Saturday, 8 December 2018

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-5



இந்து மதத்தின் வரலாறு-பாகம்-5
          -
புனித நூல்கள்
-
 வேதங்கள் என்பது  தெய்வீக உண்மைகளின் வெளிப்பாடு . சமஸ்கிருதத்தில் வேதம்என்ற சொல் அறிவைக் குறிக்கும். இந்து மத முனிவா்கள் இவ்வுண்மைகளை  மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதினார்கள். எனவே நீண்ட காலம் வரை  இதற்கு வரி வடிவத்தை அளிக்கவில்லை. அவா்கள்  வேதங்களைத் தங்களது  நினைவிலேயே பத்திரமாக  வைத்துப் பாதுகாத்து வந்தனர். தகுதி வாய்ந்த மாணவா்கள் கிடைத்தால்  அவா்களுக்கு மட்டும் வாய் வழியாக  கற்றுக் கொடுத்தனா். முனிவா்கள் இல்லற வாழ்வில் ஈடுபடாது தனிமையில்  தவம் புரிந்து வியக்கத்தக்க  நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள். பிரம்மசாரியத்தைக் கடைபிடித்தால்  நினைவாற்றலும்,  மனஆற்றலும்  வளரும் என்பதை நன்கு  உணா்ந்திருந்தனர். அத்தோடு ஆயுளும் அதிகரிக்கும் . தெய்வீக நூல்களில் கூறப்பட்டுள்ள உண்மைகளை  உணா்ந்து கொள்ளும்  திறமையும் அதிகரிக்கும். இத்தகைய திறமையை வளா்த்துக் கொண்டு  வேதங்களில் கூறப்பட்டுள்ள  எண்ணற்ற  உண்மைகளைக் காதால் மட்டுமே  கேட்டு தங்களது நினைவில் தக்கவைத்துக் கொண்டனா். நூல்களைப் பார்த்துப் படிக்காமல் செவிவழியாகக் கேட்டு அறிந்து கொண்டதால்  இந்த உண்மைகள்ஸ்ருதிஎன்று அழைக்கப்பட்டன. ஞானிகளால் பிறா் கண்களில் படாமல்  வைக்கப்பட்ட  உண்மைகளைத் தமிழில்மறைஎன்கிறோம்.
-
ஆரம்ப காலத்தில் ஆசிரியா்கள்  ஒத்த பண்புகளையுடைய  ஒரே நாட்டினராக இருக்கவில்லை. பல்வேறுபட்ட இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். அதிஷ்டவசமாக தெய்வீக உண்மைகளை உணா்ந்த முனிவா்கள்  ஒரு சில வம்சத்தார்களின்  வழியில் தோன்றினர். இவா்கள் தங்களது தூயநெறியினால்  உண்மைகளை நேரில் கண்டவா்கள். அதனால் அவா்கள்ரிஷிகள்எனப்பட்டனா். ரிஷிகள், முனிவா்கள, ஞானிகள்  மறைகளைப்போற்றிப் பாதுகாத்து  செவிவழியாகவே கற்பித்து வந்தனா். நல்ல காரியங்களைச் செய்யும்  சான்றோர்களை இந்து மதம் பாராட்டும். நாளடைவில் வேத உண்மைகளைச்(மறைப் பொருள்களை) சேகரித்து , தொகுத்து வைக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.
-
கிருஷ்ணதுவைபாயனவியாசா்  என்ற முனிவா்  பல்வேறு வழிகளில் முயன்று  வேத உண்மைகளைச் சேகரித்து  தொகுத்து புத்தக வடிவில் அமைத்தார். அவையே வேதங்கள் எனப்பட்டன.வேதங்களை ரிக் வேதம் , சாம வேதம், யஜுர் வேதம் , அதா்வண வேதம்  என்று நான்கு பிரிவுகளாகப்  பிரித்தார். வேதத்தின் பழைய நூல்களில் தற்போது வழக்கில் இல்லாத  சமஸ்கிருதத்தில்  ரிக் வேத பாசுரங்கள்  எழுதப்பட்டிருந்தன.  வேதங்களைச் சீரிய முறையில்  தொகுத்தளித்த
கிருஷ்ண  துவைபாயன வியாசரைவேத வியாசா்  என்று பெருமைப்படுத்தினார்கள். இன்றும் இந்துகள் நன்றி மறவாது  அவரைக் கௌரவிக்கும் வகையில்  அவரது பிறந்த நாளை ஒவ்வோர்  ஆண்டும் கொண்டாடுகின்றனா். அந்த நாள்குருபூா்ணிமாஎன்று சொல்லப்படுகிறது.  குரு என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆசிரியர்  என்ற பொருள் .  இங்குகுருஎன்பது வியாசபகவானை   குறிக்கும் .
-

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் , ஏனைய பொருள்களும்   தெய்வீகத்தன்மை  பொருந்தியது  என்பதே மறைகள் கூறும் மிக முக்கியமான செய்தியாகும் . அஹம்  ப்ரம்மாஸ்மி  ( நான் பிரம்மம் )
தத்வமஸி ( நீதான் அது )
அயம் ஆத்மா ப்ரம்ம ( உள்ளே வசிக்கும் ஆத்மாவே பிரம்மம் )  ப்ரஞானம் பிரம்ம ( உயர்ந்த அறிவே பிரம்மம் ) . என்ற நான்கு முக்கியமான கூற்றுக்கள்  வேதங்களில் உள்ளன .  அவைமகாவாக்கியங்கள்  எனப்படுகின்றன .
  இந்த நான்கு பெரிய வாக்கியங்களள்  மூன்று ஆன்மாவின்  தெய்வீகத் தன்மையையும்  நான்காவது கடவுளின் இயல்பையம் கூறுவதாக உள்ளது .   கடவுள் எங்கும்  எதிலும் இருந்தபோதிலும் , அவர்  ஒவ்வொரு பொருளிலிருந்தும்  ஒவ்வொர் இடத்திலிருந்தும்  சமமாக  வெளிபடுத்துவதில்லை .  இதை விளக்க 100 வாட் பல்புகள்  நான்கினை  எடுத்துக்கொள்வோம் .  அவை நான்கும் ஒரே  மாதிரியான  அளவிலேயே  வெளிச்சத்தைக்  கொடுக்கும் .  எந்தவிதமான வேறுபாடும்  இருக்காது.முதல் பல்பை ஒரு காகிதத்தாலும் இரண்டாவதை இரண்டு காகிதங்களாலும் சுற்றிவைத்துவிட்டு நான்காவதை காகிதம் எதுவும் சுற்றாமல் வைத்து ஸ்விட்சை போட்டால் நாம் நான்கிலிருந்தும் ஒரே அளவான ஒளியைப்பெற முடியாது.ஆனாலும் பல்புகளின் ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுக்கும் திறன் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.அதே போன்றே கடவுள் எங்கும்,எதிலும் நிறைந்திருந்தாலும் வெளிப்படும் வகையில் மாற்றம் காணப்படுகிறது.
தெய்வீக அவதாரங்களிடமும் ஆன்மீக ஒளிபெற்றவர்களிடமும்,ஆன்மீக ஒளி பெற்றவர்களிடமும் கடவுளின் வெளிப்பாடு அதிகமாகத் தெரியும்.பாறை போன்ற உயிரற்ற பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே வெளிப்படும்.வேத சம்மந்தமான இலக்கிங்கள் மனிதனின் தெய்வீக இயல்பை உறுதிப்படுத்துவதுடன் அதன் வெளிப்பாட்டிற்கான வழிமுறைகளை அளிக்கின்றன
பல்வேறு அறிஞர்களின் கணிப்பின்படி வேத சம்மந்தமான நூல்கள் சற்றேறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.வியாவர் எப்போது வாழ்ந்தார் என்பதைப்பற்றிய பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.நிச்சயமாக அவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.கி.மு.4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினி இலக்கண ஆச்சிரியர் மகாபாரதத்தைப்பற்றிய தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.எனவே மகாபாரதத்தின் ஆசிசரியரான வியாசர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.இந்து மதத்தின் சிறப்பினை விளக்கவல்ல வேறு எத்தனையோ புனித நூல்கள் இருப்பினும் வேதங்களில் காணப்படுபவை கண்டுணர்ந்தவர்களால் கூறப்பட்டதால் அதற்கு தனி கௌரவம் கொடுக்கப்படுகிறது. மகான்களின் கூற்றாகையால் அது நம்பகத்தன்மையுள்ள நூல்தானா என்ற கேள்விக்கே இடம் கிடையாது.மேலும் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய ரிஷிகளும்,முனிவர்களும் வேதங்களின் உண்மையை தங்களது சொந்த அனுபவத்தைக்கொண்டு நிரூபித்துச் சென்றுள்ளனர்
-
தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment