Thursday, 9 February 2017

கோவில்களில் பூஜை செய்வது பரம்பரை பரம்பரையாக சிலர் செய்து வருகிறார்களே இது என்ன நியாயம்?


கேள்வி.....கோவில்களில் பூஜை செய்வது பரம்பரை பரம்பரையாக சிலர் செய்து வருகிறார்களே இது என்ன நியாயம்?
-
சுவாமி வித்யானந்தர்....
-
கோவில்கள் முதலில் யாருக்கு சொந்தம் என்பதை பார்க்க வேண்டும். அது தனிநபருக்கு சொந்தம் என்றால், அது பற்றி கேள்வி கேட்க முடியாது. ஆனால் அது அரசாங்கத்தின் சொத்து, பொது மக்களின் சொத்து என்றால் கேள்வி கேட்கலாம்
-
முற்காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை, அவர்கள் பரம்பரை தொழிலாக செய்து வந்தார்கள். இந்த தொழில்கள் காரணமாக அவர்கள் ஒரு ஜாதியாக கருதப்பட்டார்கள். இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.அதை பார்க்கவும்
-
கோவிலில் பூஜை செய்வதும் ஒரு தொழில் தான். பூஜை செய்பவர்களை பூஜாரி என்கிறோம். அவருக்கும் மாதமாதம் சம்பளம் கிடைக்கிறது. தற்போது உள்ள காலத்தில் இந்த தொழிலை. இந்த சாதியர் தான் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க முடியாது. அது இந்திய அரசில் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே கோவில்களில் பூஜை செய்வதும் இந்த சாதியினர் தான் வைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வைக்க முடியாது.
-
ஒவ்வாரு கோவிலிலும் ஒவ்வொரு மாதிரி பூஜை முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது . இதை பற்றி படிப்பதற்காக பயிற்சி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தேர்வுகள் நடத்தவேண்டும். அவர்களை பூஜாரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பது நியாயமனது தான்.
-
இப்போது முக்கியமான கேள்வி எழுகிறது. பூஜாரிகளுக்கான தகுதிகள் என்ன என்ன?
-
பூஜை செய்ய வேண்டுமானால் பூஜாரி தூய்மையாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை முறை தூயதாக இருக்க வேண்டும். அவரது உணவு தூயதாக இருக்க வேண்டும். அவர் பல விரதங்களை கடைபிடிக்க வேண்டும். மற்ற தொழில்களில் இப்படிப்பட்ட எந்த வரை முறையம் இல்லை. அது தனிமனிதனின் ஒழுக்கத்தை பற்றியதல்ல. வேலையை முடித்து வீட்டிற்கு சென்றபின் அவன் எப்படிவேண்டுமானாலும் வாழலாம். 
-
மற்ற மதங்களில் உள்ள மதகுருக்களை போன்றவர்கள் அல்ல இந்து கோவில் பூஜாரிகள். மற்ற மதத்தில் உள்ள மதகுருக்கள் சாதாரண மனிதன் பின்பற்றுவது போன்ற பழக்க வழக்கங்களையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்விலிருந்து அதிகம் வேறுபடுவதில்லை
-
ஆனால் கோவில்களின் பூஜை செய்பவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்கள் உயர்வான வாழ்க்கை வாழவேண்டும். காமம்,கோபம்,களவு, போன்ற எந்த கெட்ட பழக்கமும் இருக்ககூடாது.முக்கியமாக மாமிசம் உண்ணக்கூடாது. காய்கறி உணவில் கூட சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சாதாரணமனிதன் அனுபவிக்கும் பல இன்பங்களை தியாகம் செய்ய வேண்டும். குடித்து கும்மாளமிட முடியாது. விரும்பிய உணவை தின்னமுடியாது. பொழுது போக்குவதற்காக விடுமுறை எடுத்துவிட்டு ஊர்சுற்ற முடியாது.காலையிலும் மாலையிலும் தியானமும், ஜெபமும் செய்ய வேண்டும். பிரம்மச்சர்ய விரதம் காக்க வேண்டும். அவன் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருக்க வேண்டும். அது மட்டுமற்ற அவனது குடும்பமும் இதை பின்பற்ற வேண்டும். அவனது மனைவியும், குழந்தைகளும் இதே போல் தூயவாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இவனது உடல் கெடலாம்,மனம் கெடலாம்.
-
கோலில் பூஜை செய்பவர்கள் வாழும் தெய்வம் போல இருப்பார்கள். இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்வார்கள். தன்னைப்பற்றியோ, தனது குடும்பத்தை பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை. அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்ளவார் என்று விட்டுவிடுவார்கள். கோவிலில் இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். கோவில் உள்ள மற்ற பொருட்கள் எதையும் வீடுகளுக்கு எடுத்து செல்ல மாட்டார்கள். இறைவன் சொத்து இறைவனுக்குரியது. அதில் தனக்கு பங்கு இல்லை என்பது இவர்களுக்கு தெரியும்.குடும்பத்தை கவனிக்க வேண்டியிருப்பதால், கோவிலில் இவர்களுக்கு கொடுக்கும் மாதஊதியத்தை தவிர எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த ஊதியம் குறைவானதான இருந்தாலும், அது குறித்து இறைவனிடம் தான் முறையிடுவார்களே தவிர, கோவில் தர்மகர்தாவிடம் கேட்கமாட்டார்கள்.
-
இவையெல்லாம் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்.
-
கல்லூரியில் படித்து, பரீட்சை எழுதி வரும் பூஜாரிகளால் இந்த விதிமுறைகளை பின்பற்ற முடியுமா? முடியுமானால், கோவில் பூஜாரிகளை மக்களே தேர்வுசெய்கொள்ளலாம்.
-
கருவறைக்குள் மற்றவர்களை ஏன் அனுபதிப்பதில்லை?
-
பூஜாரிக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி பார்த்தோம். அவன் வாழும் தெய்வமாக இருப்பான்.அதே தகுதி இருப்பவர்கள் கருவறைக்குள் செல்லலாம். அது இறைவனுக்கு பிரியமானது தான்.

No comments:

Post a Comment