திராவிட சீர்த்திருத்தவாதிகளுக்கு எதிராக சுவாமி விவேகானந்தரின் கருத்து.
-
சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே!ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியத்தையுடைய கோடிக்கணக்கான மக்களின் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு கட்டளையிட விரும்புகிறீர்கள்! வெட்கமாக இல்லை? அத்தகையை அதர்மச் செயலிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டிவற்றை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்! மரியாதையற்ற சிறுவர்களே, வெறுமனே தாளில் சில வரிகளைக் கிறுக்கி,சில முட்டாள்களின் மூலம் அவற்றைப் பிரசுரித்துவிட்டால், நீங்கள் உலகிற்கே போதகராகிவிட்டீர்கள் என்று எண்ணமா? நீங்கள் சொல்வதுதான் பொதுமக்களின் கருத்து என்றா நினைக்கிறீர்கள்! இதுவா உங்கள் எண்ணம்?
-
இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்கு குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? சைதன்யார் யார்? கபீர் யார்? நானக் யார்? இவர்கள் தான் உண்மையான சீர்திருத்தவாதிகள்.
-
சென்னையில் 9-2-1897 ல் சுவாமி விவேகானந்தர் பேசியது.
No comments:
Post a Comment