Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-12


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-12

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைக்கு தேவையான  உணவு , உடை , தங்குமிடம் முதலியவற்றை இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பெறுகிறான் .  அந்தக் கடனை மீட்டுவது  அவனது கடமையாகிறது . அதற்காகத்தான் அவன் வாரிசை உருவாக்குகிறான் . அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச  சக்கரம் தடையின்றிச் சுழல்வதற்கு  பெண் இருவரின் லட்சியமும்  இறைவாழ்வே  . இடையில்  கடமையின் ஓர் அழைப்புதான்  திருமணம் என்னும் புனித பந்தமும்  நல்ல வாரிசை உருவாக்குவதும் . இதுவே  வேதகால லட்சியமாக இருந்தது .  காலப்போக்கில்  இந் லட்சியம் நீர்க்கத் தொடங்கியது . இதனுடன் அன்னியக்    கலாச்சாரங்களின் தொடர்ந்த ஆக்கிரமிப்பினால் எல்லாம் தலைகீழாகியது .  இதனால் நமதுநாடு அடைந்துள்ள கதி நம் அனைவருக்கும் தெரிந்ததே . இந்த நிலையை மாற்றி வேத கால திருமண லட்சியத்தை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வது காலத்தின்  தேவையாயிற்று . அதனைப் பூர்த்தி செய்யவே  சாரதைஸ்ரீராமகிருஷ்ணர் திருமண வாழ்வு . ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதையின் மூலம்  தம் வாழ்க்கையின் மிகப் பெரிய சோதனை ஒன்றை மேற்கொள்ள எண்ணினர் . அவர் முறைப்படி சன்னியாசம்  ஏற்றுக் கொண்டவர் . அவர் திருமணமானவர் என்பது தெரிந்தபோது  அவரது குருவான தோதாபுரி கூறினார்ஒருவனிடம் ஆண் , பெண் என்ற வேறுபாட்டுணர்ச்சி  இருக்கும்வரை அவனது மகனம் தூய்மை பெற்றதாக கூற முடியாது . இந்த நிலையைக் கடந்து  எங்கும் ஒரே பரம்பொருளைக் கண்டவனை மட்டுமே பிரம்ம ஞாணி ,   பிரம்மத்தில்  நிலை  பெற்றவன் என்று கூற முடியும் . அத்தகையவனுக்கு  மனைவி ஒரு தடையே அல்ல . ’  இந்தக் கருத்தைத் தம் வாழ்வில்  சோதித்து பார்க்க எண்ணினார் ஸ்ரீராமகிருஷ.ணர் . ஒருநாள் இரவு சாரதை  ஸ்ரீராமகிருஷ.ணரின் அருகில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள் . அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தம் மனத்திடம் , ‘ மனமே  ! இதோ இதுதான் பெண்ணின் உடல்  என்பது .  மனிதர்கள்  இதனை இன்ப நுகர்ச்சிக்கு  உரிய மிகவும்  கவர்ச்சியான பொருளாகக் கருதுகின்றனர் ,  இதை அனுபவிப்பதற்காகத் துடிக்கின்றனர் .  ஆனால் ஒன்று , இதனை  நாடினால்  இதிலேயே  கட்டுப்பட்டவனாகத்தான் வாழ முடியும் .  அதற்க  மேல் சென்று சச்சிதானந்த மயமான  இறைவனை உணர முடியாது .  மனமே ! “ உணர்வு வீட்டில் திருட்டுக்கு இடம் கொடுக்காதே ,  உள்ளே ஒன்று , புறத்தே  வேறொன்று  என்றிருக்காதே , உண்மையைச் சொல் ,  உடம்பு வேண்டுமா ,  இல்லை இறைவன் வேண்டுமா ? உடம்பு வேண்டுமென்றால்  , இதோ உன்  முன்னர்  இருக்கிறது . அனுபவித்துக் கொள்  என்று கூறியபடியே சாரதையின் உடலை தீண்ட எத்தனித்தார் . மறுகணமே  அவரது மனம்  பின்னடைந்து அழ்ந்த சமாதியில் மூழ்கிற்று இரவு முழுவதும் அவருக்குப் புறநினைவு  திரும்பவில்லை .   அடுத்த நாள் காலையில்  பலமுறை  அவரது  செவிகளில்  இறைவனின்  திருநாமத்தைச் சொல்லி  , மிகுந்த முயற்சியுடன்தான் அவரைப் புற நினைவு பெறச் செய்ய முடிந்தது
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303
-
அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-12

 ஸ்ரீராமகிருஷ்ணரும் சாரதையும்  வாழ்ந்த   உயர்வாழ்வின் ஓர் அம்சத்தை மேலே கூறப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம்  நாம் காண முடிகிறது .   உடல் நினைவு என்பதே அங்கு இல்லை .  இந்த உன்னதப் பெருவாழ்வில்  இருவருக்கும் சம பங்கு  இருப்பதை நாம்  மறக்கலாகாது . சாரதையின் வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான  சுவாமி தபஸ்யானந்தர் எழுதுகிறார்ஸ்ரீராமகிருஷ்ணரின்  புனித வாழ்வில் சாரதையின் பங்கை  இன்னமும் உலகம் அறிந்த  கொள்ளவில்லை . இத்தகைய ஒரு  கலப்பற்ற  புனித  வாழ்வை  அவர்கள் வாழ்வதற்கு  ஸ்ரீராமகிருஷ்ணரின்  உயர்நிலையும் புனிதமும்  மட்டுமே காரணமாகக்  காட்டப்படுகிறது .  அது சரியல்ல . சாரதைக்கு  அதில் சம பங்கு உள்ளது .  அவரைப் போன்ற  உயர்நிலையும்  புனிதமும்  தன்னிடம்  இல்லாதிருந்தால்  எப்படி அவளால்  அந்த லட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.  அவரது லட்சிய  வாழ்விற்கு எப்படித் துணை  நின்றிருக்க முடியும் ? ’ அற்புத தம்பதியர்  இருவரும் ஒரே அறையில் ஒரே கட்டிலைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறினோம் . அவர்களின்  இரவுகள் எப்படி கழிந்தன  ? ஸ்ரீராமகிருஷ்ணர் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தெய்வீக  நிலைகளில் திளைப்பார் . வியப்பும் அச்சமும்  ததும்ப  அவரைப் பார்த்த வண்ணம்  சாரதை இருப்பாள் .   அந்த நாட்களைப்பற்றி பின்னாளில் அன்னை கூறியதுண்டு .  குருதேவர்  அனுபவித்த தெய்வீக  நிலைகளை வார்த்தைகளால்  விளக்க இயலாது . பரவச நிலையில் சிலசமயம் அழுவார் , சிலசமயம்  சிரிப்பார் ,  சிலசமயம் ஆடாது அசையாது  ஆழ்ந்த சமாதியில்  லயித்திருப்பார் . சில நாட்கள்  இரவு முழுவதும் சுயநினைவு இன்றியே  அப்படியே கிடப்பார் .  அச்சத்தாலும் ஆச்சிரியத்தாலும்  என் உடல் நடுங்கும் .  அப்போதெல்லாம்  பரவசநிலை  என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது . எப்போது விடியம் என்ற கவலையுடன் காத்திருப்பேன் . ஒருநாள்  சமாதிநிலை வெகு நேரம் நீடிக்கவே  ,  பயந்துபோய்  ஹிருதயனை  அழைத்து வரச்செய்தேன் . அவன் வந்தான் .  குருதேவரின் காதுகளில்  இறைவனின் நாமத்தைப்  பலமுறை
ஓதினான் .  அதன்பிறகு சிறிதுசிறிதாக   அவருக்குச் சுயநினைவு  வரத் தெடங்கியது .   என்நிலைமயை உணர்ந்து கொண்ட  குருதேவர்  ,  இன்ன மாதிரியான  சமாதி வேளைகளில்  இன்னின்ன  மந்திரத்தைத்   காதுகளில்  ஓத வேண்டும்  என்று எனக்குக்  கற்றுத் தந்தார் .   அவர் கூறியதுபோல் ,  அந்தந்த  சமாதி  நிலைக்கு  உரிய மந்திரங்களை உச்சரித்து  , அவர்  சயநினைவு  பெறுவதைக் கண்ட பின்னர்தான்  என் பயம் ஒருவாறு  நீங்கியது .  ஆனால் அவர் எப்போது  சமாதி நிலையில் ஆழ்வார்  என்று தெரியாத  நிலையில்  , சிலசமயம்  இரவு முழுவதும்  கண்விழித்தபடியே அமர்ந்திருப்பேன் .  எனது இந்த சங்கட நிலைமையை அவர் புரிந்து கொண்டார் .  மாதக்கணக்காக  ஆகியும் அவரது  சமாதி நிலைகளுக்கேற்ப என்னால் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள  முடியவில்லை  என்பதைக் கண்ட அவர் ,  அதன்பின் என்னை அங்கே  தங்க  அனுமதிக்கவில்லை தம் தாயுடன்  நகபத்திலேயே  தங்கும்படி் கூறிவிட்டார்
-

தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303
-

No comments:

Post a Comment