Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-2



அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-2

-
1864 – ஆம் ஆண்டில் வங்காளம் கடும் பஞ்சத்திற்கு உள்ளாகியது எங்கும் வறுமையின் கோர தாண்டவம். ராமசந்திரர் ஏழைதான் ; விவசாயம் , புரோகிதம் , பூணூல் செய்து விற்பதுஇவற்றின் மூலம் கிடைத்ததை வைத்துதான் குடும்பச் செலவுகளைச் சமாளித்தும் , ஏதோ சேமித்தும் வந்தார் . பிறர் பசியைக் கண்டதும் அவர் மனம் உருகியது . முந்தைய ஆண்டு சேமித்து வைத்திருந்த நெல்லைப் பயன்படுத்தி பசியால் வாடுகின்ற ஏழைகளுக்கு அதை அளிக்கத்தொடங்கினார் .
-
இப்படித்தான் ஒருநாள் தாழ்ந்த குலப் பெண்ணொருத்தி பசியால் எல்லாம் மறந்து வெறிபிடித்தவள்போல் வந்தாள் . கண்கள் சிவந்து , முடியெல்லாம் கலைந்து பைத்தியகாரிபோல் காணப்பட்டாள் . பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களே ,அது அவள் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சரியாக இருந்தது . பரபரப்புடன் வந்த அவன் கண்களில் முதலில் பட்டது மாட்டுத் தொட்டியில் கலக்கி வைத்திருந்த தவிடு.அவ்வளவுதான், அதை அள்ளி உண்ணத் தொடங்கிவிட்டாள். “ அம்மா , அதை உண்ணாதே . உள்ளே கிச்சுடி உள்ளது , போய்ச் சாப்பிடுஎன்று நாங்கள் எவ்வளவோ கூறினோம் . ஆனால் அவள் எங்கே கேட்டாள் ! அந்தத் தவிட்டை சிறிது உண்ட பிறகுதான் அவளுக்கு புறவுலக நினைவே வந்தது . பசியின் கொடுமை என்பது விளையாட்டா என்ன ?’ கணவரின் உயர்பண்புகளுக்கு ஈடுகொடுத்து , அவருக்கேற்ற மனைவியாக விளங்கினார் சியாமா சுந்தரி தேவி. சிகோரைச் சேர்ந்த ஹரிபிரசாத மஜிம்தாரின் மகள் அவர் . வலுவானஉடம்பு , மனம்விட்டு எல்லோரிடமும் பழகும் பாங்கு , இல்லறத்தை இனிதே நடத்தும் திறன் எல்லாம் அவரிடம் ஒருங்கே மிளிர்ந்தன . பின்னாளில் அன்னை தம் தாயைப்பற்றிக் கூறினார் . ‘ என் தாய் மிகவும் எளிமையானவள் , பரிவு மிக்கவள் . எதையும் வீணாக்காமல் மிகுந்த சிரத்தையுடன் சேர்த்துவைப்பாள் . பக்தர்கள் வந்தால் போதும் , அவளது மகிழ்ச்சி எல்லை கடந்து விடும் . “ , என் பேரன் வந்துவிட்டான் , பேத்தி வந்துவிட்டாள்என்று கூத்தாடுவாள் . “ இந்தக் குடும்பமே இறைவனுக்கும் அவளது பக்தர்களுக்கும் உரியது என்பாள் அவள் .
-
பிறப்பு
-
குடும்பத்தின் வருவாயை உயர்த்தப் பாடுபட்டார் ராமசந்திரர் . பட்டணம் சென்று பொருள் ஈட்டுவது என்பது எக்காலத்திலும் கிராமவாசிகளின் கனவு அல்லவா ! ராமசந்திரரும் கல்கத்தா செல்ல எண்ணினார் . ஆனால் முடிவாகவில்லை இருமனமாக இருந்த வேளையில் ஒருநாள் அதைப்பற்றி எண்ணியவாறே படுத்திருந்தவர் தூங்கிவிட்டார் . அப்போது ஒரு கனவு வந்ததுஅவரது கழுத்தில் இரண்டு பிஞ்சுக் கைகள் அவரைக் கட்டிக் கொள்கின்றன. அப்படியே கண்களைத் திருப்பிப் பார்க்கிறார் ராமசந்திரர் .வைத்த கண்ணை வாங்க முடியாத ஒரு பிஞ்சு முகம் , அதில்  உதிக்கின்ற செங்கதிர் , உச்சித் திலகம் எல்லாம் அவருக்குத் தெரிந்தன . அப்படியோர் அற்புத எழில் . அந்தச் சிறுமிக்கு ஆபரணங்கள் அழகைக்கூட்டுகின்றனவா , இல்லை அவளால்தான் ஆபரணங்களுக்கு அழகு கூடுகின்றனவா! என்று அவரால் முடிவு செய்ய இயலவில்லை . இந்தப் பொன்னகைகளை நாணச் செய்யும் அற்புதப் புன்னகை தவழும் முகம் . இவள் யார் , இவள் யார்ராமசந்திரரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . ‘ அன்பே , நீ யார் ? ’ என்று அவளிடமே கேட்டார் . ’ லீலா வீனோதினியான அந்தபாலா , கேள்விக்கு நேரடியாகப் பதில் ஏதும் சொல்லவில்லை . கழுத்தை  மேலும் இறக்கிக் கொண்டு , ‘ இதோ , நான் உன்னிடம்தான் வந்திருக்கிறேன்என்று கூறிவிட்டு ஒரு மாயப் புன்முறுவல் பூத்தாள் . கனவு கலைந்தது . ஆனால் கனவு தந்த அற்புத கனவும் கலையவில்லை . ‘ பொன்னிறம் ,   பொன்னாபரணம் , சந்திரபிம்பம் போன்ற முகம்இவள் பொன் மகள்தான் . ஆம் , மகாலட்சுமியேதான் என்று தெளிந்தார் அவர் . தாம் பொருள் ஈட்டப் போகின்ற முயற்சிக்குச் செல்வத்தின் தலைவியான திருமகளே அனுமதி அளிப்பதாக எடுத்துக் கொண்டு கல்கத்தா புறப்பட்டார் .
-
தொடரும்..
. அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு 9003767303

No comments:

Post a Comment