இந்து மதத்தின் வரலாறு-பாகம்-2
-
சுவாமி பாஸ்கரானந்தர்
-
உலகம் எங்கிருந்து எப்படி வந்தது ?
-
படைப்பவர் என்று ஒருவர் இருந்தால் அவர் எப்படி இருப்பார் ? அவருக்கும் படைக்கப் பட்டவைகளுக்கும் இடையே இருக்கும் உறவு எத்தகையது ? நாம் இறந்தால் நமக்கு என்ன நேரிடுகிறது ? இறப்பிற்குப் பிறகு நாம் இருக்கிறோமா ? பிறப்பதற்கு முன்பு நாம் இருந்தோமா ?
-
நாகரிகம் தோன்றத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதனின் உள்ளத்தில் மேலே கூறப்பட்ட வினாக்கள் தொல்லை
கொடுக்க ஆரம்பித்தன. மிக அதிக அறிவு கூர்மையுடையவர்களால் கூட அதற்கான பொருத்தமான விடைகளை அளிக்க முடியவில்லை
. ஆன்மீகத் துறையில் ஈடுபட்ட சிலரது தூய்மை
மிகுந்த மனத்தில்
சில உண்மைகள் தோன்றின.
-
அவற்றைத் தொகுத்துப் புத்தக வடிவில் அழித்தனா் . அவையே சமய நூல்கள் எனப்பட்டன.
-
இந்து சமய நூல்களில் காணப்படும் உண்மைகளை தூய்மையற்ற மனமுடையவா்களால் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய சிறப்பு வாய்ந்தவை இந்து சமய நூல்கள்.
தூய்மையான மனம் , தூய்மையற்ற மனம் ஆகிய இரண்றிற்கும் இடையே உள்ள வேற்றுமையை கீழ்க்காணும் உவமையால் விளக்கலாம். நீர்,பனிக்கட்டி,நீராவி, ஆகிய முன்றுமே
ஒரே ரசாயனப் பொருளைச் சோ்ந்தது.
ஆனாலும் அவற்றின்
தன்மையைப் பொருத்து
வேறுபடும். இந்த முன்றினுள்ளும் பனிக்கட்டிக்கு சுதந்திரமே கிடையாது.
அது அசையவே முடியாது. தண்ணீருக்கு அதை விடச்சற்று சுதந்திரம் உண்டு. அது சுலபமாகப் பாயும்.
பரவும் தன்மை கொண்டது. நீராவிக்கு அதிக பட்ச உரிமை உண்டு.
அது எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் பரவலாம். கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் நுண்ணியதும் கூட. பனிக்கட்டியும் தண்ணீரும் புக முடியாத இடத்திற்கும் கூட அதனால் போக முடியும். அது போன்றதே
மனித மனமும் . எவ்வளவு தான்
அறிவின் ஆழம் அதிகமிருப்பினும் அந்த மனத்திற்கு அநேக வரையறைகள் உண்டு.
அந்த மனத்திற்கு புலன்களால் அறிந்து கொள்ளக் கூடியவற்றைத் தாண்டி
எதையும் அறிந்து கொள்ள முடியாது. வெளியையும் காலத்தையும் கடந்து என்ன நேரிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அடுத்த விநாடி என்ன
ஏற்படப் போகிறது என்பதையோ , கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையோ
அதனால் கூற முடியாது. உள்ளம் பற்றிய விளக்கவியல் கூறும் உண்மைகள்
அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை உணரக்கூடிய அறிவு
போன்றவை அத்தகைய மனத்திற்கு அப்பாற்பட்டவையாகும்.இதே மனத்தை ஆன்மீக க் கோட்பாடுகளால் சிறந்த பயிற்சிகள் அளித்து தூய்மை ஆக்கி விடலாம். அப்போது
அது புலன்களுக்கு எட்டாத எல்லைகளைக் கடக்கும் வல்லமை பெற்றுவிடும். அத்தோடு
அசாதாரணமான வலிமையும் பெற்று விடுவதால் புலனின்பங்களைக்
கடந்து என்ன இருக்கிறது என்ற அறிவும் ஏற்பட்டு விடும். அப்போது
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் தகுதி வரும். அதனால் கடந்த காலத்தில் நடந்தவை , தற்போது நடப்பவை , எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் ஆகிய அனைத்தையும் ஞானக்கண்ணினால் காண முடியும். ஓா் உண்மையான முனிவரிடம் அத்தகைய தூய்மையான உள்ளம் இருக்கும். அத்தகைய மனத்தில்
துணைகொண்டு அவா் கடவுளைப்பற்றிய உண்மைகள் , ஆன்மாவைப்பற்றிய அறிவு , படைப்பு ஆகியவற்றை அறிகிறார்.( அவா்கள் முக்காலமும் உணா்ந்தவா்கள்)
- தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
No comments:
Post a Comment