Thursday, 9 February 2017

இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம்


இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம் 
-
நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு பதிவில் இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை படித்த பின் சிலர், இது மதவெறியர்கள் பேசும் கருத்து போல் அல்லவா இருக்கிறது என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.
-
நான் குறிப்பிட்ட வார்த்தைகளை படிக்கும் போது எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகிறது. எனவே இங்கே அதற்கான விளக்கம் தேவைப்படுகிறது...
-
ஒரு காலத்தில் இன்றைய விஞ்ஞானத்தை பெரும்பாலான மதவாதிகளும், மதத்தை நம்பும் பாமர மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
விஞ்ஞானிகளை இறைவனுக்கு எதிரான துரோகிகள் என்று கூறி எரித்துகொன்றார்கள்.
-
படிப்படியாக விஞ்ஞானம் ,மதத்தின் கருத்துக்களை சுக்கல்சுக்கலாக்கி, தூக்கி எறிந்துவிட்டு, மக்களின் மனத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டது.
இன்று மதங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் எல்லோரும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அப்படியானால் எல்லோரையும் விஞ்ஞான ஆதரவாளர்கள் என்று கூறலாமா. கண்டிப்பாக கூறலாம்.
-
இன்று நம்முன் உள்ள சவால் என்னவென்றால், விஞ்ஞானத்தினால் மனிதன் பல நல்ல பலனை பெற்றாலும், அதே அளவு தீய பலனையும் பெற்றுள்ளான். நல்லதை எந்த அளவு பட்டியலிடமுடியுமோ அதே அளவு தீயதையும் பட்டியலிடலாம்.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன். மனிதன் சுகமாக வாழ விஞ்ஞானம் பல தொழிற்சாலைகள் மூலம் பல பொருட்களை உருவாக்கியது. அதே தொழிற்சாலைகளே இன்று மனிதன் வாழமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவருகின்றன. ஆகவே நல்லவைகளும் கெட்டவைகளும் இந்த விஞ்ஞானத்தில் விளைவுகள்.
-
உடனே நான் விஞ்ஞானத்தை உதறி தள்ள வேண்டும் என்று கூறுவதாக நினைக்காதீர்கள். விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை ஒன்று உள்ளது. அது சமீபகாலமாக மேலும் தீவிரமாகியுள்ளது.
அது தான் மனஅமைதி.
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு மனஅமைதியை தரவில்லை. முற்காலத்தை விட மனிதர்கள் மனஅமைதியை இழந்துவருகிறார்கள். அதன்விளைவாக எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்,தற்கொலை செய்பவர்களாகவும், பைத்தியமாகவும் மாறிவருகிறார்கள்.
ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் மதத்தை விஞ்ஞானம் விழுங்கிவிட்டது. அவர்களுக்கு இப்போது விஞ்ஞானத்தால் கொடுக்க முடியாத மனஅமைதி வேண்டும். விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத தங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டும்.
-
இந்து மதம் மட்டுமே இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு சவாலாகவும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவும், அவர்களின் மனத்திற்கு அமைதியை கொடுப்பதாகவும் உள்ளது.
-
இப்போது முக்கிய கருத்திற்கு வருகிறேன். விஞ்ஞானத்தை அனைவரும் ஆதரித்தது போல, இந்து மதத்தின் கருத்துக்களை அனைவரும் ஆதாரித்தால், அவர்களை இந்துக்கள் என்று சொல்லலாமா? கண்டிப்பாக சொல்லலாம்.
இந்த கண்ணோட்டத்தில் தான், இந்துமதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி செய்வோம் என்று கூறினேன்.
-
தற்காலத்தில் மதமாற்று கும்பல் செய்வது போன்ற கருத்தில் அதை கூறவில்லை.
-
ஒரு மதத்தை விஞ்ஞானம் அழித்தது. இன்னொன்றை தீவிரவாதம் அழித்துக்கொண்டிருக்கிறது. இனி நமது வேலை மட்டுமே பாக்கியுள்ளது. பல நாடுகளில், அது ஏற்கனவே மக்களின் மனத்தை வென்றுவிட்டது. தீவிரமாக இறங்கி வேலை செய்தால் கூடிய விரைவில் அதன் பலனை காணலாம்.
-
--சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment