற கேள்வி அவளைக் குடைந்தது . கடந்த முறை அவரைச் சந்தித்த நிகழ்ச்சிகள் எல்லாம்  மனத்துள் பசுமையாக நிழலாடி
அவரது பேச்சு வேடிக்கை வினோதங்கள் , அவர் அளித்த ஆனந்த நிறைவு , எல்லாவற்றிற்கும் மேலாக அலவர் காட்டிய  அந்தத் தூய அன்புஅவையெல்லாம் பொய்யாகுமா ? உணர்வுமயமான இறைவனைச் சிந்தித்துச் சிந்தித்து உணர்வுமயமாக  இருக்கின்ற அவரது சித்தம் கலங்க முடியுமா ? முடியாது , சாத்தியமே இல்லை என்றுதான் அவள் மனம் கூவியது . ‘ எப்படியோ , அவருக்குப் பைத்தியம்  என்பது கட்டுக்கதை , ஒருவேளை அவரது உடல்நிலை சரியில்லாமல் இருக்குமானால் , அங்கே அவரது அருகில் இருந்து பணிவிடை செய்வதே மனைவியாகிய என் கடமை . அது மட்டுமல்ல ,  இதையே ஒரு சாக்காக  வைத்துக் கொண்டு அவரிடம் சென்று விடலாம்என்று தெளிந்தாள் சாரதை . ஆனால் நாணமே வடிவான  அவள் , கணவனிடம் போக வேண்டும் என்ற தன் எண்ணத்தை எப்படி வெளியிடுவாள் ? யாரிடம் வெளியிடுவாள் ? எனவே தகுந்த வாய்ப்பினை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்
-
அந்த வாய்ப்பும் விரைவில் வந்தது . அது 1872 , மார்ச் . டோல் பூர்ணிமா விழா நெருங்கிக் கொண்டிருந்தது . அன்று கங்கையில் குளிப்பது விசேஷம் . தொலைதூரப் பகுதிகளிலிருந்து மக்கள் அந்த வேளையில் கங்கைய நோக்கிச் செல்வர் . ஜெயராம்பாடியிலிருந்து பல பெண்கள் கல்கத்தா செல்வதாக இருந்தனர் .சாரதை இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துக் கொண்டு தட்சிணேசுவரம் செல்ல முடிவு செய்தாள் . இதனை ஒரு பெண்ணின் மூலம் தந்தையிடம் தெரிவித்தாள் . மகளின் உள்ளத்தைப் புரிந்துகொண்ட ராமச்சந்திரர் அதை ஆமோதித்து , ‘ ஏன் , நானே கொண்டுபோய் விட்டு வருகிறேன்உன்று கூறி தாமும் மகளுடன் புறப்பட்டார் . குறிப்பிட்ட நாளில் தந்தையும் மகளும் பிற யாத்திரிகர்களுடன் பயணத்தைத் தொடங்கினர் . பல்லக்கு அமர்த்திக்கொள்ள வசதி இல்லாததால் நடந்தே சென்றனர் . தட்சிணேசுவரத்தை அடைய சுமார் அறுபது மைல் தூரத்தைக் கடக்க வேண்டும் . பயணம் ஆரம்பத்தில் என்னவோ இனிமையாகத்தான் இருந்தது . சாலையின்  இருபுறத்திலும்  பச்சைப்பசேலென  விரிந்து கிடந்த  வயல்வெளிகள் , தாமரை பூத்துக் கிடந்த குளங்கள்  இவற்றையெல்லாம் பார்த்துக் களித்தபடியே  யாத்திரிகள் சென்றனர் . அவ்வப்போது மர நிழல்களில்  ஓய்வெடுத்துக் கொண்டனர் . ஓரிரு நாட்கள்  கழிந்தன . இவ்வாறு நீண்ட தூரம் நடந்து பழக்கம் இல்லாததால் சாரதைக்குக் களைப்பும் அதிகமாக இருந்தன . இருப்பினும் தட்சிணேசுவரம் போக வேண்டும் , குருதேவரைக் காண வேண்டும் என்ற  ஆர்வத்தின் காரணமாக அவள் எதையும் தந்தையிடம் கூறவில்லை . ஆனால் அது வெறும் களைப்புதான் என்பதை உணர்ந்தபோது அவள் அடைந்த வேதனைக்கு அளவில்லை . அது மலேரியா . மலேரியாவும் அவளுக்குப் புதிதல்ல . சாதாரணமாகவே அவளுக்கு அடிக்கடி மலேரியா வருவதுண்டு . ஆனால் இப்போது , சோர்வானாலும் களைப்பானாலும் தளர்ந்திருந்த  அவளை அது  வெகுவாகப் பாதித்தது .ஜுரத்தின் வேகம் அதிகரித்த போது அவள் துவண்டு விட்டாள் . ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாமல்  போய் விட்டது . நிலைமையை அறிந்த ராமசந்திரர்  சத்திரம் ஒன்றில் அவளை தங்க வைத்தார் .  குருதேவரைக் காண முடியாமல் போய்விடுமோ என்ற ஏமாற்றம் ஒருபுறம் , நோய் தந்த வேதனை மறுபுறமாக சாரதையின்  மனநிலை கவலைதோய்ந்து இருந்தது .
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...