Thursday, 9 February 2017

வேதம் என்றால் என்ன?

கேள்வி...வேதம் என்றால் என்ன? வேதாந்தம் என்றால் என்ன?
-
சுவாமி வித்யானந்தர்....
-
எழுத்துக்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத, பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் வாழ்வை பார்ப்போம். 
-
அந்த காலத்தில் இயற்கையின் ரகசியங்களை அறிய நினைத்த ரிஷிகள், பல தவங்களை இயற்றி, இயற்கையை கடந்து, சுதந்திர நிலையை அடைந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்டது வேதம். இவ்வாறு பல காலங்களில் பல ரிஷிகளிடமிருந்து வேதம் வெளிப்பட்டது.
-
அவர்கள் கூறிய கருத்துக்களை சீட்ர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு மனப்பாடம் செய்வதன் மூலம் இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன. 
-
வேதங்களில் என்ன இருக்கும்?
-
பிரார்த்தனைகள், யாகங்கள், சடங்குகள்,அறிவுரைகள் போன்றவை. 
-
மழைபொழிய வேண்டுமா? இன்ன இன்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். இன்ன இன்ன பலன் கிடைக்க வேண்டுமா,இப்படி இப்படி யாகம் செய்ய வேண்டும். திருமணமா இந்த சடங்கை செய்ய வேண்டும்.மரணமா? இந்த சடங்கை செய்ய வேண்டும். சொர்க்கம் செல்ல வேண்டுமா? அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டுமா? பலசாலியாக வேண்டுமா? பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமா? இன்னும் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் அங்கே சொல்லப்பட்டுள்ளன
-
இவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டவைகளை,முறைப்படுத்தி வரிசைப்படுத்தினார்கள். அவைகளை ரிக்வேதம் என்று அழைத்தார்கள். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு இன்னும் பல ரிஷிகளின் வாரத்தைகளை சேர்க்க வேண்டியிருந்தது. அவைகளை தொகுத்து யஜுர் வேதம் என்றார்கள். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாமவேதம், அதன்பிறகு அதர்வணவேதம் என்று தொகுத்தார்கள்.
-
அந்த காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ,நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ,அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்த பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது.
-
அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள். இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது. வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது. வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகவில்லை. சமஸ்கிருதம் மிகவும் பிற்காலத்தில் உருவான மொழி 
-
வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் கூடவே பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. வேதங்களில் பல கருத்துக்கள் இருந்தன. ஒருவர் அவைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே தங்களுக்கு பிடித்த பகுதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு வேதங்களை பின்பற்றிய மக்கள் பல்வேறு மதபிரிவுகளை உருவாக்கினார்கள்.
-
சிலர் சொர்க்கத்திற்கு செல்வது குறித்த கருத்துக்களை ஆதரித்தார்கள். சிலர் முக்தி பற்றிய கருத்தை ஆதரித்தார்கள்.சிலர் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். சிலர் யாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களில் கூறப்படும் பல்வேறு கருத்துக்களை பற்றி விவாதிக்கிறார். இதில் வேதாந்தம் என்று சொல்லப்படும் நெறி கடைசியாக உருவானது. இது தான் தற்கால இந்துமதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதை, வேதாந்தத்தின் சிறந்த நூலாக கருதப்படுகிறது. இது வேதத்தின் பல கருத்துக்களை விளக்கிகூறுகிறது. எதையும் குறைகூறவில்லை. சொர்க்கம் செல்வதோ,மற்றஉலக இன்பமோ,மனிதனின் துன்பத்தை முற்றிலும் நீக்காது ,முக்தி என்பது தான் மனிதனின் லட்சியம் என்பதை போதிக்கிறது.
-
முக்தி என்ற லட்சியத்தை அடைவதற்காக பல்வேறு பாதைகள் உருவானது. அவைகளை பக்தி, ஞானம், கர்மம், யோகம் என்று நான்காக சுவாமி விவேகானந்தர் பிரிக்கிறார். 
-

2 comments:

  1. வேதம் எந்த மொழியால் எழுதப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. பல ஆயிரம் ஆண்டுகளாக வேதம் வாய் மூலமாகவே உபதேசிக்கப்பட்டது.வேதத்தின் மொழி வேதமொழி

      Delete