Wednesday, 9 May 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்-பாகம்-31


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்-பாகம்-31
-
எப்போது இந்து என்ற சொல்லே உங்களுள் வலிமையின் மின்அதிர்வுகளைப் பரப்புமோ அப்போது மட்டுமே நீங்கள் இந்துக்கள் ஆவீர்-.5.328
-
இந்துக்களில் யார் துன்பப்பட்டாலும்,அந்த துன்பத்தை கண்டு நீங்கள் துடிக்கும்போதுதான் உண்மை இந்துக்கள் ஆவீர்கள்-.5.329
-
என்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.என் முன்னோர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். .5.331
-
(உயர்சாதியினரே) உத்தமப்பெண் கீழ்ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனை மனைவியாக ஏற்றுக்கொள்.மனு.2.238
-
(உயர்சாதியினரே)
ஞானி தாழ்ந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், அவருக்கு சேவைசெய்து உயர்ஞானத்தைபெறு. மனு.2.238
-
ஆன்மாவை மட்டுமே சார்ந்துநில்.தூய எண்ணங்களை மட்டுமே சிந்தனைசெய்.ஒரு பிராச்சாரகர்படை சாதிப்பதைவிட அதிகமாக நீ சாதிப்பாய்-
-
வெறுப்பு என்பது நம்மைநாமே அழித்துக்கொள்வது ஆகும்.வாழ்க்கையின் நியதி அன்புதான்.இந்தநிலைதான் நிறைநிலை-
-
உன்னை ஏசுபவர்களை வாழ்த்து.ஏனெனில் நீ உன்னை உடல்என தவறாக புரிந்துகொள்வதிலிருந்து உன்னை காப்பாற்றியிருக்கிறார்கள்-
-
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.உங்களை ரிஷி என்று நம்பினால் ரிஷி ஆவீர்கள்.எதனாலும் அதை தடுக்க முடியாது-
-
நம் நாட்டு மக்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை எடுத்து சொல்வோம்.அவர்கள் விழித்தெழட்டும்.விழித்து நமக்கு உதவட்டும்-5-109
-
இந்த நாட்டின் நிலைமையை மக்களிடம் கூறி,அவர்களை உரத்த குரலில் அழைக்கப்போகிறேன். .5.109
-
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள்.மகத்தான இந்த இனத்தை நேசியுங்கள்.என் நாட்டுமக்களே நான் உங்களை நேசிக்கிறேன்-.5.110
-
வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.--5-110
-
சத்திய யுகத்தில் பிராமணஜாதி மட்டுமே இருந்ததாம்.இனிவரும் யுகத்திலும் அனைவரும் பிராமணர்களாக வேண்டும்-.5.108
-
பிற மதங்களின் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கும் உரியவர்கள்.யூதர்களின் தெய்வம்,அரேபியரின் தெய்வம் என்று உள்ளவர்கள் எல்லாம் அந்த இனத்தின் தெய்வங்கள்.அவர்கள் சொந்த இனத்திற்காக மற்ற இனத்தவருடன் போரிடும் தெய்வங்கள்.ஆனால் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆன்மாவுக்கு ஆன்மாவாக உள்ள கடவுள் கருத்து இங்கு மட்டுமே உள்ளது.--5-59
-
நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மதத்தின் பெயரால் படுகொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது.இந்துவின் பூமியில் அது இல்லை-.5-16
-
முஸ்லீம்கள் உங்கள் கோவில்களை இடிப்பதிலும்,முடிந்தால் உங்களையே தீர்த்துக்கட்டவும்தான் முயல்வார்கள்-.5.16
-
முஸ்லீம்கள் பிற மதத்தவரை தங்கள் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அவனது தலை வெட்டப்படும் வாய்ப்புகள்தான் அதிகம்-.4-332
-
குரான் கூறும் அறிவுரைகளை நம்பாதவர்களை உடனே கொன்றுவிடும்படி குரான் கூறுகிறது. -.4.292
-
குரானை நம்பாதவர்களை கொல்வதுதான் அழகிய பெண்களும்.பலவித இன்பமும் நிறைந்த சொர்க்கம் அடையும் நிச்சயமான வழியாம்.-4.292
-
எங்கள் மதத்தை நம்புங்கள்.ஏசு உங்களை கரையேற்றுவார் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.இது வெறும் மூடநம்பிக்கை-.4.87
-
ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தெய்வம் இருந்தது.யூதர்களின் தெய்வம் ஜெஹோவா.அவர் யூதர்களுக்காக பிற இனத்தவருடன் போரிடுவார்-4.500
-
நான் ஏசுவை நம்பவில்லை.நீ நரகத்திற்குதான் போவாய் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.இவர்கள் MentalHospitalபோகவேண்டியவர்கள் .4.452
-
ஏசுவின் பெயரால் ஞானஸ்தானம் பெற்றேன் என்று சொல்வது வெற்றுப்பேச்சு.உங்கள் மூடத்தனத்தால் உலகை தொந்தரவு செய்யாதீர்கள்-4-450
-
குருவின் மூலம் தீட்சை அவசியம்.ஏன்?தலைமுறை தலைமுறையாக வரும் மகத்தான ஆற்றலுடன் தீட்சை உங்களை இணைக்கிறது-ர்.5.420
-
மனிதப்பிறவி,முக்தியில் நாட்டம்,லட்சியத்தை அடைந்த சாதுவின் தொடர்பு இந்த மூன்றும் கிடைப்பது அபூர்வம்-விவேக சூடாமணி-3
-
சிவன்,ராமன்,திருமால் என்று எந்த உருவில் வணங்கினாலும் அவரே பிரபஞ்சத்தின் ஒரே கடவுள் என்ற இந்த நம்பிக்கை வேண்டும்-
-
இந்துமதம் ஒன்றே ஒப்பற்ற மதம். என் நாட்டு மக்கள் அதை புறக்கணிப்பது கண்டு உள்ளம் வருந்துகிறேன். .5.417
-
அத்வைதத்தை தினசரி வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய காலம் இது.அதை விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கொண்டுவருவோம்-.5.390
-

No comments:

Post a Comment