Thursday, 9 February 2017

ஆசையும் தேவையும் இல்லாத இறைவன் இந்த உலகத்தை ஏன் படைத்தார்?


கேள்வி...ஆசையும் தேவையும் இல்லாத இறைவன் இந்த உலகத்தை ஏன் படைத்தார்?
-
சுவாமி வித்யானந்தர்...
-
உங்கள் கேள்வி இறைவன் ஏன் படைப்பு நிகழ்த்தினார் என்பது. 
-
இதை வேறுவிதமாக கேட்டால்.நீங்கள் இறைவனை கேள்விகேட்கிறீர்கள். ஏன் இறைவா இந்த படைப்பை கொடுத்தாய் என்று கேட்கிறீர்கள்.
-
படைப்பின் ரகசியம் அறிந்தவர் இறைவன் மட்டுமே, அதற்கான பதிலை தரவேண்டியவரும் அவர் மட்டுமே.
இதற்கான பதில் இறைவனை நீங்கள் நேரில் சந்திக்கும்போது கிடைக்கும். அதுவரை இது மறைபொருளாகவே இருக்கும்.
-
இந்த கேள்வியை மனிதர்களால் ஏன் விளக்க முடியாது?
-
1.மனத்தை கடந்து இருப்பவர் இறைவன்.நாம் மனத்தின் உதவியால் கேள்வி கேட்கிறோம். மனத்தால் இதற்கான பதிலை பெறவிரும்புகிறோம்.
-
2.இறைவனை காணும் போதும் மனம்முற்றிலும் அழிந்துவிடுகிறது. இறைவனை பார்த்த அந்த பதிவை பதிய,அங்கு மனம் இல்லை. மீண்டும் சாதாரண நிலைக்கு வரும்போது மனம் பழையபடி வந்துவிடுகிறது. ஆனால் மனத்தில் இறைவனை பார்த்த பதிவு இல்லை. அதனால் தான் மனத்தால் இறைவனை பற்றி புரிந்துகொள்ள முடியாது.மற்றவர்களிடம் இறைவன் இப்படி இருப்பார் என்று விளக்கவும் முடியாது.
-
3. இறைவனை நேரில் பார்க்கும் போது, இந்த பிரபஞ்சமும் அதை பற்றிய பதிவுகள் உள்ள மனமும் இல்லாததால், இறைவனை காணும்போது ஏன் இறைவா பிரபஞ்சத்தை படைத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது.
-
ஆகவே உங்கள் கேள்விக்கான விடை ஒருபோதும் கிடைக்காது. ஏனென்றால் பதில் சொல்ல வேண்டிய இறைவனை காணும் போது உங்களிடம் கேள்வியே இருக்காது.
----

No comments:

Post a Comment