Thursday, 9 February 2017

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?


கேள்வி...நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
-
-சுவாமி வித்யானந்தர்....
-
நம்பிக்கை என்பதே பிறர்சொல்வதை ஏற்றுக்கொள்வது தான். நாமே ஆராய்ந்து காண்பவவைகளை நம்புகிறேன் என்று சொல்லாமல். எனக்கு தெரியும். நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்வோம். 
-
ஒரு விஞ்ஞானி சொல்வதை எல்லாம் நம்புகிறோம்.ஏனென்றால் அவர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்புகிறோம்
அதே நேரத்தில் அவர்கள் பல வேளைகளில் பல முடிவுகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
உதாரணமாக பழைய கால விஞ்ஞானிகள்
1.பூமியை சூரியன் சுற்றுவதாக சொன்னார்கள்.மக்கள் நம்பினார்கள்.
பிறகு 2.சூரியனை தான் பூமி சுற்றுகிறது என்றார்கள்.அதையும் நம்பினார்கள்.
இப்போது 3.சூரிய குடும்பமே வேறு எதையோ ஒன்றை சுற்றுகிறது என்கிறார்கள்.அதையும் நம்புகிறோம்.
ஆகவே நமது நம்பிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
-
தற்காலத்தில் யாராவது பூமியை சூரியன் சுற்றுவதாக சொன்னால் அவனை மூடநம்பிக்கை உள்ளவன் என்று சொல்வோம்.
அப்படி பார்த்தால் முற்காலத்தில் வாழ்ந்த எல்லோரும் மூடநம்பிக்கையை பின்பற்றினார்கள் என்று சொல்ல வேண்டிவரும்.
இப்போது நாம் நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்கள் எதிர்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்ட்டால், எதிர்காலத்து மக்கள் நம்மை மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வார்கள்.
ஆகவே நம்பிக்கை என்பது நம்பத்தகுந்தது அல்ல. அது நிலையானது அல்ல. நம்புகிறேன் என்று சொல்பவனை நம்பமுடியாது. அவனது நம்பிக்கை தொடர்ந்து மாறும் .. நேரடி காட்சி என்பது எப்போதும் மாறாதது. . நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
-

No comments:

Post a Comment