-
பூர்வீகமும் பெற்றோரும்
-
மேற்கு வங்காளத்தில் பாங்குரா மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையிலுள்ள ஒரு சிறிய கிராமம் ஜெயராம்பாடி . கல்கத்தாவிலிருந்து சுமார் அறுபது
மைல் தூரத்தில் உள்ளது எங்கு பார்த்தாலும் பச்சைப் பசும் வயல்கள் . இடையிடையே தாமரையும் ஆம்பலும் பூத்துக் கிடக்கின்ற தடாகங்கள் . அவற்றில் நீந்திக் களக்கின்ற மீன்கள் . ஓங்கி உயர்ந்த மரங்கள் . அவற்றில் அமர்ந்து கொஞ்சுமொழி பேசிக் களிக்கின்ற பறவையினங்கள் . மரக்கூட்டங்களின் இடையிடையே வைக்கோல் கூரை வேய்ந்த சிறு குடிசைகள் . வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கின்ற முதியவர்கள் , தெருக்களில் விளையாடி களிக்கின்ற சிறுவர்கள் – இப்படி இன்றுகூட எளிமை கலந்த ஒரு தனிஎழிலை அந்த கிராமத்தில் நாம் காண முடியும் . சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் , முகர்ஜிகளின் பரம்பரையில் வந்தவர் ராமசந்திரர் . எளிமை , அமைதி ,
புனிதம் போன்ற பண்புகள் நிறைந்தவர் . அவரது பண்புகளுக்காக ஊரார் அவரை மிகவும் மதித்தனர் . அவருக்கு திறைலோக்யநாதர் , ஈசுவர சந்திரர் , நீல மாதவர் என்று மூன்று தம்பியார் இருந்தனர் . திரைலோக்யர் சிறந்த சமஸ்கிருத பண்டிதர் ஆனால் இளமையிலேயே இறந்துவிட்டார் . ஈசுவரசந்திரரும் நீலமாதவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை . சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர் . விவசாயம் மற்றும் புரோகிதத் தொழிலின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தனர் . அவர்களால் செலவுகளைச் சமாளிக்க முடிந்ததே தவிர ,
செழிப்பாக வாழ முடியவில்லை . ஏழையாக இருந்தாலும் அறநெறி நிற்பவராக , அந்த்ணலட்சியங்களில் வழுவாதவராக இருந்தார் ராமசந்திரர். அன்னை தம் தந்தையைப்பற்றி பின்னாளில் கூறினார் , ‘அவர்
ஓர் உத்தமர் , ஸ்ரீராமரின் சிறந்த பக்தர் . அந்தண லட்சியத்தில குன்றாத ஈடுபாடு கொண்டவர் யார் எதைக் கொடுத்தாலும் உடனே வாங்கிட மாட்டார் . பொதுவாக கிராம மக்களிடம் நாம் காணக்கூடிய தன்னிறைவும் விருந்தோம்பலும் ராமசந்திரரிடம் மிகையாகவே காணப்பட்டது . இதை விளக்குகின்ற நிகழ்ச்சி ஒன்றை காண்போம்
-
தொடரும்..
. அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு 9003767303
No comments:
Post a Comment