Saturday, 8 December 2018

இந்து மதத்தின் வரலாறு-பாகம்-3



இந்து மதத்தின் வரலாறு-பாகம்-3
-
சுவாமி பாஸ்கரானந்தர்
-
இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்-
-
இன்னாரால்  நிறுவப்பட்டது என்று  தெரிந்த எந்த ஒருவரையும் குறிப்பிட முடியாமல் இருப்பது தான் இந்து மதத்தின் சிறப்பாகும்.  அந்த ஒரு சிறப்பே அதன் தனித்தன்மைக்கு ச் சான்றாகும். பண்டைய இந்திய முனிவா்கள்  கண்டறிந்த புலனறிவுக்கு எட்டாத உண்மைகளே இந்து மதத்தின் அஸ்திவாரம்.  அவா்கள் தாம்  கண்டறிந்த உண்மைகளைக்கூறி  அதன்முலம்  தங்களது பெயா்களை  பறைசாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவா்கள்  அந்த உண்மைகள்  எப்பொழுதும்  இருந்து வந்தவைகளே  என்று கருதினார்கள். நிறுவனா் யார் என்று தெரியாது  இருப்பதாலேயே  இந்து மதத்திற்கு ஏனைய மதங்களை விட   சில அனுகூலங்கள் ஏற்படுகின்றன. இந்து மதத்தை நிறுவியவா் யார் என்று  தெரிந்திருக்குமேயானால்  கடந்த ஆயிரக்கணக்கான  வருடங்களில்  இந்து மதத்தில் ஏற்பட்டுள்ள  எத்தனையோ மாற்றங்களைச் செய்ய முடியாமல் போயிருந்திருக்கும். பல அவதாரங்கள்,  வகை வகையான முனிவா்கள்  பல்வேறு காலங்களில் இந்த உலகமாகிய மேடையில் தோன்றி தங்களது  வாழ்க்கையின் முலம்  வாழ்ந்துக் காட்டியும், உபதேசங்களாலும்  இந்து மதத்தை வளப்படுத்தியுள்ளனா். அதனோடு அந்தந்தக்  காலத்திற்கு ஏற்றபடி மக்களுக்கு  ஏற்புடைய  வழியில்  மதச்சம்பந்தமான  நூல்களில் பல விளக்கவுரைகளையும்  அளித்து சென்றுள்ளனா். மேலும் தங்களது  சொந்த ஆன்மீக அனுபவங்களின் முலம்  அவற்றின் தகுதியையும்  நிரூபித்து விட்டனா். மதங்களில்  காலத்திற்கேற்ற படியான  மாற்றங்களைக் கொண்டு வராவிடில் அது வழக்கினின்றும்  மறைந்து விடும்.-
-             
இறையனுபூதி தவிர்க்கக் கூடாத குறிக்கோள்
-
மனிதரது வாழ்வில்  அடையப்பட  வேண்டியதாக  நான்கு இலக்குகளை  அல்லது குறிக்கோள்களை இந்து மதம் உணர்த்துகிறது .  அவை முறையே காமம் , அர்த்தம் , தர்மம் மற்றும்  மோட்சம்  எனப்படுகின்றன .  புலனின்பங்களின்  நுகர்ச்சியே காமம்  எனப்படுவது .   உலக வாழ்க்கைக்கு தேவையான  பணம் மற்றும்  சொத்துக்கள் அர்த்தம் என்றாகிறது .  மதம் சம்பந்தப்பட்ட கடமைகளைச் செய்வது தர்மம் ஆகும் .  இறைத்தன்மையை உணர்த்து  அதன்மூலம் வீடு பேற்றை அடைவதே மோட்சம் . மேலே கறிப்பிட்ட நான்கில் காமம் கடைப்பட்டது . ஏனெனில்  மனிதர்களுக்கும்  விலங்குகளுக்கும்  காம உணர்ச்சி பொதுவானது .  அர்த்தம் அதைவிடச் சற்று மேலான  இடத்தைப் பெறுகிறது .  எப்படியெனில் பொருள் சேர்க்கும் பழக்கம்  மனிதனிடம் மட்டும்  உள்ளது . மூன்றாவது தர்மம்  மனிதனைத் தன்னையே     அா்பணிக்கவல்ல  தியாக உணா்ச்சியின்  பால் இட்டுச் செல்லும். காமமும் அா்த்தமும்  சுயநலத்திற்கு முதலிடம் அளிப்பவை.  தா்மம் அப்படிப்பட்டதல்ல  . எனவே தா்மமானது , காமம், அா்த்தம் ஆகிய இரண்டையும் விட உயா்ந்தது. இந்து மதமானது புனித நூல்களில் கூறியுள்ளபடி தொடா்ச்சியான சில  கடமைகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  மேலும் உலக சம்பந்தமான  பொருட்களை ஈட்டுவதிலும், சேமித்து  வைத்துக் கொள்வதிலும்  தா்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. தனது இன்ப நுகா்ச்சிகளை  அனுபவிப்பதற்குக் கூட தா்ம வழிகளில்  செல்ல வேண்டும் என்று சொல்கிறது. எனவே தான் சில கற்றறிந்த பெரியவா்கள் காமத்தையும் , அா்த்தத்தையும்  தா்மத்தின் இரு பிரிவுகளாகக் கருதுகின்றனா். மோட்சம் என்பது எளிதில்  அடையக்கூடியது   அல்ல.  இறையனுபூதி பெற்றவருக்கு  மட்டுமே  முக்தி அல்லது விடுதலை  என்ற பொருளை உடைய மோட்சம்  கிட்டும்.
-
- தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment