கேள்வி.....நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நீக்குவதற்காக உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது சரியா?
-
சுவாமி வித்யானந்தர்...
-
நமக்கு ஏற்பட்டுள்ள தீராத துன்பத்திற்கு நாம் தான் காரணம். கடவுள் காரணமல்ல. ஏற்கனவே நாம் செய்ய செயல்களின் பலனை தான் இப்போது அனுபவிக்கிறோம். இதை நிவர்த்தி செய்வது பரிகாரம்.
-
பிறருக்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்த தீமைகள் தான் , இப்போது நமது துன்பத்திற்கு காரணம் .அது இந்த பிறவியில் செய்யாவிட்டாலும், முற்பிறவிகளில் செய்திருக்கலாம். அதேபோல் நாம் சார்ந்துள்ள குடும்பத்தில் யாராவது முன்பு பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால், அதனாலும் தற்போது துன்பம் ஏற்படுகிறது.
-
இதை நிவர்த்தி செய்வதற்கு, நமது உடலை வருத்துவது எதிர்மறையான வழி, இதைவிட நேர்மறையான வழி ஒன்று உள்ளது. இந்த உடலை பயன்படுத்தி, ஏழைகளுக்கு உணவு கொடுக்கலாம், கல்வி கற்றுகொடுக்கலாம், அல்லது ஆன்மீக ஞானத்தை கொடுக்கலாம். இவ்வாறு இந்த உடல் பிறரது சேவைக்கு பயன்படுமானால் அதுவே சிறந்த பரிகாரம்.
-
இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவன் இறைவனது பிள்ளைகளான மக்களுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
No comments:
Post a Comment