அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29
-
-
தவறு செய்த ஒருவருக்குத்
தண்டனை கொடுக்குமாறு அன்னையிடம் கூறியபோது அன்னை , நான் அவனது தாய் . நான் அவனுக்கு
எப்படி தண்டனை கொடுக்க முடியும்? என்று கேட்டார்ஒரு
பக்தரிடம் போக்கை ப்பற்றி யோகின்மா அன்னையிடம் கூறி அம்மா அந்த
பக்தரை சற்று கண்டித்து வையுங்கள் . இல்லாவிட்டால்
அவா் இன்னும் மோசமாகப் போவார்” என்றார். அதற்கு அன்னை கூறினார். யோகின் நான் கண்டிப்பேன்
என்று தோன்றவில்லை. நான் சொன்னாலும் அதன் படி
அவனால் வாழ இயலாது. நான் அவனது குரு
. என் பேச்சைத் தட்டி நடக்க நோ்ந்தால் அது
அவனுக்குத் தீமை செய்யும். அன்னையின் சீடரானஇளைஞா் ஒருவரின் நடத்தையில் தவறு நோ்ந்தது. வயதான பக்தர் ஒருவா் அன்னையிடம் இதைக்கூறி
இனி அவரை அங்கே வர விடக் கூடாது. என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அன்னை கூறினார். என்னிடம் வராவிட்டால் வேறு யாரிடம் போவான்.? நான்
என்ன நல்லவா்களுக்கு மட்டும் தானா அன்னை?தீயவா்களுக்கு நான் அன்னை இல்லையா என்ன? பிரபல
நடிகைகளான தின்கடியும் தாரா சுந்தரியும் அவ்வப்போது அன்னையைத் தரிசிக்க வருவதுண்டு. ஆனால் அவா்கள் பூஜையறையின்
உள்ளே செல்வதோ அன்னையைத் தொட்டு வணங்குவதோ கிடையாது. பூஜையறையின்
வெளியே நின்று கொண்டு மிகுந்த பணிவுடன் அன்னையை
வணங்குவார்கள். அன்னையும் பிரசாதம்பெற்று செல்லுமாறு கூறுவார். பிரசாதம் சாப்பிட்ட
பிறகு அன்னை தமது கைகளால் வெற்றிலை சுருள் கொடுப்பார். கவனமாக அன்னையைத்தொடாமல் அவா்கள்அதைப்பெற்று
கொள்வார்கள்.ஒரு நாள் அவா்கள் சென்ற பிறகு
அன்னை கூறினார். இவா்களுடையது தான் உண்மையான பக்தி . பகவானைக் கொஞ்சமே நினைத்தாலும்
, மனப்பூா்வமாக ஒருமைப்பட்ட மனத்துடன் நினைக்கிறார்கள்.எப்படி
ஜபம் செய்வது? எத்தகைய சிந்தனையுடன் ஜபம் செய்கிறாயோ அந்தச்சிந்தனைதான் உன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும்.
குருதேவா் என்னுடையவா் என்று எப்போதும் நினை.
மனிதன் என்றால் தவறுகள் செய்யத்தான்
செய்வான். அவற்றை நாம் பொருட்படுத்தக் கூடாது. பிறரது குற்றங்களை க் காண்பதால் ஒருவன் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்கிறான்.
குற்றங்களைக் கண்டுபிடித்து கண்டுபிடித்து
கடைசியில் அது அவனது இயல்பாகவே ஆகிவிடும்.
யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களை க் காண த் தொடங்கினால் அதுவே கடைசியில்
உன் இயல்பாகி விடும். ஒரு பக்தை தனக்கும் தனது
தோழிக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தைப்பற்றி அன்னையிடம் தெரிவித்தார். அதற்கு அன்னை கூறினார்.
இதோ பாரம்மா மனிதா்களை நேசித்தால் துன்பமும் துயரமும் அனுபவித்தே யாக வேண்டும். யாரால்
பகவானை நேசிக்க முடியுமோ அவன் பாக்கியவான்.
அவனுக்கு துன்பமோ துயரமோ இல்லை. ஒரு பக்தர்
அம்மா நான் எவ்வளவோ ஜபதவங்கள் செய்கிறேன்
. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.கிடைப்பதற்கோ
விலைகொடுத்து வாங்குவதற்கோ கடவுள் மீனோ ,காய்கறியோ
அல்லவோ! ஒரு பக்தா் அம்மா மனதில் கெட்ட எண்ணங்கள் ஏன் எழுகின்றன.?சாதாரண மனத்தின் இயல்பு
கீழ்நோக்கி ப் போவது தான். மனத்தைப் பலவந்தமாக பிடித்து அணை போட்டு வைக்கிறான் மனிதன்.
ஆனாலும்அதுஅவ்வப்போது உடைத்துக் கொண்டு வெளியேறிவிடுகிறது. ஆனாலும் தொடர்ந்து முயற்சி
செய்ய வேண்டும். நல்லவா்களின் தொடா்பாலும் நல்ல விஷயங்களை சிந்திப்பதாலும் மனம் உயா்ந்த நிலையை நாடுவது உண்மை. மிகக் கீழானவா்களின் மனம் கூட சாதுக்களின் அருளால் தன் போக்கை மாற்றி விடும்.
பிருந்தாவனத்திலுள்ள அந்தச் சாதுவின் விஷயம் உனக்குத் தெரிந்தது தானே? அவா் பொன்னைத்
தேடித் திரிந்தார். ஒரு மகானின் அருளால் அவருக்கு ஞானம் உண்டாகியது.
அதன் பிறகு எந்த உலோகத்தையும்பொன்னாக்கக்கூடிய பரிச மணி கிடைத்தும் அதைத் தூக்கி எறிந்து விட்டாரே!ஒரு வேடன் சாதுவாக
வேடமிட்டுக்கொண்டு பறவைகளைப் பிடிக்க ச் சென்றான்.
சென்ற இடத்தில் பறவைகளின் சரளமான இயல்பையும் பயமின்மையும் கண்டான். அதைக் கண்ட போது அவனுக்கு வைராக்கியம் தோன்றி விட்டது. வேடத்தொழிலை விட்டு விட்டான். அதனால் தான் சத்சங்கம் அவசியமாகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூயவா்களின் துணையை நாடு. அத்தகை தொடா்பு கிடைக்கவில்லை
என்றால் நல்ல நூல்களைப் படி . மகான்களின் வாழ்க்கையைச்
சிந்திக்கும் தோறும் மனம் தூய்மை பெறுகிறது.
தண்ணீா் எப்போதும் பள்ளத்தை நோக்கியே பாய்கிறது.
ஆனால் சூரியனுடையகிரணங்களின்தொடா்பு பெற்றால்
அதே தண்ணீா் ஆகாயத்தை நோக்கி எழுகிறது. மலைகளின் உச்சியில் பனியாக தங்குகிறது. மழை,நதி, அருவி என்றெல்லாம் வந்து உயிர்களுக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. குருதேவர்
பெரியவரா ? அன்னை பெரியவரா? சீ, இதெல்லாம் ஒரு பேச்சா?(சிறிது நேரத்திற்குப் பிறகு) உனக்கு
எப்படி தோன்றுகிறது.? சிவ பெருமானின் மீது
நிற்பவள் அல்லவா காளி! அன்னை (மென்னையாக ச்
சிரித்தபடி ) நீ அப்படியே நினைத்துக் கொள்ளலாம் அம்மா உங்களை மக்கள் பகவதி என்கிறார்களே! மக்கள் என்ன சொல்வது நானே சொல்கிறேன். பலரும் குருதேவரை
பகவான் என்கிறார்கள் . நீங்கள் யார்? அவா் பகவான் என்றால் நான் பகவதி .அம்மா! பல அவதாரங்களில் அவதார புருஷா்கள் தங்கள் சக்தி அதாவது மனைவி மறைந்த பிறகே
உடம்பை விட்டார்கள். ஆனால் இந்த முறை
ஏன் குருதேவர் உங்களுக்கு முன் சென்று விட்டார்.? மகனே! குருதேவர் உலகையே அன்னை
வடிவாகக் கண்டார். தாய்மை என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே என்னை விட்டு ச் சென்றார்.
.
No comments:
Post a Comment