Tuesday, 8 May 2018

எதைத் துறப்பது?துறவு என்பது என்ன?


துறவு என்பது என்ன? 
-
துறவு என்பது துறந்துவிடுவது.
-
எதைத் துறப்பது? 
-
நான் தனி உடல் என்ற தனித்துவத்தை துறப்பது.
-
அப்படி துறந்தால் என்ன கிடைக்கும்?
-
இந்த பிரபஞ்சமே எனது உடலாகிவிடும். இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து உடல்களும் எனது உடல்களாகிவிடும். நானே அனைத்து மனிதர்களுமாகிவிடுவேன்,நானே அனைத்து விலங்குகளாகிவிடுவேன்.நானே அனைத்து செடி கொடிகளாக தாவரங்களாகிவிடுவேன்.நானே அனைத்து கல்,மண் உட்டபட அனைத்து ஜடப்பொருளும் ஆகிவிடுவேன்.
-
நானே மின்சக்தி,காந்தசக்தி,புவியீர்ப்புசக்தி போன்ற அனைத்து சக்திகளும் ஆகிவிடுவிடுவேன்.நானே அனைத்து உயரி்களிலும் வெளிப்படும் அன்பாக இருப்பேன்.இன்னும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நல்லவையாகவும்,அனைத்து கெட்டவையாகவும் ஆகிவிடுவேன்.
-
என்னைத்தவிர வேறு எதுவும் இருக்காது.நானே இயக்கமற்ற பிரம்மமாகவும்,சூரியன் சந்திரன் நட்டசத்திரங்களாகவும், நானே உயர் உலகில் வாழும் தேவர்களாகவும், நானே சிவனாகவும்,நானே திருமாலாகவும்,முருகனாகவும்,தேவியாகவும் மற்ற தெய்வங்களாகவும் ஆகிவிடுவேன்.கொடிய பேய் பிசாசுகளாகவும் இருப்பதும் நான்தான்
-
இந்த உலகம்,மேல் உலகம் அனைத்திலும் உள்ள இன்பம் என்னுடையதுதான்.அவைகளை அனுப்பவிப்பவனும் நான்தான்.அதேபோல் இந்த உலகத்திலுள்ள துன்பமும் என்னுடையதுதான்,அதை அனுபவித்து துன்பப்படுபவனும் நான்தான்
-
இந்த நிலையை அடைவதுதான் லட்சியம். நீங்கள் திருமணம் செய்துகொண்டவராக இருக்கலாம் அல்லது பிரம்மச்சாரியாக இருக்கலாம்.வழி எதுவாக இருந்தாலும் லட்சியம் ஒன்றுதான்.அதுதான் துறவு
-
இந்த லட்சியத்தை அடைவதற்காகத்தான் ஒருவன் திருமணம் செய்துகொள்கிறான்.இல்லற தர்மம் என்பதே இதை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான்.இதை
-
இந்த லட்சியத்தை அடைவதற்காகத்தான் ஒருவன் உலகத்தை துறந்து செல்கிறான்.
-
இந்த நிலையை அடைவதுதான் துறவு.இந்த நிலையை அடைந்தவன் இந்த உலகமே தன்னிடமிருந்து வெளிப்பட்டுள்ளதை காண்பான்.இந்த உலகத்திலுள்ள சக்திகள் எல்லாம் தன்னிடமிருந்து வந்ததை காண்பான்.
-
மனிதா துறந்துவிடு,துறந்துவிடு என்று வேதங்கள் மறுபடி மறுபடி சொல்கிறதே அவைகள் எதை துறக்கச் சொல்கின்றன என்பது இப்போது புரிகிறதா?
-
இந்த பிரபஞ்சமே நீங்களாக இருக்கும்போது, எதை துறப்பீர்கள்? நான் தனி என்ற தனித்துவத்தை...
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment