Wednesday, 9 May 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-30


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-30
யூதர்களின் தெய்வம்,அரேபியர்களின் தெய்வம்(அல்லா) இவர்கள் சொந்த இனத்திற்காக மற்றஇனத்தாருடன் போரிடும் இனதெய்வங்கள்--5-59
-
பிறமதத்தில் நமதுமத கடவுளைப்பற்றிய கருத்துக்களுக்கு சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள். இல்லவேயில்லை-5-59
-
ஒரு பிராமணன் இறைச்சி உண்பதை கண்டு நடுங்குகிறீர்கள்.முற்காலத்தில் யாகங்களில் விலங்குகளை பலியிட்டவன் பிராமணன்-5-78
-
மாட்டிறைச்சி உண்ணாத பிராமணன் பிராமணனே இல்லை என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. .5-79
-
நமது சமுதாயத்தின் தலைவர்கள் ஒருபோதும் படைத்தலைவர்களோ அரசர்களோ அல்ல,மாறாக ரிஷிகளே என்பதை நினைவில்வையுங்கள்-.5.81
-
வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக இருக்க முடியும்.வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது-.5-89
-
பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக்கொள்வான்.மற்றவர்கள் படிக்க உதவுங்கள்-.5-102
-
இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று முன்னேறி லட்சிய பிராமணன் ஆகவேண்டும்.இதுதான் ஜாதி பற்றிய நமது கருத்து-.5.109
-
கிறிஸ்தவ மதம் என்பது நமது சிந்தனை துணுக்குகளை இணைத்து ஒட்டுபோடப்பட்ட ஒரு போலி மட்டுமே. .5-123
-
புத்தமதம் என்பது நம் மதத்திலிருந்து பிறந்த ஒரு துடுக்குக் குழந்தை மட்டுமே -.5-123
-
நாம் நமது நாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்தாக வேண்டும்.அதோடு இந்து இனம் உலகம் முழுவதையும் வெல்ல வேண்டும்.5-124
-
ஓ இந்தியா! விழித்தெழு,உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றிகொள்!ஆன்மீகம் மேலைநாடுகளை வென்றாக வேண்டும்-.5-125
-
சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தை ஊற்றுங்கள்.ஒருவரிகூட நினைவில் வைத்திருந்தால் அவனது நாக்கை வெட்டுங்கள்.பிராமணனைப்பார்த்து ஏ பிராமணா என்று அவன் அழைத்தால் அவனது நாக்கை வெட்டுங்கள் (பழங்காலத்தில் நிலவிய இத்தகைய ஸ்மிருதிகளை சங்கரர் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.3.38 ல் மேற்கோள் காட்டி பேசுகிறார்) சங்கரரும் பிறரும்தான் ஜாதிகளை உருவாக்கியவர்கள்.அவர்கள் கட்டிவிட்ட வினோத கதைகளை எல்லாம் சொன்னால் உங்களுள் சிலருக்கு கோபம் வரலாம். -சுவாமி விவேகானந்தர்.புத்தகம்-5 பக்கம்231,232
-
முகமதியர்கள் நம்நாட்டை வெற்றி கொண்டது ஏழைகளுக்கும்,தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கதிமோட்சமாக அமைந்தது.அதனால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்கள் ஆனார்கள்.-.புத்தகம்5-229
-
உடலுழைப்பிலாத உயர்சாதியினர் மாமிசம் உண்ண வேண்டாம்.மற்றவர்கள் தாவர உணவை சாப்பிடவேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது-11-26
-
அனைவரும் தாவர உணவே உண்ணவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதே நாம் சுதந்திரத்தை இழந்ததற்கான காரணங்களுள் ஒன்று-11-26
-
ஜாதி முதலிய பைத்தியமெல்லாம் புரோகிதர்கள் எழுதிய நூல்களில்தான் உள்ளன.இறைவன் தந்துள்ள நூல்களில் இல்லை- .11-43
-
பிறவியை ஒட்டிய அல்லது குணத்தை அனுசரித்த எல்லாவிதமான ஜாதியும் பந்தமே.ஜாதியால் ஏழைக்கு எந்த பலனும் இல்லை-.11-43
-
ஸ்மிருதிகளும் புராணங்களும் சாதாரண அறிவு படைத்த மனிதர்கள் உருவாக்கியவை.அதில் பிழைகளும்,வெறுப்பும் நிறைந்துள்ளது..11-42
-
கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் சாபம் நம் தலைமீதிருக்கிறது.கோடிக்கணக்கானோரை பட்டினியில் வாட்டியிருக்கிறோம்..5-304
-

No comments:

Post a Comment