அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-16
-
இறையனுபூதி ஒன்றே சாரதையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.நோய் தீர்ப்பது போன்ற சித்து வேலைகளில் அவள் மனம் செல்லக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார் குருதேவர். நோய் தீர்க்கும் இத்தகைய மந்திரம் ஒன்றை அவள் ஏற்கனவே கற்றிருந்தாள்.தட்சிணேசுவரம் வந்த பிறகே அவள் அதை குருதேரிடம் தெரிவித்தாள்.அதற்கு குருதேவர் பரவாயில்லை.நீ கற்றுக்கொண்டதில் தவறில்லை இனி அதனை உன் இஷ்டதெய்வத்தின் பாதத்தில் சமர்ப்பித்துவிடு என்று கூறினார்
-
இந்த காலத்தில்தான் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களையும் அவற்றை எப்படி பிறருக்கு அளிப்பது என்பதையும் குருதேவர் சாரதைக்கு கற்பித்தார்
-
அந்த நாட்கள் பற்றி அன்னை பின்னாளில் இவ்வாறு கூறுவார்.அந்த நாட்களில் தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து
தியானம் செய்ய அமர்வேன்.பல நாட்கள் என்னை மறந்து தியானத்திலே ஒன்றிவிடுவேன்.ஒருநாள் நல்ல நிலவொளி வீசிக்கொண்டிருந்தது எங்கும் ஒரே அமைதி.அன்று நகபத்தின் வாசற்படியருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கிவிட்டிருந்தேன்.குருதேவர் அந்த வழியாக செல்லும்போது அவரது மிதியடியோசை கேட்கும்.அன்று எதுவுமே கேட்கவில்லை.அந்த நாட்களில் நான் இப்படி இருக்கவில்லை.அழகாக இருப்பேன்.ஏராளமான நகைகள் அணிந்திருப்பேன்.சிவப்பு கரையிட்ட சேலை உடுத்துவேன்.அன்று என் முக்காடுகூட காற்றில் நழுவி கீழே விழுந்துகிடந்ததாகவும்,அதை உணராமல் நான் தியானத்தில் மூழ்கிக்கிடந்ததாகவும்,குருதேவருக்கு தண்ணீர் கொண்டுசென்ற யோகின் பின்னர் கூறினான்.ஆ! அந்த நாட்களில் ஆனந்த வெள்ளத்தில்தான் மிதந்தேன்.பால் நிலா காயும் இரவுகளில், சந்திரனைப் பார்த்தபடியே. இறைவா! நிலவைப்போல் என் மனமம் தூய்மையாக இருக்க வே்ண்டும்.அதிலாவது சிறிது களங்கம் இருக்கிறது.என் மனத்தில் அதுகூட இருக்கக்ககூடாது என்று இறைவனிடம் வேண்டுவேன்.ஆன்மீக அனுபவம் முழுமைபெறும்போது ஒருவன் தன் இதயத்தில் உறையும் அதே கடவுள், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்,ஒதுக்ப்பட்டவர்கள்,துன்புறுத்தப்படுபவர்கள் ஆகிய அனைவரின் இதயங்களிலும் கோயில் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காண்கிறான்.இந்த அனுபவன் ஒருவனுக்கு உண்மையான பணிவை அளிக்கிறது
-
சாரதை ஆன்மீக சாதனைகளைத் தவறாமல் செய்வதில் குருதேவர் மிகவும் கவனமாக இருந்தார்.பொதுவாக சாரதை காலை மூன்று மணிக்கே எழுந்து,காலைக் கடன்களை முடித்தபின் ஜபம் செய்வதற்காக அமர்வது வழக்கம். என்றாவது அதில் தவறினால்,அந்த வழியாகச் செல்கின்ற குருதேவர் எழுந்திரு,எழுந்திரு என்று உரக்கக் கூவியவாறே நகபத் வாசல் வழியாக தண்ணீரை உள்ளே ஊற்றுவாராம்
- தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த இந்தக் காலத்தில் சாரதை மிகவுயர்ந்த ஆன்மீக நிலைகளை அனுபவித்தாள் என்பதற்கு ந்றையச் சான்றுகள் உள்ளன . நாணமே
உருவானவள் அவள் .
எதற்கும் தன்னை முன்னால் வைக்காதவள் . அத்தகையவள் தன் ஆன்மீக அனுபவங்களை வெளியில் சொல்வாள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் ?
ஆனால் சிலநேரங்களில் , அவளையும் மீறி அது வெளிபட்டு விடும் . இதன்மூலமாகவே இன்று உலகம்
அவளது ஏதோ ஓரிரு
உயர்ந்த அனுபவங்களையாவது அறிந்துகொள்ள முடிகிறது .
-
யோகின்மா ,
தான் கண்ட
ஒரு நிகழ்ச்சியைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார் . ‘ அன்னை முதன்முறை தட்சிணேசுவரம் வந்தபோது , சமாதி நிலையை
அனுபவித்திருக்கவில்லை .
சிரத்தையோடு தினமும்
அவர் தியானமும் ஜபமும் செய்வார் என்றாலும் , சமாதியில் மூழ்கியதாக நாங்கள் கேள்விபட்டதில்லை . மாறாக , அவர் குருதேவருடன் ஒரே
அறையில் வாழ்ந்த காலங்களில் அவருடைய சமாதி நிலையைக் கண்டு , அஞ்சி
நடுங்கியதுபற்றிதான் எங்களுக்குத் தெரியம் . எனக்கு
அவருடன் பழக்கம் ஏற்பட்டபின் ஒருநாள் அவர் என்னிடம்
, “ யோகின்
, எனக்கு ஒர் உதவி
செய்ய வேண்டும் . நான் சமாதி
நிலையை அனுபவிக்க அருளுமாறு நீ குருதேவரிடம் சொல்வாயா ? அவரைச் சுற்றி பக்தர் கூட்டம்
எப்போதும் இருக்கிறது . அதனால் இதுபற்றி என்னால்
அவரிடம் எதுவுமே பேச முடியவில்லை ” என்று கூறினார் .
அன்னையின் வேண்டுகோள் மிகவும் சரியானதாகப்படவே , குருதேவரிடம் இதுபற்றிப் பேச நான் முடிவு செய்தேன் . ‘ மறுநாள்
குருதேவரைக் காணச் சென்றேன் .
அப்போது அவர் தமது அறையில் கட்டிலின்மீது உட்கார்ந்திருந்தார் அவருடன் வேறு யாரும் இல்லை . வழக்கம்போல் அவரை
வணங்கிய பிறகு .
அன்னையின் வேண்டுகோளை அவரிடம் கூறினேன் . அவர்
கவனமாகக் கேட்டுக் கொண்டார் , ஆனால் பதிலேதும் சொல்லவில்லை . திடீரென்று கம்பீரமானார் . அத்தகைய மனநிலையில் அவர் இருக்கும்போது அவரிடம் பேசும் துணிவு வராது . எனவே சிறிது நேரம் நான் மௌனமாக
இருந்துவிட்டு ,
மெதுவாக வெளியே வந்தேன்
.
-
அங்கிருந்து நகபத்தை அடைந்த நான்
கதவைச் சிறிது திறந்து கதவின் வழியே உள்ளே பார்த்தேன் . அன்னை
வழக்கம்போல் காலைநேர பூஜைக்காக அமர்ந்திருந்தார் . அங்கே நான் கண்ட
காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை . அன்னை மிகவுயர்ந்த பரவச நிலையில் இருந்தார் . ஒரு சமயம்
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் . மறகணம் தேம்பித்தேம்பி அழுதார் . இவ்வாறு
அழுவதும் சிரிப்பதுமாக சிறிதுநேரம் நீடித்தது . அவரது கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் பெருகி
வழிந்தது .
படிப்படியாக அவர் புற நினைவற்று , தமக்குள்ளேயே ஒடுங்கிப் போனார்
. அவர் ஆழ்ந்த சமாதியில் இருக்கிறார் என்பதை என்னால் ஒணர முடிந்தது . கதவை மெதுவாக மூடிவிட்டு நான்
வெளியே வந்துவிட்டேன் . ‘ நெடுநேரம் கழிந்தபின் அவரது அறைக்குச் சென்றேன் . என்னைக் கண்டதும்
, “ இப்போதுதான் கருதேவரிடமிருந்து வருகிறாயா ? ”” என்று
கேட்டார் அன்னை . “ அம்மா ,
உயர்ந்த ஆன்மீக நிலைகளையோ சமாதியையோ அனுபவித்ததே இல்லை ன்று கூறி என்னை
இப்படி எமாற்றி விட்டீர்களே ! ” என்றேன் நான் . அன்னை
நாணம் கலந்த அழுத்தமான புன்சிரிப்பை உதிர்த்தார் . குருதேவரின் மறைவுக்கப் பிறகு , சாரதைக்கு இத்தகைய
சமாதி நிலை
அடிக்கடி எற்பட்டது . இதனைப்பற்றி பின்னர் விரிவாகக் காண்போம் . இங்கு ஒர்
உண்மையை நாம் கருத்தில் கொள்வது அவசியம் .
உயர்ந்த ஆன்மீக
வாழ்வின் விளைவாகப் பரவச
நிலைகளும் தெய்வீகக் காட்சிகளும் கிடைப்பது உண்மைதான் . ஆனால் இவை கிடைத்தால் மட்டுமே
ஒருவர் ஆன்மீகத்தில் உயர்ந்தவர் என்று கணக்கிட்டுவிடக்கூடாது . சாதகனின்
இயல்புக்கு ஏற்ப , சிலருக்க இவை உண்டாகலாம் சிலருக்கு உண்டாகாமலும் போகலாம் . ஆனால் உண்மையான ஆன்மீக
உயர்வின் சாரம்
, அவர்களின் அக வாழ்க்கை முற்றிலும் மாறி உயர்ந்த உணர்வு
நிலைகளை அடைவதாகும் . அன்னையின் அனுபவ வார்த்தைகள் இதனைத் தெளிவாக்ககிறது ‘
ஒருவர் கடவுளை உணர்வதால் என்ன கிடைத்துவிடும் ?
அவருக்கு இரண்டு கொம்புகளோ முளைத்து விடுகின்றன ? இல்லை . அவருடைய மனம் தூய்மையடைகிறது . தூய்மையான மனத்தின் மூலம் ஞானம் உண்டாகிறது . ’
-
தொடரும்..
No comments:
Post a Comment