கேள்வி....கர்மாவை பொறுத்து மனிதனின் வாழ்நாள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
-
சுவாமி வித்யானந்தர்....
-
கர்மா என்பது நாம் முற்பிறவியில் செய்ய நல்ல,தீய செயல் மற்றும் இந்த பிறவியில் செய்ய நல்ல,தீய செயல் இரண்டும் சேர்ந்தது.
-
குழந்தை பிறக்கும் போது முற்பிறவியின் கர்மத்தோடு பிறக்கிறது. இத்தனை ஆண்டுகள் தான் இவன் உயிவோரு இருப்பான் என்று அவனுக்கு விதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதை மாற்றும் வல்லமையும் மனிதனுக்கு உண்டு.
அதே போல் பல ஆண்டு ஆயுள் இருந்தாலும் அதற்கு முன் இறப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக ,சுனாமி நேரத்தில் லட்சக்கணக்கில் மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆயுள் ஒரே நாளில் முடியும் என்று அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்காது. அதேபோல் போர் காலங்களிலும்,விபத்து காலங்களிலும் அதிகமாக இறப்பவர்களின் ஆயுள்,அவர்களுக்கு விதிக்கபட்டடிப்பதற்கு முன்பே முடிந்துவிடுகிறது.
அதேபோல் பல மகான்களின் ஆயுட்காலம் நீட்டிக்கபட்டிருப்பதை வரலாறுகளில் காணலாம். உதாரணமாக சங்கரர் சிறுவயதில் இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதி மாற்றப்பட்டு,அவருக்கு ஆயுள் கூட்டப்பட்டது.மார்க்ககண்டேயன் விதி மாற்றி எழுதப்பட்டது.
ஆகவே நமக்கு இந்தனை ஆண்டுகள் தான் ஆயுள் என்று விதிக்கப்பட்டிருந்தாலும், அதை குறைக்கவோ கூட்டவோ நம்மால் முடியும்.
-
விதி என்பது மாற்றமுடியாதது அல்ல. விதியை உருவாக்குவது நாம். அதை நம்மால் மாற்றவும் முடியும்.
-
No comments:
Post a Comment