விவேகானந்தரை ஏன் சுவாமி என்கின்றார்கள் ?இறைவனும் மனிதரும் ஒன்றா?
-
சுவாமி என்றால் இறைவன் என்று அர்த்தம். நமது சொந்த இயல்பு இறைவன்தான். ஆனால் நாம் அதை அறியவில்லை. நான் இறைவன் என்ற நிலையை அடைந்தவர்களை சுவாமி என்கிறோம். கணவனை மனைவி சுவாமி என்று அழைப்பதுண்டு. சபரிமலைக்கு செல்பவர்களும் சுவாமி தான்,கோவிலில் குடியிருப்பவரும் சுவாமி தான். நான் இறைவன் என்ற அந்த நிலையை அடையாதவர்கள் கூட சுவாமி தான். அந்த வகையில் பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சுவாமி தான். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் அனைவரையும் பார்த்து, நீங்கள் அனைவரும் தெய்வங்கள் என்று கூறுகிறார். நாம் சுவாமி என்று கூறும்போது உடலை குறிப்பதாக நினைத்துவிடக்கூடாது.நமது சொந்த இயல்பு உடல் இல்லை. உடல் என்பது நமது சட்டை போன்றது. நமது சொந்த இயல்பு உருவமற்றது. வேதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று மீண்டும்,மீண்டும் சொல்லப்படுகிறது. நமக்கும் உருவம் இல்லை. அப்படியானால் இந்த உடல் எங்கிருந்து வந்தது? இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேதாந்த தத்துவத்தை உரிய குருவிடம் , சிஷ்யனாக சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment