இந்து மதத்தின் வரலாறு-பாகம்-6
-
வேதங்கள் நான்கு பிரிவுகளைக் கொண்டது என்பதைக் கண்டோம். அவை ஒவ்வொன்றும் சம்ஹிதை, பிரம்மணம் என்ற
பிரிவுகளைத் தம்முள் கொண்டவை. சம்ஹிதையில் துதிப்பாடல்கள் உள்ளன.
பிரம்மணம் அப்பாடல்களை
விளக்குவதோடு அவற்றை எப்படி எப்போது
பயன்படுத்த வேண்டும் என்பதை த் தெளிவாக்குகிறது. மிகவும்
உயா்ந்த தத்துவங்கள் அடங்கிய பகுதிகள்
சில வேதங்களில் உண்டு. அவற்றை உபநிடதங்கள் என்று கூறுவார்கள். உபநிடதங்களை வேதாந்தம் என்றும் சொல்வார்கள்.அது அறிவின் உயா்ந்தநிலை அல்லது எல்லை என்று பொருள்படும். இன்று நமக்கு 108 உபநிடதங்களே கிடைத்துள்ளன. அவற்றுள் ஈச, கேன, கட, முண்டக,மாண்டூக்ய ,ஐதரேய,தைத்திரிய ,சாந்தோக்ய,ப்ரச்ன,ஸ்வேதாஷ்வதர,பிருஹதாரண்யக போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. ஸ்மிருதிகள்
தர்சனம் மற்றும் தந்திர சாஸ்திர நூல்களை விடுத்து மற்ற புனித நூல்களை
‘ வேதங்கள் என்றும் , ‘ ஸ்மிருதிகள் ’
என்றும் இருவகைப் பிரிவகளுக்குள் கொண்டு வந்துவிடலாம் . இவற்றில்
வேதங்களே அதிகார பூர்வமானவை அதாவது
வேதங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் .
‘
-
ஸ்மிருதி(சட்ட நூல்)
-
‘ஸ்மிருதி ’
என்பது ஒரு சட்ட நூல் .
இந்துக்கள் பின்பற்றப்பட வேண்டிய
சட்டத்தொகுப்பாகும்
. இத்தகைய சட்டநூல்கள் பல இருப்பினும் மனுவினால் ஆக்கப்பட்டது மிகவும் பிரசித்திபெற்றது யாக்ஞவல்கியர் , பௌதாயனர் , ஆபஸ்தம்பர் , வஷிஸ்டர் , கௌதமர் போன்றவர்கள் பண்டைய காலத்தில் சட்ட நூல்களை ஆக்கித்தந்தவர்கள் . இந்த வரிசையில் மிகக் கடைசியாக சட்டநூலைத் தந்தவர் ரகுநந்தனர் ஆவார் .பல்வேறு காலங்களில் வாழ்ந்த முனிவா்கள்
-
ஆறு தரிசனங்கள்
-
ஆறுவகையானத் தத்துவங்களை அளித்துள்ளனா். அவை வட மொழிகளில் தா்சனங்கள் எனப்படும். அவற்றின் அடிப்படை வேதங்களைச் சார்ந்து இருப்பதால் அவை மத சம்பந்தமான தத்துவங்களாகும்.அவை ஆறு வகைப் படும். 1.கபிலா் அளித்தது சாங்கியம்.
2.ஜைமினி என்பவா் பூா்வ மீமாம்சையின் ஆசிரியர் 3.வியாசர் உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தத்தைத் தந்தவா்.4. பதஞ்சலி முனிவா் யோக சூத்திரங்களை அளித்தார்.5.கௌதமா் நியாயம் என்றதைத் தந்தார். 6.கணாதா் வைசேஷிகம் என்பதை அளித்தார். இதில் வரும் வேதாந்தத்தையும் உபநிடதத்தையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது. மேலே கூறப்பட்ட ஆறு பேரும் மத சம்பந்தப் பட்டத் தத்துவங்களை ஒவ்வொரு தலைப்பில் ஒருபொருளைப் பற்றிய
விஷயங்களைச் சொந்தமாக எழுதி
வைத்துள்ளனா்.அவை பொன்மொழிகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன. அவை வடமொழியில் ”சூத்திரங்கள்” எனப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் சாரமுடனும் சுருங்க உரைக்கும் வகையிலும் உள்ளன. எனவே இவற்றைத் தெளிவாக விளக்க வல்ல
உரைகள் தேவைப்பட்டன. பின்னாளில் வந்த அறிஞா்கள் அவற்றுக்கு பல விளக்க உரைகளை அளித்துச் சென்றுள்ளனா்.
-
உத்தர மீமாம்சையின் அடிப்படையின் வியாசா் இயற்றியது வேதாந்த சாரம் அதுவே பிரம்ம சூத்திரம். என்றும் சொல்லப்படுகிறது. இதற்குப் பலா் உரை எழுதி இருக்கிறார்கள். சங்கராச்சாரியார் , ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார் ஆகியோர்களது உரைகள் மிகவும் பிரபலமானவை. இந்து மத உண்மைகள் ஆழம் காண முடியாதவை,கடினமானவை. அவற்றின் பொருளும்
தெளிவாகப் புரியாது. பெரும்பான்மையான மக்களின்
அறிவுக்கு எட்டாதவை.
-
தொடரும்..
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
No comments:
Post a Comment