Tuesday, 8 May 2018

சுவாமி விவேகானந்தர் 100 இளைஞர்களைக் கேட்டார்


சுவாமி விவேகானந்தர் 100 இளைஞர்களைக் கேட்டார்.இந்தியாவில் அப்படி 100 இளைஞர்கள் இல்லாமலா போய்விட்டார்கள் என்று பலரும் மேடைகளில் பேசி வருவதைக் கேட்கிறோம். அவர் கேட்ட 100 இளைஞர்கள் யார் என்பதை கொஞ்சம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
-
விவேகானந்தர் சென்னை தமிழர்களிடம் பேசினார்
-
நண்பர்களே,
-
நம் சாஸ்திர உண்மைகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்ய நமது இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவில் சில இயக்கங்களைத் துவக்குவதுதான் என் திட்டம். மனிதர்கள்,மனிதர்கள்,மனிதர்கள்தான் தேவை. மற்ற எல்லாம் தயாராகிவிடும். ஆற்றல் மிக்க, தீவிரமான, நம்பிக்கையுள்ள, மனசாட்சிக்கு மாறாக நடக்காத இளைஞர்கள் இத்தகைய நூறுபேர் போதும். உலகையே புரட்டிவிடலாம். எல்லாவற்றையும்விட சங்கல்பம் வலிமை வாய்ந்தது.அது கடவுளிடமிருந்தே வருகிறது. இளைஞர்களே, பரப்புங்கள் உங்கள் மதத்தின் மகத்தான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புங்கள்.உலகம் அவற்றிற்காக காத்திருக்கிறது.முதலில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கைவேண்டும்.உங்களால் இதை சாதிக்க முடியும் என்று நம்புங்கள்.
-
என் குழந்தைகளே, என் திட்டத்தை சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன்.அவற்றை ஏற்றுக்கொண்டால் உங்களோடு சேர்ந்து பணியாற்ற நானும் தயாராக இருக்கிறேன்.
-
சென்னை தமிழர்களிடம் 1897 ல் பேசியது
-
அந்த 100 இளைஞர்கள் யார் என்பதை பார்த்தீர்கள்,அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியிருக்கிறார்.நமது மதத்தின் மீது அக்கரையில்லாத இளைஞர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.அவர்களை சுவாமி விவேகானந்தர் அழைக்கவில்லை. விவேகானந்தர் அழைத்த.அவர் விரும்பிய அப்படிப்பட்ட 100 இளைஞர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? நீங்கள் அவர்களில் ஒருவரா? 

No comments:

Post a Comment