கேள்வி..மனித பிறப்பின் நோக்கம் என்ன?
-
சுவாமி வித்யானந்தர்....
-
ஒவ்வொரு உயிரும் இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுபடவே விரும்புகிறது.கடலில் வாழும் மீன் தன்னைவிட பெரிய மீன் துரத்துவதை அறிந்து அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறது. வானத்தில் உள்ள பற்வையை பார்க்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. எனவே அது படிப்படியாக பரிணமித்து பறவையாகிறது.
-
பறவை தன்னைவிட பெரிய பறவை துரத்துவதை கண்டு வேதனையடைகிறது. அது மிருகங்களை காண்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மிருகங்களாக மாறுகிறது.
மிருகங்களும் மனிதனை காண்கிறது.மனிதன் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது,பரிணமித்து மனிதனாகிறது. இதுவரை நாம் பார்த்தது நவீன விஞ்ஞானத்தில் பரிணாமவாதம்.
-
மனிதன் தன்னைவிட சுதந்திரமாக இருப்பவர்யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறான். இயற்கையின் பிடியில் சிக்கி பிணி,மூப்பு,இறப்பு இவைகள் இல்லாத யாராவது இருக்கிறார்களா என கேள்வி கேட்கிறான். இறைவனுக்கு பிணி,மூப்பு,இறப்பு இல்லை என்று பதில் வருகிறது.
-
ஆகவே இறைவனாகவே மாற வேண்டும் என்று முயற்சிக்கிறான். கடைசியில் அவனது முயற்சி வெற்றி பெறுகிறது. அவன் முற்றிலும் சுதந்திரன் ஆகிறான்.
-
ஆகவே மனிதனின் நோக்கம் சுதந்திரம் அடைவது தான். எதிலிருந்து சுதந்திரம்? இயற்கையின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம். பிறப்பு,வாழ்க்கை,நோய்,வயோதிகம்,இறப்பு என்ற முடிவற்ற சங்கிலியிலிருந்து விடுதலை. மனிதன் எவ்வாறு விடுதலையடைவது என்பதை போதிப்பது தான் இந்துமதத்தின் மையகருத்து.
No comments:
Post a Comment