Wednesday, 9 May 2018

உங்களுக்கு எதுவும் இலவசமாக கிடைக்கவில்லை


நீங்கள் ஏன் சுயமாக சம்பாதிக்க கூடாது? எதற்காக மற்றவர்களிடம் பணம் கேட்கவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்
-
ஒவ்வொரு கர்மத்திற்கும் அதற்குரிய நல்ல மற்றும் தீய பலன்கள் உண்டு என்பதுதான் கர்மா தியரி
-
நான் ஆன்மீகத்தை பற்றி கட்டுரைகள் எழுதுகிறேன்.சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை பேசுகிறேன்.சமூக ஊடகங்களில் அந்த கருத்துக்களை பரப்புகிறேன்.இது ஒரு கர்மா.இதற்கு ஒரு பலன் உண்டு.அதாவது இதனால் புண்ணிய பலன் கிடைக்கிறது.
-
இன்னொரு விதியையும் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது புண்ணியமோ பாவமோ அது சூன்யத்திலிருந்து உருவாகாது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வருகிறது
-
நான் செய்யும் செயலுக்கு புண்ணியம் வருகிறது என்றால் அது எங்கிருந்து வரும்? இந்த கருத்துக்களால் பலன் அடைபவர்களிடமிருந்து வரும்.அதேபோல் யாருடைய கருத்து என்னை வாழச்செய்கிறதோ அவருக்கும் அந்த புண்ணியம் சென்று சேரும்.அதாவது சூட்சும உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இந்த புண்ணியத்தின் பலன் செல்கிறது
-
இப்போது உங்களுக்கு எதுவும் இலவசமாக கிடைக்கவில்லை என்பது புரிந்திருக்கும்
-
சுவாமி விவேகானந்தர் கருத்துக்களால் யார் யார் பலன் அடைந்திருக்கிறார்களோ அவர்கள் பிரதியாக பணம் கொடுக்கிறார்கள்.அந்த பணத்தை வைத்துக்கொண்டு மேலும் சேவையை விரிவுபடுத்தினால் அது எனக்கும்,மேலோர்களுக்கும் இன்னும் புண்ணியத்தை கொடுக்கும்.
-
இதிலிருந்து இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். பலன் அடைந்தவர்கள் பிரதியாக எதையும் திரும்ப கொடுக்கவில்லை என்றால் உங்கள் புண்ணியத்தை இழந்து பாவத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.இயற்கையின் விதி அதுதான்.
-
ஒன்றைப் பெற்றால் அதற்கு பிரதியாக எதையாவது கொடுக்க வேண்டும்.நீங்கள் கொடுக்காவிட்டாலும் இயற்கை தானாக எடுத்துக்கொள்ளும்.இது விதி
-
குருவிற்கு தட்சிணை கொடுப்பதும் அதுதான்.தட்சிணை கொடுக்காவிட்டால் சீடனுக்கு பாவம் வந்துசேரும்.
-
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் பலனைபெற்றுக்கொண்டு தான் மட்டும் திருப்தியுறுபவன் முடிவில் அழிகிறான் என்கிறார்.
-
யாரும் எனக்கு சும்மா பணம் தரவில்லை என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்.
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment