Sunday, 13 May 2018

தற்கொலைசெய்து கொண்ட பின் என்ன நடக்கும்?


தற்கொலைசெய்து கொண்ட பின் என்ன நடக்கும்?
-
வாழ்க்கையில் தீராத பிரச்சினைகளின் காரணமாக சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.இதனால் இந்த பிரச்சினைகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடலாம் என நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் தற்கொலை செய்துகொண்ட பிறகு பிரச்சினைகள் முடிந்துவிடுகின்றனவா?
-
நமது உடல் இரண்டு அடுக்குகளால் ஆனது. 1. இறந்த பிறகு ஜடமாக இருக்கும் ஜடஉடல்.2.அந்த ஜட உடலை இயக்கிக்கொண்டிருந்தது ஆவி உடல் அல்லது சூட்சும உடல்
-
மனம் என்பது ஆவி உடலை சார்ந்தது.மரணமடையும்போது இருக்கும் இந்த மனத்தில் தீவிரத்தை பொறுத்து,இறந்தவர்களின் ஆவி உடல் மாறுபடுகிறது. மிகவும் அமைதியாக சாந்தமாக,அன்பாக இறப்பவர்களின் ஆவி உடல் அதன்பிறகு மேல் உலகங்களுக்கு செல்கிறது.அப்போது அது ஒளி உடலை பெறுகிறது.அதை தேவர் அல்லது தேவி என்கிறோம்.மேல் உலகம் செல்ல விரும்பாதவர்கள் மற்றும் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் சிலர் மீண்டும் மனிதனாக பிறக்கிறார்கள்.
-
இந்த கட்டுரையில் பேய் உடலை பற்றிதான் விளக்குகிறேன்
-
இறக்கும் போது மிகவும் அலைபாய்ந்த நிலையில்,அமைதியடையாமல்,வேதனையான மனநிலையில் உடலைவிட்டு சென்றால் அது பேய் உடல் என்ற விகாரமான உடலை பெறுகிறது. இறக்கும்போது எப்படிப்பட்ட துன்பமான மனநிலை இருந்ததோ,அதே மனநிலைதான் அதன் பிறகும் தொடர்ந்து இருக்கும்.சிலநேரங்களில் இருபது,முப்பது ஆண்டுகள் வரை அந்த வேதனை தொடரவும் வாய்ப்புள்ளது.எந்த வேதனையை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தோமோ அதே வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
-
சுனாமி ஏற்பட்ட போது எங்கள் பகுதியில் உள்ள பீச் கடற்கரையில் இருந்துவர்களை கடல் இழுத்துசென்றுவிட்டது. பலர் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு மாலை வேளையில் அந்த இடத்திற்கு செல்வர்களுக்கு இறந்தவர்கள் அலறும் சத்தம் கேட்டதாக பலர் கூறியிருக்கிறார்கள்.இறக்கும் போது ஏற்பட்ட அந்த வேதனை அவர்களை விடவில்லை.பல வருடங்களாக அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.அமைதியான மாலை வேளைகளில் பலரால் அதை கேட்க முடிந்தது.இதை சிலர் நம்பலாம் பலர் நம்பாலும் போகலாம்.
-
இங்கே நாம் சொல்லவந்த கருத்து என்னவென்றால் தற்கொலை செய்துகொள்வதால் நமது வேதனைகள் தீராது என்பதுதான். நமது வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள் சில வருடங்களில் தீர்ந்துபோகலாம் அல்லது நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.ஆனால் தற்கொலை செய்துகொள்வதால் அவைகள் தீராது.பல ஆண்டுகள் தொடர்ந்துவரும்
-
நமது உடலில் கண்,காது.நாக்கு,மூக்கு,தோல் என்று ஐந்து பொறிகள் இருப்பதுபோல ஆவி உடலிலும் உண்டு. அவர்களால் இந்த உலகத்தில் உள்ளவர்களை காண முடியும். நம்மைபோல தெளிவாக காண முடியாவிட்டாலும் ஓரளவு காண முடியும்.மேலும் துகரும் சக்தியும் வேலை செய்யும்.அவர்கள் மனத்தின் மூலம் வாழ்கிறார்கள்.அதாவது வயதானவர்கள் எப்படி பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டு வாழ்வார்களோ அதேபோல உயிருடன் இருந்தபோது சந்தித்த நபர்களைப்பற்றிய நினைவுகள் அவர்களிடம் இருக்கும்.
-
நம்மை யாராவது நினைக்கமாட்டார்களா என்று ஏங்குவார்கள். யார் அவர்களை தொடர்ந்து நினைக்கிறார்களோ அவர்களிடம் இருக்க விரும்புவார்கள்.சிலநேரங்களில் அவர்களையும் தற்கொலைக்கு தூண்டுவார்கள். யாருமே அவர்களை நினைக்கவில்லையென்றால் சில வருடங்களுக்கு பிறகு மிருக உடலில் மறுபடி பிறப்பார்கள்.
-
நாம் நினைத்தால் அவர்களால் அந்த நினைவுகளை புரிந்துகொள்ள முடியும்.அதேபோல் அவர்கள் நினைப்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.நமது மனத்தில் அந்த எண்ணங்கள் பிரதிபலிக்கும். நாம் படைக்கும் உணவுகளை நுகர்ந்து உண்ண முடியும்.இந்த உலகத்தை மங்கலாக பார்க்க முடியும்.இந்த உலகத்தை நாம் பார்ப்பதுபோல அவர்களால் பார்க்க முடியாது.சிலரது உடலுக்குள் வந்து தொந்தரவு செய்யவும் முடியும்.சில வேளைகளில் சிலரது உடலுக்குள் பல வருடங்கள் வாழவும் முடியும்.
-
தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பம் அதன்பிறகு மிகவும் பலவீனமாக வேதனையான நிலையை அடைந்துவிடும்.அதற்கு காரணம் அந்த ஆவி அந்த வீட்டிலேயே தங்கிவிடுவதும்.இறைவனது அருள் அந்த வீட்டை விட்டு விலகிவிடுவதும் ஒரு காரணம்.மேலும் மனரீதியாக அந்த வீட்டில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.எப்போதும் இறந்தவர்களின் நினைவு அவர்களுக்கு தொடர்ந்து இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது.சில குடும்பங்களில் அடுத்தடுத்து பல தற்கொலைகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.இறந்தவர்களின் ஆவி அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் சிலரை தற்கொலைக்கு தூண்டும்.அப்படி பலர் இறந்துபோவதும் உண்டு
-
அப்படி தற்கொலை நடந்த வீடுகளில் உள்ளவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வீடுகளுக்கு சென்றுவிடுவது நல்லது. மேலும் இறந்தவர்களின் புகைப்படம்,அவர்கள் பயன்படுத்தி பொருட்கள்.அவர்கள் தொடர்பான எண்ணத்தை தரும் வேறு எதுவதாக இருந்தாலும் அதைவிட்டுவிட வேண்டும். மேலும் இறந்தவர்களை ஒருபோதும் நினைக்க கூடாது.அதை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும்.ஸ்ரீராமகிருஷ்ணர்,வள்ளலார்,ரமணர் போன்ற மகான்களின் படங்களை வீட்டில் வைத்து அவர்களுக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூஜை செய்து வந்தால் ஆவிகளால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.குடும்பத்தில் அமைதி நிலவும்
-
தற்கொலை செய்து கொள்வது என்பது சமுதாய வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை. ஆகவே தற்கொலை என்பதை எக்காரணத்தாலும் சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. சில தலைவர்களின் தூண்டுதலால் சிலர் உடலை எரித்து இறந்துபோகிறார்கள்.அந்த பாவம் அந்த தலைவர்களை சேரும். அந்த அரசியல் தலைவர்கள் படிப்படியாக தோல்வியை சந்தித்து முடிவில் அவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வரலாம்...
-
உடலை பொறுத்தவரை. புண்ணியம் செய்தவர்களின் உடல் மனித உடலைவிட பெரியதாகவும்,பாவம் செய்தவர்களின் உடல் மனித உடலைவிட சிறியதாகவும் இருக்கும். தேவர்களின் உடல் மனித உடலைவிட பெரியது. இன்னும் உயர்ந்த உலகங்களில் வாழ்பவர்களின் உடல் இன்னும்மிகப்பெரியது.புண்ணியத்தின் அளவைப்பொறுத்து உடலும் பெரிதாக அமைகிறது.பாவத்தின் அளவைப்பொறுத்து உடல் சிறியதாகிக்கொண்டே செல்கிறது
-
பேய் உடலை ஒரு சிறு செம்புக்குள் அடைத்துவிடலாம்.அந்த அளவு அது சிறியதாக இருக்கும்.பெரும்பாலானவர்கள் முன்னோர்கள் வாழ்வதற்காக வீட்டில் ஒரு அறையை ஒதுக்கியிருப்பார்கள்.இவைகளையெல்லாம் நாம் ஆதரிப்பதில்லை.இருந்தாலும் முற்காலத்திறிருந்து தற்காலம் வரை இந்த வழிபாடுகள் இருந்துகொண்டே இருக்கிறது.இந்த வழிபாடு பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
-
இந்த வாழ்க்கையில் மனரீதியாக எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் நல்லது. 
-
மனத்தை முற்றிலும் இயக்கமற்றதாக செய்து.பிராணனை தனக்குள்ளேயோ அல்லது வெளியேயோ நிறுத்தி. சில யோகிகள் தற்கொலை செய்துகொள்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பு ஏற்படாது. மற்றவர்களுக்கு மறுபிறப்பு உண்டு.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(13-5-2018)
-

No comments:

Post a Comment