கேள்வி...நமது நாட்டில் உள்ள துறவிகள் பற்றி சொல்லவும். காடுகளில் வாழ்பவர்கள் அல்லது மடத்தில் வாழ்பவர்கள் இவர்களில் உண்மையான துறவி யார்?
-
சுவாமி வித்யானந்தர்.....
-
முதலில் துறவு என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். தன்னை உடலோடும்,மனத்தோடும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், இந்த இரண்டையும் கடந்த நிலையில் நிற்பது துறவு. துறவுக்கு இலக்கணம் இறைவன். இறைவனாவது தான் துறவின் லட்சியம்.இன்னும் தெளிவாக சொன்னால்,நானே இறைவன் என்ற நிலையில் வாழ்வது துறவு. ஆனால் இந்த நிலையை அடையும் போது வாழ்க்கை முடிந்துவிடும். துறவு என்பது ஒரு நிலை. இந்த நிலையை அடைவதற்கான பயிற்சியில் இருப்பவர்கள் துறவிகள்.ஆனால் அவர்கள் இந்த லட்சியத்தை நோக்கி செல்கிறார்களே தவிர,அதை இன்னும் அடையவில்லை. ஏனென்றால் அந்த நிலையை அடையும் போது,அவர்களால் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு திரும்பமுடியாது. துறவு என்ற நிலையை அடையும் போது,அவர்கள் இறைவனுடன் இரண்டற கலந்துவிடுவார்கள்.
-
ஆகவே நாம் துறவிகள் என்று சொல்பவர்கள்,அந்த நிலையை அடையும் பாதையில் உள்ளவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.ஆகவே அவர்களிடம் குறைகள் இருப்பது இயல்புதான். ஏனென்றால் ஏற்கனவே குறிப்பிட்டது போல துறவு நிலையை அடைந்தவனது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அவர்கள் துறவின் உச்சியை அடையவில்லை.ஆகவே அவர்களிடம் குறை இருப்பது இயல்பு தான் . ஆனால் அவர்கள் உங்களை விட ஒருபடி மேலே இருப்பவர்கள்.
--
இந்தியாவில் நாம் இரண்டுவிதமான துறவிகளை காணலாம். சிலர் பிச்சை எடுத்து,அழுக்கு உடைகளை அணிந்துகொண்டு,மனிதர்களிடம் அதிகமாக பேசாத, உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பது போன்று வாழ்பவர்கள்.
-
இன்னொரு வகை துறவிகள், மடங்களிலே வாழ்ந்து,நன்கு உடைஅறிந்து, நன்றாக சாப்பிட்டு, மனிதர்களிடம் கலந்து பழகி,உலக வாழ்க்கையிலிலே இருப்பது போன்ற துறவிகள்
-
பொதுவாக சாதாரண மனிதர்கள், இந்த மடங்களில் சுகபோகமாக வாழும் துறவிகள் நல்வர்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். அதற்கு காரணம் முதலில் கூறிய உலகவாழ்க்கையை துறந்த துறவிகளே உண்மையான துறவிகள் என்று அவர்கள் நினைப்பது தான்.
-
துறவு என்ற உன்னதமான லட்சியத்தை அடைவற்கு இரண்டு வழிகள் உள்ளன.1.உலகத்தை துறந்து.மனிதர்களை துறந்து,அனைத்தையும் துறந்து வாழும் ”விடுதல்நிலை””.2.உலகத்தை ஏற்றுக்கொண்டு,மனிதர்களை ஏற்றுக்கொண்டு.அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழும் ”ஏற்றுக்கொள்ளும்நிலை”
-
உடல் மற்றும் மனத்தை கடந்த நிலையே ”துறவு” என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
-
”விடுதல் நிலை” என்றால் என்ன? அனைத்தையும் விட்டுவிட வேண்டும். சொந்த பந்தம், மனிதர்கள், உலக பொருட்கள், இன்னும் ஒரு படிமேலே சொன்னால் கண்ணால் காணும் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். காதால் கேட்கும் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், உணவை விட்டுவிட வேண்டும், நீரை விட்டுவிட வேண்டும், காற்றை விட்டுவிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்று நினைப்பீர்கள்? அந்த நிலையில் செல்பவர்கள் கடைசியில் இவ்வாறு அனைத்தையும் விட்டுவிடுவார்கள். அதற்காக, காற்று,ஒளி எதுவும் புகாத குகைகளிலோ,அல்லது பூமிக்குள்ளேயோ புதைந்து கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் துறவு நிலையில் வெற்றி பெறுவார்கள். அதன்பிறகு உடல் அழிந்துவிடும்.
-
படிப்பதற்கே பயங்கராமாக இருக்கிறதா? இந்த நிலையை உடனே அடைய முடியாது. படிப்படியாக பயிற்சிசெய்து கடைசியில் உடலும்,மனமும் பக்குவம் பெற்ற பின் மேலே குறிப்பிட்ட கடைசிநிலைக்கு வருகிறார்கள்.
-
முதலில் ஒரு நாளைக்கு இரு முறை பிச்சை எடுத்து உண்பார்கள்.பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை, பிறகு இரண்டு நாளுக்கு ஒரு முறை, பிறகு வாரத்திற்கு ஒரு முறை, பிறகு வெறும் நீர் மட்டும், பிறகு வெறும் காற்று மட்டும், பிறகு உணவு இல்லாமல் , என்று படிப்படியாக பயிற்சி செய்வார்கள். இதை சாதாரணமனிதர்கள் அறிவதில்லை.
-
அதேபோல் முதலில் உடை அணிந்துகொள்ளவார்கள், பிறகு உடையை துறந்துவிடுவார்கள். நான் உடல் என்ற மான உணர்வை துறப்பதற்கா தான் இவ்வாறு உடையில்லாமல் அலைகிறார்கள். அவர்கள் உடையில்லாமல் இருக்கிறார்களே வெட்கமாக இருக்காதா என்று நீங்கள் கேட்பீர்கள், வெட்கத்தை துறக்க வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.
-
படிப்படியாக மனித நடமாட்டதை குறைத்துக்கொண்டு, கடைசியில் மனிதர்களால் தொந்தரவு ஏற்படாத இடத்தை தேர்வு செய்து, கடைசியில் உடலைவிட்டுவிட்டு இறைவனில் ஒன்று கலக்கிறார்கள்.
-
இவர்கள் இந்த உலகிற்கு எந்த உபதேசமும் செய்வதில்லை, எனென்றால் அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் மனத்தின் கற்பனை, மனம் காணும் கனவு, இறைவனை அடைய முடியாமல் தடுக்கும் சுவர். இப்படிப்பட்ட துறவிகள் மனிதர்களை பார்க்வோ, பேசவோ விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரை நீங்கள் மயக்கத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு உபதேசிக்க முடியாது ஏனென்றால், அது அவர்களை மீண்டும் இந்த உலகவாழ்க்கைக்குள் இழுத்துகொண்டுவந்துவிடும். உங்களால் அவர்களை புரிந்துகொள்ள முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.அதனால் உங்களுக்கு புரியவைக்க அவர்கள் விரும்புவதில்லை.
-
இவர்களை மக்கள் பைத்தியம் என்றோ, பித்தன் என்றோ, சித்தன் என்றோ,மௌனசாமியார் என்றோ பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
-
தெரிந்தோ தெரியாமலோ, இவ்வாறு இந்த நிலையின் உயரத்தை அடைந்துகொண்டிருக்கும் போது, அந்த துறவியியை, நேரில் சந்திக்கும் ஒருவனது வாழ்க்கையும் இதேபோல் மாறிவிடுகிறது. ஆகவே மக்கள் இவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.
-
சில வேளைகளில், இந்த துறவிகள், இறைவனை கண்டபின் ,இறைவனுடன் ஒன்று கலக்காமல், சில காரணங்களால், மனிதர்களிடம் வருகிறார்கள், அப்போது மனிதர்களுக்கு உபதேசிக்கிறார்கள். இவர்களது வார்த்தை வேதம்.இவர்களது வார்த்தைகளை சீடர்கள் குறித்துகொள்கிறார்கள். அது உபநிடதம் என்று பெயர்பெறுகிறது. உபநிடதம் என்றால் குருவின் அருகில் இருந்து கேட்டது. அவர்களது உபதேசம் என்பது, அனைத்தையும் விட்டுவிடும் துறவு நிலை பற்றியதாக தான் இருக்கும்.
-
ஏ மனிதா, இந்த உலகத்தில் இன்னும் ஏன் ஒட்டிக்கொண்டிருக்கிறாய், உனது வேலையை விரைவாக முடித்துக்கொண்டு, முக்திக்காக பாடுபடு என்று இவர்கள் உபதேசிக்கிறார்கள். ஆனால் அதற்காக தன்னை போல காடு,மலை என்று அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே,இறைவனை தொடர்ந்து நினைப்பதன் மூலம்,முக்தியடைய முடியும் என்று உபதேசிக்கிறார்கள்.
--
உலகத்தை துறந்து செல்லும் துறவிகள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் கும்பமேளா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். மனிதர்களையே சந்திக்க விரும்பாத இவர்கள், அங்கே கூடுவது ஏன்? இந்த துறவிகள் சங்கமத்தை தேடி மக்கள் செல்வது ஏன்?
-
இதற்கு காரணம் இருக்கிறது. ஒரு துறவிக்கு உயர்நிலை அடைவதில், கர்மாவும் தடையாக இருக்கிறது. பாவத்தின் பலன் துன்பத்தையும், புண்ணியத்தின் பலன் இன்பத்தையும் தருகிறது. இந்த துறவிகள் துன்பப்படுவதை பற்றி கவலைப்படுவதில்லை. அதை அவர்கள் விரும்பி ஏற்ற ஒன்று,அந்த துன்பங்கள் அவர்களை இறைவனை நோக்கி கொண்டு செல்ல உதவுகின்றன். ஆனால் இன்பங்கள்? அவைகள் துறவிகளை பாதை தடுமாற வைக்கின்றன. இன்பம் மனிதனின் மனதை மயக்குகிறது. உலகத்தில் கட்டுண்டவனாக்குகிறது.ஆகவே அவர்களிம் இருக்கும் கொஞ்சம் புண்ணியத்தையும் மற்றவர்களுக்கு கொடுக்கவே கும்பமேளா நிகழ்வுக்கு வருகிறார்கள்.இவர்களை காண செல்லும் மக்கள் இவர்களது புண்ணியத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இது அங்கே செல்பவர்களுக்கும் நன்மை தருகிறது, அந்த துறவிகளுக்கும் நன்மை தருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இது நடந்துவருகிறது.

இப்படிப்பட்ட துறவிகளை மக்கள் காணும் போது அவர்களது மனத்திலும், இது என்ன வாழ்க்கை? அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அவர்களது செயலின் வேகம் குறைகிறது. வாழ்க்கையின் மீதிருந்த பற்று குறைகிறது. அப்பன் எத்தனை அப்பனோ, அன்னை எத்தனை அன்னையோ! முன்னம் எத்தனை எத்தனை பிறவிகளோ என்று சிந்திக்க ஆரம்பிக்கிறான். படிப்படியாக குடும்பவாழ்வை விட்டுவிடுவதுதான் ஒரே வழி என்று அவன் நினைக்கிறான்
-
அவ்வாறு குடும்பத்தை விட்டு விட்டு சென்ற பிறகு, தங்கள் குடும்பம் என்ன ஆனது என்று இவர்கள் நினைப்பதில்லை. துரதிர்ஷ்ட வசமாக இவர்களது குடும்பம் படிப்படியாக வறுமைநிலையை அடைந்து ஒருநாள் முற்றிலும் அழிந்துவிடும் நிலையை அடைகிறது. இதற்கு மனோரீதியாக சில காரணங்கள் உள்ளன. குடும்பத்தை விட்டுவிட்டு சென்ற பிறகு மனைவி என்ன ஆனோளோ! குழந்தை என்ன ஆனதோ என்ற எண்ணமும்,தவிப்பும் அவனது மனத்தில் வரும். அப்போது இவைகள் எல்லாம் துறக்கப்டவேண்டிய தொல்லைகள், நினைக்க தேவையில்லாத பந்தங்கள் என்று மனரீதியாக அதைமீண்டும் மீண்டும் ஒதுக்குகிறான். இவ்வாறு அவனது மனம் அவர்களை வாழ்த்துவதற்கு பதிலாக தொந்தரவாகவே நினைக்கிறது. நமது மனத்தில் பிறரை பற்றி எப்படி நினைக்கிறோமே, அவ்வாறே அவர்களும் நம்மை பற்றி நினைப்பார்கள். இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் கூட அந்த மனிதனை பற்றி எண்ணம் வரும்போது, எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டு சென்றவன் நாசமாக போகட்டும் என்றே சாபமிடுகிறார்கள். இவ்வாறு இரண்டு பக்கமும் எதிர்மறையான சிந்தனைகளால் அந்த குடும்பம் அழிவை நோக்கி செல்கிறது.
-
ஒரு காலத்தில் இந்தியாவில் இத்தகைய துறவிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள், இத்தகையை துறவிகள் வாழ்ந்த இல்லங்கள் என்னவாயிருக்கும்.ஒரு நாட்டில் அதிக அளவு மக்கள் இப்படிப்பட்ட எண்ணங்களை உடையவர்களாக இருந்தால் அந்த நாடு விரைவில் அழிவை நோக்கி செல்லும். ஒரு வீட்டிற்கு பொருந்தும் அதேவிதி தான் நாட்டிற்கும் பொருந்தும்.
-
மனிதர்களில் பெரும்பாலானோர், இந்த உலகமே வீண். அனைத்தும் தேவையற்ற வேலை, அனைத்தும் மனமயக்கம் என்ற எண்ணத்தை கொண்டிருந்தால் படிப்படியாக அந்த நாடு அழிவை தான் சந்திக்கும். அது தான் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் நடந்தது.
-
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இப்படிப்பட்ட துறவிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள், மக்களும் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டிருக்கவில்லை.
-
ஆனால், சமணமதம், மற்றும் புத்தமதம் இந்தியாவில் பிரபலமான போது, அனைத்தையும் துறந்துவிடுவது ஒன்றே முக்தியடைய வழி என்று போதிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகம் ஒரு மாயை, இது துறக்கபட வேண்டிய ஒன்று,அனைத்தும் மனமயக்கம் என்று பேச ஆரம்பித்தார்கள். படிப்படியாக இந்தியா வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. படிப்படியாக ஆழ்ந்த உறக்கத்தில் செல்ல ஆரம்பித்தது.
-
மனிதர்கள் கொஞ்சம் இன்பத்தை அனுபவிக்கட்டும், அனைத்தையும் அனுபவித்த புத்தர் துறவு பற்றி பேசலாம், பட்டினத்தார் துறவு பற்றி பேசலாம். எதையுமே அனுபவிக்காத ஏழை துறவு பற்றி ஏன் பேசவேண்டும். அவன் துறவு வாழ்க்கையை நோக்கி செல்லும் படி ஏன் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்?
-
இந்த உலக வாழ்வில் வாழுங்கள், அனைத்து இன்பங்களையும் அனுபவியுங்கள்,பேரக்குழந்தையை பார்த்த பின் இந்த உலகத்தை துறந்துவிட்டு, துறவியாக சென்றுவிடுங்கள். இது தான் பரவலாக இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நடைமுறை. இந்த நடைமுறை காரணமாக மனிதன், வளரவளர அவனது மனத்தில் எதிர்மறையான கருத்துக்களே வளர்ந்து வந்தன. அனைத்தும் மாயை, அனைத்தும் மாயை என்றே நினைத்து வாழ்ந்தான்.
-
எதிரி நாட்டினர் ,நமது நாட்டிற்குள் படையெடுத்து வருகிறார்களே என்ன செய்வது என்று கேட்டால், அனைத்தும் மாயை, நாம் ஏன் எதிர்த்து போராட வேண்டும் என்று கேட்பான். உனக்கும், உனது குடும்பத்திற்கும் உண்ணஉணவில்லாமல் அந்நியநாட்டு எதிரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்களே, என்ன செய்வது என்று கேட்டால், அனைத்தும் மாயை என்பான்.அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கிறார்களே என்ன செய்வது என்று கேட்டால்,அனைவரும் ஒரு நாள் சாகவேண்டியவர்கள் தானே சாகட்டும் என்பான். இவ்வாறு மக்கள் எல்லாம் மாயை,மாயை என்று பேசியபடியே வாழ்ந்ததால் இந்தியா 1500ஆண்டுகளுக்கு மேலாக, அந்நியரின் காலடியில் மிதிபட வேண்டியதாயிற்று.
-
ஆனால் தென்னிந்தியாவில் ஓரளவு இதற்கு மாறுபட்ட சிந்தனைகள் இருந்ததால், அது பெரிதும் பாதிக்கப்படவில்லை.

இனி அடுத்த கட்டுரையில், மடங்களில் சுகமாக வாழ்ந்துவருவதாக நீங்கள் நினைக்கும்,இன்னொரு வகை துறவிகளையும், அவர்கள் வாழ்க்கை முறையை பற்றியும் ஆராய்வோம்.
-
-
No comments:
Post a Comment