சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-33
-
நீங்கள் சுயநலமற்றவர்களா?ஒரு சர்ச்சுக்கோ,கோவிலுக்கோ போகாமலே உங்களால் நிறைநிலையை அடைய முடியும்-புத்தகம்.1.191
-
மனிதச் சங்கிலிகளால் பாலம் ஒன்று அமையுங்கள். அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பார்கள்-புத்தகம்..1.85
-
மனிதனை பாவி என்று சொல்லாதே! நீ தெய்வம் என்று அவனிடம் சொல்-புத்தகம்..1.83
-
மேலைநாட்டு நாத்திகர்கள் தற்போது தான்நிலைபெறத்தக்க ஒரே இடம் பகவத்கீதை என்று கண்டுவிட்டார்கள்-புத்தகம்..1.81
-
மேலைநாட்டு அறிவுஜீவிகள் சர்ச்சுடன் தொடர்பை விட்டுவிட்டு மனக்குழப்பம் என்னும் கடலில் மிதந்துகொண்டிருக்கிறார்கள்-புத்தகம்..1.81
-
இந்துக்களை வெறுக்கும் கிறிஸ்தவ குழந்தைகள் இரக்கமற்றவர்களாகவும்,கொடியவர்களாகவும் வளர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை-புத்தகம்.1.76
-
ஒவ்வொரு இந்துவும் வெறுக்கத்தக்கவர்கள் என்று கிறிஸ்தவ குழந்தைகளுக்கு சர்ச்சில் போதிக்கிறார்கள். புத்தகம்..1.76
-
பாதிரிகள் மாதம் 90,000சம்பளம் வாங்குகிறார்கள்.ஆன்மீகத்தை போதிக்கும் இந்து நாடோடி துறவிகளை சோம்பேரிகள் என்கிறார்கள்-புத்தகம்.1.68
No comments:
Post a Comment