அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-15
-
இந்தப் பூஜை , ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் சாரதையின் இரண்டு விதமான
பங்கை உணர்த்துகிறது . திருமணத்திற்கப் பின்
ஸ்ரீராமகிருஷ்ணர் பிரார்த்தனை மூலம் சாரதையிடம் ஆன்மீக எழுச்சியை ஊட்டியதை முன் கண்டோம் .
இதன் விளைவாக
அவளது மனத்தில் ஆன்மீக
உணர்வு அடிப்படையாக வளர ஆரம்பித்தது .
சாதாரண உலக ஆசைகளில் இருந்து அவளது மனம்
விடுபட்டு மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தது . தாம்
செய்த சாதனைகளின் பலன்களை பூஜையின் நிறைவில்
அவளுக்கு சமர்ப்பணம் செய்ததன் மூலம்
ஸ்ரீராமகிருஷ்ணரின் உயர்ந்த ஆன்மீக
வாழ்வின் பொருத்தமான துணையும் எல்லா
விதத்திலும் அவருக்கு ஈடான மனைவியாகயும் ஆனாள் சாரதை
-
சாரதை ஏன் குருதேவர் போலக் கடுமையான
தவங்களைச் செய்யவில்லை ? ’ என்று
சிலவேளைகளில் கேட்கப்படகிறது . ஆம் .
அவள் செய்யவில்லைதான் . ஆனால் ஷோடசி பூஜையின்
வாயிலாக ,
குருதேவரின் ஈடிணையற்ற சாதனைகளின் பலன்களையெல்லாம்
அவள் பெற்றுவிட்டாள் .
-
11.குருதேவரின்திருவடிகளில்
-
சாரதை தன் வாழ்வில் ஆன்மீகப் பயிற்சி , இல்லறப் பயிற்சி என்று
இருவிதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது .
என்று கண்டோம் .
இரண்டிற்கும் அற்புத குருதேவரே குரு . இரண்டாவது பயிற்சியை அவள் ஜெயராம்பாடியிலேயே ஆரம்பித்து விட்டிருந்தாள்
. அது இங்கேயும் தொடர்ந்தது . இங்கே முக்கியமாக அவர் அளித்தது ஆன்மீக
சாதனைகளில் பயிற்சி . எனவே அதனை முதலில் பார்ப்போம் . குருதேவர் சாரதைக்கு அளித்த ஆன்மீகப் பயிற்சியில் பக்தியும் தியானமும் முக்கியமான இடத்தைப் பெற்றன .
அவள் செய்ய
வேண்டியிருந்ததெல்லாம் , சிஷ்யையாக இருந்து ,
குருதேவரிடம் நெருப்பாய் எரிகின்ற
துறவுள்ளத்தையும் , தணியாத தாகத்தோடு கடவுளை நாடிச் செல்லும்
தீவிர ஏக்கத்தையும் அப்படியே தன்னுள்
இழுத்துக் கொண்டு
, தன் வாழ்வில் இணைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்
.
-
ஒருநாள்
குருதேவர் சாரதையை அழைத்து வானத்தில் உள்ள சந்திரனைக் காட்டி , ‘ இதோ பார் ,
எல்லா குழந்தைகளுமே வானத்து நிலவை அம்புலி மாமா
என்று உறவு கொண்டாடுகின்றன . அந்தச் சந்திரனைப் போலவே
கடவுளும் எல்லோருக்கும் பொதுவானவர்
. இவர் அவர் என்று இல்லாமல்
, எல்லோருக்குமே அவரை அழைக்கும் உரிமை உண்டு .
அவரைத் தனக்கே உரியவர்களாக ஆர்வத்துடன் அழைப்பவர்கள் எல்லோரும் அவருடைய பேரருளைப் பெறுகிறார்கள் .
நீயும் உன் மனத்தை இறைவனிடம் திருப்பி ,
முழு மனத்தோடும் உரிமையோடும் அப்போது அவரை அழை . அப்போது
அவரை அடைய முடியும்
’ என்றார்
-
. இந்த உபதேசத்தை ஷோடசி பூஜைக்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவர் சாரதைக்குக் கூறிளார்.அவர் இந்த உபதேசத்தைச் செய்த முறையும் அந்த வேளையில் சாரதைக்கு இருந்த மிக உயர்ந்த மனநிலையும்.இந்த உபதேசம் என்றும் மறையாமல் அவள் மனத்தில் ஆழமாக நிலைக்கும்படிச் செய்துவிட்டன.
-
மற்றொருநாள் சாரதை குருதேவருக்கு உணவளிக்க இன்னொரு பக்தையுடன் அவர் அறைக்குள் நுழைந்தபோது குருதேவர் தெய்வீகப் பரவச நிலையில் ஆழ்ந்திருந்தார்.சாரதையைப் பார்த்ததும் மிக ஆழ்ந்த உணர்வோடு தெய்வீக விஷயங்களைப் பேசத் தொடங்கினார்,நெடுநேரம் பேசத் தொடங்கினார் .சாரதையும் அந்த தெய்வீகப்பரவசத்தால் ஈர்க்கப்பட்டு தம்மை மறந்து சூழ்நிலையை மறந்து அதைக்கேட்கத்தொடங்கினார்.இரவு முழுவதும் பரவச நிலையில் கேட்டுக்கொண்டே இருந்தார்.இரவு கழிந்து பகல் வந்த பிறகுதான் அவளுக்கு இரவு முழுவதும் உபதேசம் கேட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது.
-
குருதேவருக்கும் அவரது பக்தர்களுக்கும் நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணிவிடைகளைகளுக்கு இடையிலும் மிக நீண்ட நேரத்தை அவள் ஜபத்திலும் தியானத்திலும் கழித்தாள்.அந்த நாட்களில் தினமும் ஒரு லட்சம் ஜபம் செய்ததாக அன்னை பின்னாளில் கூறினார்
-
உயர்ந்த தெய்வீகப் பரவசநிலைகளிலிருந்து சாதாரண உணர்வு நிலைக்கு வரும்போது குருதேவர் சிலவேளைகளில் பராசக்தியின் உணர்வுகளில் திளைப்பார்.அந்த நேரங்களில் தம்மை தேவியின் பணிப்பெண்ணாகக் கருதுவார்.அது மட்டுமின்றி சாரதையையும் பிறரையும்கூட அவர் அவ்வாறே பார்ப்பார்.அப்போது சாரதை குருதேவரைப் பெண்ணாக அலங்கரிப்பாள்.பின்னர் தம்மையும் தேவியின் பணிப்பெண்ணாக கருதி தேவியின் சிந்தனையில் ஆழ்வாள்
-
ராஜயோகத்தில் அவளுக்கு பயிற்சி அளித்தார் குருதேவர்.தம் கைப்படவே மனிதவுடலின் ஆறு சக்கரங்கள் குண்டலினி சக்தி ஆகியவற்றைப் படமாக வரைந்தும் அவளுக்கு விளக்கினார்.
-
தொடரும்..
No comments:
Post a Comment