Tuesday, 1 May 2018

உருமாறும் உயிர்கள்-பரிணாமம்


உருமாறும் உயிர்கள்-பரிணாமம்
-
பரிணாமம் என்பது என்ன?சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் உடல்களை மாற்றிக்கொள்வது.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுவது பரிணாமம்.நீரிலுள்ள மீன் தன்னை துரத்திக்கொண்டிருக்கும் வேறுமீன்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்வதற்காக இறக்கையை வளர்த்துக்கொண்டு ஒரு பறவையாக மாறுகிறது.பறவை நிலத்திலி தாராளமாக கிடைக்கும் உணவுகளை உண்பதற்காக தன் உடலை மாற்றிக்கொண்டு சிறுவிலங்காக மாறுகிறது. அந்த விலங்கு படிப்படியாக வலிமைபெற்று கடைசியில் மனிதனாக மாறுகிறது.
-
இந்த பரிணாமத்தில் வெளியுலகம் எதுவும் மாறவில்லை.மாற்றம் நமக்குள்ளே நடந்துகொண்டிருக்கிறது.யாரும் மாறாமல் அப்படியே வாழமுடியாது. நாமும் தினம்தினம் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறோம்.ஒரு காலத்தில் காட்டில் வேட்டையாடி வாழ்ந்து வந்தோம்.இப்போது அப்படி வாழமுடியாது. நகரசூழ்நிலைக்கு ஏற்ப நாம் பரிணமித்துவிட்டோம்.
-
இதே கொள்கையின் படி, நாம் வேறு உலகத்திற்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்,அங்கே அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நமது உடல்மாறிவிடும்.அப்போது நாம் மனிதர்களாக இருக்கமாட்டோம்.
-
தன்மாத்திரைகள் என்று ஒரு தத்துவம் நமது மத்தில் உண்டு. அதாவது இந்த உலகத்தில் உள்ள அணுக்கள் பற்றியது அது. பூவிலிருந்து வெளிப்படும் நறுமணம் ஒரு தன்மாத்திரை.அது பூவிலிருந்து வெளிப்பட்டு பல தூரம் பயணித்து மனிதனை அடைகிறது.இதேபோல் ஒளி ஒரு தன்மாத்திரை,சூரியனிலிருந்து பயணித்து மனிதனை அடைகிறது.இதேபோல் சுவை மற்றும் ஓசையும் உள்ளது. நமது உடலிலிருந்தும் தொடர்ந்து இதேபோல் தன்மாத்திரைகள் வெளிப்பட்டு வேறு உடல்களை அடைகிறது.இவ்வாறு இந்த பூமியிலிருந்து வெளிப்படும் தொடர்ந்த தன்மாத்திரைகளால் இந்த உலகத்தில் உள்ள உயிர்களில் உடல்கள் எல்லாம் ஆக்கப்பட்டுள்ளது
-
நாம் ஒருவேளை வேறு கிரகத்தில் இருந்தால் பூமியில் இருப்பதுபோன்ற தன்மாத்திரைகள் அங்கே இருக்காது.அவைகள் முற்றிலும் வேறுபட்டிருக்கும் அவைகள் மனித உடலில் புகுந்து அந்த உடல்அமைப்பை படிப்படியாக மாற்றிவிடும்.கடைசியில் மனிதன் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வேறு உயிர்களாக மாறிவிடுவான்.
-
இந்த சூரிய மண்டலத்தை தாண்டி,சந்திரமணடலம்(நாம் காணும் சந்திரன் அல்ல) என்ற ஒன்று உள்ளது.அதையும் தாண்டி மின்னல் மண்டலம் என்ற ஒன்று உள்ளது என்று வேதம் கூறுகிறது. சந்திர மண்டலத்தில் உயிர்கள் வாழ்கின்றன என வேதம் கூறுகிறது.அவைகள் எப்படி இருக்கும்? மனிதனாக இருக்காது. அங்கே உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அந்த உடல்மாறுபட்டிருக்கும்.
-
அந்த சந்திரமண்டலத்திற்கு செல்வது எப்படி? நமது உடல் பூமியிலிருந்து பெறப்பட்ட தன்மாத்திரைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடல் தூலஉடல் என்று பெயர்.இதை மாற்றி அமைக்க வேண்டும்.பூயிலிருந்து வரும் தன்மாத்திரைகளை நிறுத்தி நமது உடலை அதன்பாதிப்பிலிருந்து தனிமைப்படுத்தவேண்டும். இந்த உடலின் தன்மாத்திரைகளை சூட்சும தன்மாத்திரைகளாக மாற்றி அமைக்கவேண்டும்.அப்போது நமது உடல் சூட்சும உடலாக மாறிவிடும்.
-
அந்த உடல் ஒளியைவிட விரைவாக பயணிக்கக்கூடியது.அதன்மூலம்தான் சந்திரமண்டலத்தை அடைய முடியும்.அங்கே நம்மைப்போல் வாழும் பலரை சந்திக்கலாம்.அவர்களை தேவர்கள் என்று வேதம்கூறுகிறது.ஒரு காலத்தில் மக்கள் அங்கு சென்று வாழ்வதே வாழ்க்கையில் லட்சியம் என நினைத்தார்கள்.அங்கே உள்ள உடல்களும் அழிந்துவிடும் என்று வேதம்கூறுகிறது.அங்கேயும் மரணம் உண்டு.
-
யோகிகள் தங்கள் தூலஉடலிலிருந்து சூட்சுமஉடலை உருவாக்கி அதை தனியாக பிரித்து சந்திரமண்டலத்தை அடையவிரும்பினால் அங்கு செல்கிறார்கள்.மீண்டும் பழையபடி தூலஉடலுக்குள் சூட்சுமஉடலை அடக்கி பூமியில் நடமாடுகிறார்கள்.
-
இதையும் தாண்டியிருப்பது மின்னல்மண்டலம் அங்கும் உயிர்கள் இருக்கின்றன...அவைகள் சந்திரமண்டத்தில் உள்ள உயிர்கள்போல் இல்லாமல் அதைவிட வேறுபட்டு இருக்கின்றன என வேதங்கள் கூறுகிறது
-
உணவிலிருந்து உயிர்கள் உருவாகின்றன என வேதங்கள் கூறுகிறது.இதுபற்றிய கட்டுரை பின்னர் வரும்
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்.(2-5-2018)
-

No comments:

Post a Comment